உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் யார்

உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் யார்?

the true worshipers. (John 4:23)
Mat15:7-9; Lk18:11-13; isa1:10-15; Isa26:8,9; Isa29:13; Isa48:1,2; Isa58;2,8-14; Isa66:1,2; jer7;7-12.

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். (யோவான் 4:23)

மத்தேயு 15:7-9; லூக்கா 18:11-13; ஏசாயா 1:10-15; ஏசாயா 26:8,9; ஏசாயா 29:13; ஏசாயா 48:1,2; ஏசாயா 58;2,8-14; ஏசாயா 66:1,2; எரேமியா 7;7-12.

உண்மையான தொழுகையாளர்கள் யார்?
இதற்கான விடையை இப்பகுதியில் வரும் நாட்களில் காணலாம்.
இங்கு True – False என்பதை குறித்து கவனிக்கலாம்.
தொழுகை செய்வதில் உண்மையாய் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.
What is True Worshipers?

– இருதயம் மற்றும் உளபூர்வமான தொழுகை மிகவும் முக்கியம். மத்தேயு 15:8.
– பாவ சிந்தை, பாவ சரீரம், பாவ கிரியைகளில்லாது பரிசுத்தத்தோடு தொழுகை செய்தல். சங்கீதம் 96:9.
– ஆவியோடும், உண்மையோடும் தொழுகை செய்தல். யோவான் 4;24.
– தேவ கட்டளைக்கு கீழ்படிந்து செய்யக்கூடிய தொழுகை. ஆதியாகமம் 22:1-18.
– தரைமட்டும் தாழ்த்தி அழுகையோடும், புலம்பலோடும் செய்யக்கூடிய தொழுகை. லூக்கா 18:13.
– மகிழ்ச்சியோடும், பாடலோடும் செய்யக்கூடிய தொழுகை. சங்கீதம் 100:4.
– சரியான முறைமைகளை பின்பற்றி செய்யப்படும் தொழுகை. 1கொரிந்தியர் 14:40. நேரம், ஒழுங்கு, முறைமைகள் முக்கியமானது. இதனை பிரமாண விதிகளுக்குட்பட்டு தொழுதல் எனலாம்.
– உணர்ச்சிமயமானதல்ல, உணர்வுபூர்வமான தொழுகை தேவை. தொழுகை ஆர்ப்பரிப்பின் விரிவாகக்ம் அல்ல, அமைதியின் வெளிப்பாடு.

இவைகளுக்கு எதிரானவைகள் யாவும் உண்மையல்லாத – false தன்மை கொண்ட தொழுகையாகும்.

உண்மை தேவனை உண்மையாகவே தொழுகை செய்ய வேண்டும்.

தவறான முறைமைகள், தவறான உபதேசங்கள், தவறான சித்தாந்தங்கள், தவறான தெய்வங்கள், தவறான புனித நூல்கள் etc போன்றவைகள் இவ்வுலகில் காணப்படுவதினால்தான் உண்மையான தொழுகையாளர்களை உருவாக்க இயேசு கிறிஸ்து வந்தார். அந்த உண்மையான தொழுகைகளை கிறிஸ்தவ குடும்பங்களும், சபைகளும் செய்ய வேண்டும்.
பட்டி தொட்டிகளிலெல்லாம், குக்கிராமங்களிலெல்லாம், காடு மலைகளிலெல்லாம் செய்யபட வேண்டும்.
அப்பொழுதுதான் பொய்ம்மை மாறி மெய்ம்மை மலரும்.

கர்த்தாவே, உண்மையான தெய்வமாகிய உம்மை உண்மையாய் தொழுகை செய்யும்படி எங்களை இரட்சித்துள்ளீர். நாங்கள் உண்மையல்லாதவைகளை ஓரங்கட்டி – ஒதுக்கிவிட்டு, உதறி தள்ளிவிட்டு உண்மையாய் தொழுகை செய்கிறவர்களுடனே சேர்ந்து உம்மை தொழுகை செய்ய எங்களுக்கு கற்று தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME