கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.
Ask and it shall be given to you.
Mt5:42; Mt7:8f; Mt14:7; Mt20:22; Mt21:22; Mk4:24; Lk6:30; Lk8:18; Jn6:45; Jn14:13,14; Jn15:7,18; Jn16:23,24,26; 1Jn5:14,15.
மத்தேயு 5:42; மத்தேயு 7:8f; மத்தேயு 14:7; மத்தேயு 20:22; மத்தேயு 21:22; மாற்கு 4:24; லூக்கா 6:30; லூக்கா 8:18; யோவான் 6:45; யோவான் 14:13,14; யோவான் 15:7,18; யோவான் 16:23,24,26; 1 யோவான் 5:14,15.
எனக்கு தரவேண்டும் பகுதி – 2.
சமாரியா பெண், தனக்கு தண்ணீர் தர வேண்டும் என்று ஏன் கேட்டாள்?
– எனக்கு தாகமுண்டாமலிருக்க,
– நான் இங்கே வந்து மொண்டு கொள்ளாமலிருக்க.
இவளுடைய எண்ணம் – விருப்பம் நல்லதுதானே என்று சிந்திக்க தோன்றுகின்றது. ஆனால், அதில் ஏதோ சூட்சுமம் இருப்பதுபோல் தேன்றுகின்றது. ‘எனது பாவ வாழ்க்கையினிமித்தமாய் நான் அவமானபடுத்தபடாதபடிக்கு என் வீட்டிலே தரித்திருக்க விரும்புகிறேன்’ என்ற நோக்கமாயிருக்கலாம்.
தேவனிடம் கேட்பதற்கு தேவனுடைய பிள்ளைகளுக்கும், அல்லாதோருக்கும் வித்தியாசம் உண்டு. தேவனுடைய பிள்ளைகள் இயல்பாகவே தேவனிடம் நெருங்கி கேட்கின்றனர். அல்லாதோரோ அவரிடம் நெருங்காமல் காரியம் ஆகும்படி கடமைக்காக கேட்கின்றனர்.
தேவனுடைய பிள்ளைகள் 3 முறைகளில் தேவனிடம் கேட்ககூடிய வாய்ப்பு உண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது.
– தகப்பன், பிள்ளை உறவு அடிப்படையில் கேட்டல். உரிமையின் அடிப்படையில் அல்ல, கீழ்படிதலின் நிலைபாட்டில் நின்று கேட்டல்.
– எஜமான், அடிமை உறவு அடிப்படையில் கேட்டல். தாழ்மை, பணிவு, அடக்கம் போன்ற எளிய பண்புகளின் அடிப்படையிலானது. duty அடிப்படையிலானதல்ல.
– இரு நண்பர்கள் அடிப்படையில் கேட்டல். இதுவும் உரிமையின் அடிப்படையிலானதல்ல, உறவுகளின் அடிப்படையில் கேட்டல்.
இந்த மூன்று முறையில் ஏதாவது ஒரு முறையை நாம் பின்பற்றலாம்.
இயேசுவின் இரத்தத்தினால் மீட்கபட்ட நாம் அவரின் சுதந்தரவாளிகள் தான், உரிமைக்கரார்கள் தான். ஆனால், எந்த சுதந்தரவாளியும் தன் உரிமையை கேட்டு பெறுவதில்லை. ஏற்றகாலம் வரும்போது கேளாமலே உரிமையடைகின்றோம்.
உரிமைகாரருக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் காலம் தாழ்த்தும்போதோ, ஏமாற்றி வஞ்சிக்கும்போதோ உரிமை கோரலாம். நம் தேவன் அப்படிபட்டவரல்ல.
கெட்டகுமாரனைபோல காலம் வருமுன்பு அடம்பிடித்து உரிமை பெற நினைப்பது – முயற்சிப்பது விவிலிய ஒழுங்கு அல்ல. அவர் நாம் கேட்கும் எல்லாவற்றையும் அவரின் விருப்பகாலத்தில்தான் செய்வார். நாம் பொறுமையாயிருக்க வேண்டும். பொறுமை வறுமைக்கானதல்ல, பொறுமை வளமைக்கானது.
– எழுச்சிக்கானது
– உயர்வுக்கானது.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு கற்று கொடுத்துள்ள விவிலிய ஒழுங்கில் நடந்து கொள்ளாமல் யாரோ புது வழிகாட்டிகளின் நய ஆலோசனைகளை நல்லதென்று நினைத்து நலமல்லாத வழியிலே நடந்து வருத்தம், வேதனை, துன்பங்களை, வியாதிகளை அனுபவிக்கின்றோம். எங்களை மன்னியும். இனி நாங்கள் உம் ஒழுங்கின்படியே உம்மிடம் வரவும், செம்மையாய் நடந்து கொள்ளவும் உமது நல்ல ஆவியை எங்கள் உள்ளத்தில் வைத்து எங்களை நடத்தும்.