ஏமாறாதே ஏமாறாதே

ஏமாறாதே! ஏமாறாதே!

பிரியமானவர்களே!
நாம் எல்லோரும் சாத்தானால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் ஆதிமனிதன்- ஆதாம் தனிமையான இருப்பது நல்லதல்ல என்றெண்ணி, ஏவாளை அவன் மாம்சத்திலிருந்தே சிருஷ்டித்தார். சாத்தான் மிகுந்த மேன்மையை- ஆசை காட்டி, ஏவாளை வஞ்சித்து, ஆதாரமும் வஞ்சித்துவிட்டான். ஆதாம் வழி வந்த நாம் அனைவரும் இம்மையிலே மிகுந்த மேன்மையையும் வஞ்சித்து, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம்.
இம்மையிலே மிகுந்த மேன்மையை விரும்பாதோர் யார்?
இந்த சாத்தானின் வஞ்சனையிலிருந்து எப்படி விடுபடுவது?
விடுதலை நாயகன் இயேசு நமக்கு சாத்தானின் வஞ்சனையிலிருந்து விடுதலையைக் கொடுக்கிறவர். அவர் நமக்காக, மனிதனாய் வந்து நமது சார்பில் ஏமாற்றத்தை ஏற்றுக் கொண்டு மரித்து உயிர்த்தெழுந்து சகலவற்றுக்கும் சிருஷ்டிகராய், என்றென்றும் ஆண்டுகொண்டிருக்கிறார். அவரைப் பற்றிக் கொள்வோமேயானால், அவருடைய ஆவியைக் கொடுத்து ‘போதும்’ என்ற மனதோடு கூடிய சமாதானத்தை சந்தோசத்தைத் தருகிறார். ஏனெனில் சகலத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்துகிறதேவன் ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; கைவிடுவதுமில்லை என்று வாக்களித்திருக்கிறார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME