இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது

இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

Salvation is from the JEWS. Jews – who they are? (John 4:22)
Gen12:1-3; Gen21:1-3; Gen22:1-18; Gen29:35; Gen32:24-29; Ex1:1-7; 1Kin12:1-17; Jer52:27; Jer28:4; Ezra2:1,2.

நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
(யோவான் 4:22)

யூதர்கள் யார்?
ஆதியாகமம் 12:1-3; ஆதியாகமம் 21:1-3;22: ஆதியாகமம் 1-18; ஆதியாகமம் 29:35; ஆதியாகமம் 32:24-29; யாத்திராகமம் 1:1-7; 1இராஜாக்கள் 12:1-17; எரேமியா 52:27; எரேமியா 28:4; எஸ்றா 2:1,2.

இரட்சிக்கிறவர் இயேசு.
இந்த இரட்சிப்பு யூதர்கள் வழியாக வந்தது.
நம்மூலமாகவும் இந்த இரட்சிப்பு பிறருக்குள் பாய வேண்டும். இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் இந்த இரட்சிப்பு உண்டாகின்றது.

இந்த இரட்சிப்பை தேவன் யூதர்கள் வழியாக வரவைக்க காரணம் என்ன?

1. யூதர்கள் தேவனால் முன்னறியபட்டவர்கள். ரோமர் 11:2.
யூதர்களில் அவர் கண்ட விசேஷம் என்ன?
– பின்வாங்கினாலும் தண்டனை வரும்போது மனந்திரும்பி வரும் தன்மை அவர்களில் இருந்ததை கண்டார்.
– ஆபிரகாமின் விசுவாசத்தை கெட்டியாக பிடித்திருப்பதை கண்டார்.
– தங்கள் மூலமாக இரட்சிப்பு உலகிற்கு செல்ல ஏற்ற ஜனமாயிருப்பர் என்று கண்டார்.
அன்பானவர்களே!நம்மையும் அவர் முன்னறிந்து கொண்டார். ரோமர் 8:29.
எப்பொழுது? கலாத்தியர் 1:15.
நாம் தேவனால் முன்னறியபட்டவர்கள்.
நாம் பிறரை இரட்சிக்கும் பணியை செய்வோம் என்று அவர் அறிந்ததினால்தான் உன்னை இரட்சித்தார்.

2. யூதர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம். ரோமர் 11.
உலகில் எத்தனையோ ஜனமிருக்க தேவன் இவர்களை மாத்திரம் தெரிந்துகொண்டார்.
அவர்களிலே தான் இயேசு தோன்றினார். ரோமர் 9:5.
அதைபோன்று, நம்மையும் தெரிந்து கொண்டார். 1 பேதுரு 2:9.
எத்தனையோ பேர் நம் இனத்தில் இருக்க நம்மை மாத்திரம் தெரிந்து கொண்டார்.
நம்மிலிருந்து இயேசு தோன்ற வேண்டும் என்பதற்காக. கலாத்தியர் 4:19.
நம்மேல் எவரும் குற்றம் சாட்ட முடியாது. ரோமர் 8;33.

3. யூதர்கள் தேவனால் நிலை நிறுத்தப்பட்டவர்கள். எங்கே?
கானான் தேசத்திலே அவர்களை நிலை நிறுத்தி இஸ்ராயேல் தேசமாக்கி கொண்டார். அந்த தேசத்தை உலகில் ஒருவராலும் ஜெயிக்க முடியாது.
ஏனெனில், அது தேவனோடும், மனிதனோடும் போராடி ஜெயித்த நாமம் கொண்ட நாடு. அங்கே இயேசு தோன்றினார். மத்தேயு 2:6.
அதைபோன்று, நாமும் தேவனால் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளோம்.
இந்த சபை ஒருவராலும் ஜெயிக்கபடாத முறையில் தேவன் வாக்கு செய்துள்ளார். மத்தேயு 16:18.
நம்மிலிருந்து இரட்சிப்பாகிய ஒளி சுற்றிலும் பரவவே நம்மை தோற்கடிக்கபடவியலாத கோட்டைக்குள் வைத்துள்ளார்.

4. யூதர்கள் தேவனால் ஆசீர்வதிக்கபட்டவர்கள். எண்ணாகமம் 22:12; எண்ணாகமம் 23:23.
எப்படி? இவர்கள் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை சுமந்து வருகிறவர்கள். ஆதியாகமம் 12:1-3.
இவர்கள் மூலமே உலகம் ஆசீர்வாதம் பெறும்.
அவர்களுக்கு ஆபத்து என்றால் உலகிற்கும் ஆபத்துதான். இவர்கள் மூலமே உலகம்நன்மையடைகிறது.
அதுபோல, நாம் ஆசீர்வதிக்கபட்ட இயேசுவால் மீட்கபட்டுள்ளோம்.
நாம் ஆசீர்வதிக்கபட்டவர்கள்.
ஆபிரகாமின் ஆசீர்வாதமும் நமக்கு உண்டு. கலாத்தியர் 3:9,13,14.
சபையின் மூலமே ஆசீர்வாதம் நாம் வாழும் பகுதியிலுள்ளவர்களுக்கு கிடைக்கும்.
சபையில்லையெனில் இவ்வுலகம் ஆசீர்வதிக்கபடாது, அகன்று போகும்.
சபையின் எழுச்சியே ஜனங்களின் வளர்ச்சி.

ஜெபம்:பரலோக தந்தையே, உம் குமாரனின் மூலம் எங்களை மீட்டு உம் பிள்ளைகளாக்கி எங்களை ஆசீர்வதிக்கபட்ட ஜனமாக்கியுள்ளீர். எங்களை மிகவும் விருத்தியடைய செய்துள்ளீர். நாங்கள் வளர்ந்து உமக்கு கீழ்படியாமல் போகாதபடிக்கு நாங்கள் எங்களை சார்ந்தவர்களை இரட்சிப்புக்குள் வழிநடத்தி அவர்களை உம் ஆசீர்வாதங்களின் பிள்ளைகளாக்க எங்களுக்கு உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME