பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போகுமா

இயேசு கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்பதின் அர்த்தம் என்ன?

எபேசியர் 4:8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

எபேசியர் ஐ4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

எபேசியர் 4:10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

கேள்வி இது தான்.
1)இயேசு கிறிஸ்து எப்போது உன்னதத்திற்கு ஏறினார்?
2)இயேசு கிறிஸ்து சிறைப்பட்டவர்களை எப்படி சிறையாக்கினார்?
3)இயேசு கிறிஸ்து மனுஷர்களுக்கு எப்போது வரங்களை அளித்தார்?
4)இயேசு கிறிஸ்து எங்கே இறங்கினார்?
5) இயேசு கிறிஸ்து எதை நிரப்பினார்?

1) இயேசு கிறிஸ்து எப்போது உன்னதத்திற்கு ஏறினார்?

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக பாடுபட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து நாற்பது நாளுக்கு பிறகு உன்னதத்திற்கு ஏறினார்.

இயேசு கிறிஸ்து உன்னதத்திற்கு (பரலோகத்திற்கு) ஏறி இருக்கிறார்.
மாற்கு 16:19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.

லூக்கா 24:51 அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து உன்னத்திற்கு ஏறி என்று சொல்லும் போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிப்போனார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

2) இயேசு கிறிஸ்து சிறைப்பட்டவர்களை எப்போது சிறையாக்கினார்?

சிறைப்பட்டவர்களை சிறையாக்கி என்பதின் அர்த்தம் என்ன?
இயேசு கிறிஸ்து பரமேறி போவதற்கு முன்பதாக மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேமில் தொடங்கும் என்று கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு போதித்து இருந்தார்.

லூக்கா 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

கிறிஸ்துவின் வேலைகளில் ஒன்று சிறைப்பட்டவர்களை விடுதலையாக்க வேண்டும்.

லூக்கா 4:18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

அவர்கள் எதில் சிறைப்பட்டவர்கள்?
பாவத்தின் அடிமைத்தனத்தில் சிறைப்பட்டவர்களை அவர் விடுதலையாக்க வேண்டும்.

யோவான் 8:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

நாம் எதற்கு அடிமைகளாக ஒப்புக் கொடுக்கிறோமா அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறோம்.

ரோமர் 6:16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

கிறிஸ்து பாவத்தின் சிறையிலிருந்து மீட்டு நம்மை நீதியை செய்யும்படி நீதிக்கு சிறையாக வைத்து இருக்கிறார்.
ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

ரோமர் 6:19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

நாம் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக இருக்கிறோம்.
ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

1கொரிந்தியர் 7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.

யார் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று இருக்கிறார்களோ அவர் நீதியை செய்யும் படி நீதிக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.

ரோமர் 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

3) இயேசு கிறிஸ்து மனுஷர்களுக்கு எப்போது வரங்களை அளித்தார்?

கிறிஸ்து பரமேறி பிதாவின் வாக்குத்ததத்தின்படி பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அப்போஸ்தலர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.
அப்போஸ்தலர் 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர் 1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டார்கள்.

அப்போஸ்தலர 2:2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அப்போஸ்தலர 2:3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அப்போஸ்தலர் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

பரிசுத்த ஆவியின் வரம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு இருந்தது.

அப்போஸ்தலர 2:39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

யாரெல்லாம் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறார்களோ அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் மூலமாக பரிசுத்த ஆவியின் வரம் கொடுக்கப்பட்டது.

அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

அப்போஸ்தலர்கள் தங்கள் கைகளை விசுவாசிகள் மீது வைப்பதினால் அவர்கள் பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்றுக் கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 8:14 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

அப்போஸ்தலர் 8:16 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அப்போஸ்தலர 8:17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
அப்போஸ்தலர 8:18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

4) இயேசு கிறிஸ்து எங்கே இறங்கினார் எங்கே ஏறினார்?

இயேசு கிறிஸ்து பூமியிலிருந்து ஏறினார் என்பதினால் அவர் அதற்கு முன்னே மனுஷனாக இந்த பூமியில் இறங்கினார் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

எபேசியர் 4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

1கொரிந்தியர் 15:47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார் என்பதின் அர்த்தம் என்ன?

எபேசியர் 4:10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

உன்னதம் (பரலோகம்) என்பது எங்கே இருக்கிறது என்று இந்த வேத வாக்கியம் போதிக்கிறது?

எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதம் (பரலோகம்) இருக்கிறது.

இயேசு கிறிஸ்து ஏன் உன்னதத்திற்கு ஏறினார்?
இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்ப வேண்டும்.

இயேசு கிறிஸ்துக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பிதாவினால் அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மத்தேயு 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலர் 2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

5) இயேசு கிறிஸ்து எதை நிரப்புகிறார்?

இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் தம்முடைய சரீரமாகிய சபையிலே நிரப்புகிறார்.

எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

நாம் நற்குணத்தினாலும் சகல அறிவினாலும் நிரப்பப்பட வேண்டும்.
ரோமர் 15:14 என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்.

நாம் தேவனை அறிகிற அறிவினால் நிரப்பப்பட வேண்டும்
கொலோசெயர் 1:9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

நாம் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைய வேண்டும்.
கொலோசெயர் 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
கொலோசெயர் 1:11 சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

கிறிஸ்து தம்முடைய சபையாகிய மணவாட்டியை தம்முடைய சத்தியத்தை கொண்டு அவர் பரிசுத்தப்படுத்தி தமக்கு முன்பாக நிற்க வைக்க அதை தகுதியுள்ளதாக்குகிறார்.

எபேசியர் 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME