நீங்கள் அறியாததைத் தொழுகிறீர்கள், நாங்கள் அறிந்ததைத் தொழுகிறோம்.
You worship what you do not know; we know what we worship. (John 4:22a)
2Ki17:27-29,41; 2Chr13:10-12; Ps147:19,20; Ezr4:2; Act17:23,30; Rom3:2;9:5; Eph2:12.
நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
(யோவான் 4:22)
2 இராஜாக்கள் 17:27-29,41; 2நாளாகமம் 13:10-12; சங்கீதம் 147:19,20; எஸ்றா 4:2; அப்போஸ்தலர் 17:23,30; ரோமர் 3:2; ரோமர் 9:5; எபேசியர் 2:12.
அறியாததும், அறிந்ததும்:
1. அறியாததை தொழுகை செய்தல்.
– உண்மை எது என்று தெரியாமல் உண்மையல்லாததை தொழுதல்.
– யாரென்று அறியாமல் தொழுகை செய்தல்.
– சரியான வெளிப்பாடு இல்லாமல், தெய்வ தூண்டுதல் இல்லாமல் தொழுகை செய்தல்.
– சரியான ஒழுங்கு முறைகளை பின்பற்றாது தொழுகை செய்தல்.
– கடமைக்காகவும், பாரம்பரியம் என்று அதை பிடித்து கொள்வதற்காகவும் தொழுதல்.
2. அறிந்ததை தொழுதல்:
– நியாயபிரமாண விதிகளுக்கு உட்பட்டு தொழுகை செய்தல்.
– ஆவியோடும், உண்மையோடும் தொழுகை செய்தல்.
– உண்மையென்று அறிந்ததை உணர்வு பூர்வமாக தொழுகை செய்தல்.
– அறிந்ததை அடக்கி வைப்பதே மிகப்பெரிய பாவம்.
– இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்தபின்பு நான் இன்னும் அறியவில்லை என்று சாக்குபோக்கு சொல்வது பாவமாகும்.
சமாரியர்களின் பிரிவினை மனோபாவமே இன்றைக்குள்ள பற்பலவிதமான சபை பாகுபாடுகள்.
பிதாவாகிய தேவனை ஒரு வழி நின்று தொழுகை செய்யக்கூடிய மனோபலம் கிறிஸ்தவர்களிடையே இல்லாமல் போனது பெரும் ஏமாற்றமே.
அறியாததை விட்டுவிட்டு, அறிந்ததை தொழுகை செய்வதினால்.
1. அவர் சமீபமாயிருப்பார். உபாகமம் 4:7.
2. விண்ணப்பம் கேட்கபடும். எரேமியா 29:12.
3. இரட்சிப்பு உண்டாகும். அப்போஸ்தலர் 2:21.
4. ஆசீர்வதிக்கபடுகிறோம். ரோமர் 10:12.
5. உரிமைபங்கின் பலன் பெறுவோம். கொலோசெயர் 3:23.
கர்த்தாவே, உம்மை இன்னார் என்று எங்களுக்கு அறிவித்து எங்களுக்குள் விசுவாசத்தை தந்து உம்மை தொழுது கொள்ள வைத்தீர். இனி நாங்கள் எப்பொழுதும் உம்மை துதித்து போற்றி மகிமைபடுத்தி வாழ எங்களுக்கு உதவி செய்யும்.