ஆவிக்குரிய சபை அல்லது ஆவிக்குரிய தொழுது கொள்ளுதல் என்றால் என்ன அர்த்தம்

ஆவிக்குரிய சபை அல்லது ஆவிக்குரிய தொழுது கொள்ளுதல் என்றால் என்ன அர்த்தம்?

ஒன்றான மெய் சபையிலே பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதலை குறித்து அநேக சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைக்கு அநேகர் நீங்கள் ஆவிக்குரிய சபையை சேர்ந்தவரா என்று கேட்கிறார்கள்.

ஆவிக்குரிய சபை என்று இவர்கள் எதை அழைக்கிறார்கள்?

1) அந்நிய பாஷைகளை பேசுகிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசுதல்.

2) கைகளை தட்டிக் கொண்டு இசையோடு நடனமாடி பாடுதல்.

3) உரத்த சத்தமாய்  கைகளை உயர்த்தி ஜெபம் பண்ணுதல்.

4) இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை அல்லேலுயா சொல்லுதல்.

5) சொந்த சாட்சிகளை உணர்ச்சியோடு பேசுதல்.

  • இப்படி ஒரு சபை இருக்கும் என்றால் இதை தான் ஆவிக்குரிய சபை என்று அழைக்கிறார்கள்.

இது தான் ஆவிக்குரிய சபை என்று புதிய ஏற்பாட்டில் எந்த வேத வாக்கியம் போதிக்கிறது?

புதிய ஏற்பாட்டு வேத வாக்கியத்தின்படி எது ஆவிக்குரிய சபையாக ஆவிக்குரிய தொழுது கொள்ளுதலாக இருக்கிறது?

வாரத்தின் முதல்நாளிலே நாம் செய்ய வேண்டிய கட்டளை இரண்டு இருக்கிறது.

கர்த்தருடைய பந்தி (இராபோஜன பந்தி)

Act 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.

Act 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

தேவனுக்காக காணிக்கை கொடுப்பது.

1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

இதோடு மாத்திரம் அல்ல நாம் எப்போது எல்லாம் சபையாக கூடி வருகிறோமோ அப்போது எல்லாம் தேவனுடைய சகல கட்டளைகளை கற்றுக் கொள்ளவேண்டும்?

Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். 

தேவனுடைய சகல கட்டளைகளையும் நாம் கைக்கொள்ள வேண்டும்.

Jam 1:22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

Jam 1:23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;

Jam 1:24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.

Jam 1:25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

நாம் தேவனுடைய சகல கட்டளைகளையும் பின்பற்றுவதின் நோக்கம் என்ன?

கிறிஸ்துவைப் போல பூரணராகதேறின புருஷராக இருக்க வேண்டும்.

Eph 4:11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,

நாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பாக வளரவேண்டும் என்பதற்காக தான் தேவன் சகல ஊழியங்களையும் கொடுத்து இருக்கிறார்.

Eph 4:12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

நாம் இயேசு கிறிஸ்துவைப்போல பூரண புருஷராக வேண்டும் என்பதற்காக தான் தேவன் வேதவாக்கியங்களை கொடுத்து இருக்கிறார்.

2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

நாம் பூரண புருஷராகும் போது எப்படி இருப்போம்?

கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக நாம் வளர்ந்து இருப்போம்

1Co 13:4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

1Co 13:5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

1Co 13:6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

1Co 13:7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

  • நாம் அன்பில் பூரணப்படும் போது அன்பின் பாகங்கள் எல்லாம் நமக்குள்ளே இருக்கும்.

நாம் கிறிஸ்துவைப்போல பூரண புருஷராகும் பூரண அன்பு நமக்கு இருக்கும் போது நாம் பாவம்செய்ய மாட்டோம்.

1Jo 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

1Jo 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.

1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

1Jo 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

நாம் பூரண புருஷராகும் போது ஆவிக்குரிய ஒட்டத்தை முடிக்கிறோம் அப்போது தான் தேவன் நமக்கு  நீதியின் கிரீடத்தை தருவார்.

2Ti 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

2Ti 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

கிறிஸ்துவைப்போல பூரண புருஷராக இல்லாதபட்சத்தில் நமக்கு பரலோகமும் இல்லை பரலோகத்துக்கான பலன்களும் இல்லை.

இப்படிப்பட்ட உபதேசங்களை போதிக்கிற சபை தான் ஆவிக்குரிய சபையாகவும் ஆவிக்குரிய தொழுது கொள்ளுதலாகவும் இருக்கிறது.

நீங்கள் வேத வாக்கியத்தின்படி ஒன்றான மெய் சபையிலே இருக்கிறீர்களா? பிதாவை வேத வாக்கியத்தின்படி ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளுகிறீர்களா?

ADD YOUR COMMENT

Powered By Indic IME