என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், என்னைத் தனியே இருக்க விடவில்லை

என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், என்னைத் தனியே இருக்க விடவில்லை.

 He who sent Me is with Me. The Father has not left Me alone. (John 8:29)

 Jn8:16; Jn14:10,11; Jn16:32; Mt3:17; Lk2:49; 2Tim4:17,22; Isa42:1,6; Isa49:4-8; Isa50:4-9.

என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.  (யோவான் 8:29)

யோவான்  8:16; யோவான் 14:10,11; யோவான் 16:32; மத்தேயு 3:17; லூக்கா 2:49; 2தீமோத்தேயு 4:17,22; ஏசாயா 42:1,6; ஏசாயா 49:4-8; ஏசாயா 50:4-9.

நான் தனியே இல்லை:
  ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் என்று நிக்கோதேமு கூறினான். இயேசுவோடு பிதா இருந்தார் என்பதற்கான உண்மையான சாட்சியங்கள் அற்புத கிரியைகளே. அதைவிடவும் மேலான இறையியல் உண்மை யோவான் 1:1-3 ல் காணப்படுகிறது. இயேசுகிறிஸ்து பிதாவோடு இருந்ததினால் இப்பொழுது பிதா இயேசுவோடு இருக்கின்றார். இயேசு பிதாவின் மடியிலே செல்லபிள்ளையாய் இருந்ததினால்தான் இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சொன்னது மட்டுமல்லாது பேசவேண்டியதையும், செய்ய வேண்டியதையும் ஒவ்வொருநாளும் கற்றுகொடுத்தார். பிதா தன்னைவிட்டு விலகினாலும் (மத்தேயு 27:46) இயேசு பிதாவை விட்டு விலகாதவராகவே இருந்து தன் ஜீவனை அவரிடமே கொடுத்தாால். (லூக்கா 23:46). மரணம் மட்டுமே இருவரையும் பிரித்தது. இந்த பிரிவை தாங்காத தேவன் தம் மகனை மூன்றாம் நாளிலே உயிரோடு எழுப்பி தம் அருகிலேயே வைத்திருக்கின்றார்.

  அன்பான தேவமக்களே உமக்கும் தேவனுக்கும் உள்ள உண்மை உறவில் சொந்தபந்தங்கள், பணம், புகழ், படிப்பு, அந்தஸ்து, கவுரவம், பாவம், குற்றங்கள், பிழைகள் போன்றவை உள்ளனவா. இருந்தால் இன்றே அவைகளை உடைத்தெறிந்து விடு. நீ என்றென்றும் அவருடன் இருக்கதக்கதாய் உன்னை உன் மரணத்துக்கு அப்புறம் உயிரோடு எழுப்ப வேண்டுமானால் இன்றே அவைகளை களைந்து விடு.

   உன்னோடு வராத எதையும் உன்னோடு வைத்திருக்க ஆசைபடாதே. அது உன்னை நீ போய் சேரும் இடத்துக்கு போகவிடாமல் தடுக்கும் தடையாகும்.
அவர் உன் கூட இருப்பார் என்று சொன்னதை மறவாதே. கூட இருப்பேன் என்ற மனைவி, புருஷன் விட்டுட்டு போயிடுவாங்க. இவரோ உன்னை கைவிடார். மறவாது பிடித்துகொள். இறவாது வாழ்வாய்.

   கர்த்தாவே உம் குமாரனோடு இருந்து கிரியை நடப்பித்ததுபோல என்னோடும் இருந்து கிரியை நடப்பிக்க விரும்புவதினால் நான் உம்மைவிட்டு விலகேன் என்று சாட்சி பகருகின்றேன்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME