அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
As He spoke these words, many believed in Him. (John 8:30)
Jn2:23; Jn6:14; Jn7:31; Jn10:42; Jn11:45; Jn20:3; Act8:13; Col1:22,23; Ps106:12; Ps119:41-48.
இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 8:30)
யோவான் 2:23; யோவான் 6:14; யோவான் 7:31; யோவான் 10:42; யோவான் 11:45; யோவான் 20:3; அப்போஸ்தலர் 8:13; கொலோசெயர் 1:22,23; சங்கீதம் 106:12; சங்கீதம் 119:41-48.
சொல்லுகையில் விசுவாசம் வைத்தனர்:
இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டபோது பலர் பலவிதமாக நடந்துகொண்டனர். அனேகர் அவரின் பிரசங்கத்தைக் கேட்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள். இயேசுகிறிஸ்து கூறிய செய்தியானது இயேசுவில் விசுவாசம் வைப்பதற்கானது. இயேசு பரலோகத்திலிருந்து வந்தவர். பரலோக தேவனால் அனுப்பப்பட்டவர். பரலோக ராஜ்ஜியத்தின் செய்தியையே அறிவித்தார்.
மோசேயை ஜனங்கள் நம்புவதற்காக தேவனுடைய பிரமாணங்களையும், அற்புத அடையாளங்களையும் தேவன் மோசேக்கு கொடுத்திருந்தார்.
இயேசுவை நம்புவதற்கு தேவனுடைய செய்தியையும், அற்புத அடையாளங்களையும் இயேசுவுக்கு தேவன் கொடுத்திருந்தார்.
ஆனால் இயேசுவை நம்ப வேண்டும் என்று பிதா இவைகளை அவரிடம் கொடுக்காமல் இவரே மேசியா என்பதை வெளிபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக செய்தியையும், கிரியைகளையும் கொடுத்திருந்தார். இவைகளை முன் தீர்க்கதரிசனங்களோடு இணைத்து பார்த்தவர்கள் அவரை விசுவாசித்து இவரே மேசியா என்று ஏற்றுக்கொண்டனர்.
இயேசுவின் பிரசங்கம் இயேசுவின்மேல் விசுவாசம் உண்டாவதற்கு காரணமாயிருந்ததுபோல ஊழியர்களின் பிரசங்கமானது அவர்கள்மேல் முதலாவது நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். ஊழியன் நம்பிக்கைக்குரியவனாக இராவிட்டால் பிரசங்கிக்கும் வாக்கியங்கள் நிலை நிற்க முடியாது.
விசுவாசம் கேல்வியினாலே வரும்
அனுப்பப்படுகிறவனால் பிரசங்கிக்கப்படுகிறது.
பிரசங்கிக்கிறவனால் விசுவாசம் கேட்கிறவர்களின் உள்ளங்களில் உருவாகின்றது.
இந்த விசுவாசமே இரட்சிப்பை உண்டாக்குகின்றது.
நாம் பிரசங்கிக்கும் வார்த்தைகள் பிறரில் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதையும் தன்னை ஒரு நம்பிக்கைக்கு உரியவர் என்பதையும் உருவாக்க வேண்டும்.
கர்த்தாவே உம் குமாரனின் வார்த்தைகளைக் கொண்டு உம்மையும், உம் குமாரனையும் நம்பும்படி செய்ததற்காய் நன்றி.