நான் நியாயந்தீர்த்தால் என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்

நான் நியாயந்தீர்த்தால் என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்.

And yet if I do judge, My judgment is true; (Jn8:16a)

Jn5:22-30; Act17:31; Rev19:11; 1Sam16:7; Ps45:6,7; Ps72:1,2; Ps98:9; Ps99:4; Isa9:7; Isa11:2-5; Isa32:1.2; Jer23:5,6; Zec9:9.

நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும், ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். (யோவான் 8:16) 

யோவான் 5:22-30; அப்போஸ்தலர் 17:31; வெளி19:11; 1 சமுவேல்1 6:7; சங்கீதம் 45:6,7; சங்கீதம் 72:1,2; சங்கீதம் 98:9; சங்கீதம் 99:4; ஏசாயா 9:7; ஏசாயா 11:2-5; ஏசாயா 32:1,2; எரேமியா 23:5,6; சகரியா 9:9.

என் தீர்ப்பு சத்தியமானது:
   நான் நியாயந்தீர்ப்பதில்லை. என் பிதாவே நியாயந்தீர்க்கின்றார். நான் நியாயந்தீர்த்தால் அது சத்தியத்தின்படியிருக்கும். அப்படியென்றால் பிதாவின் தீர்ப்பு சத்தியத்தின்படியானதல்ல, தன்னுடைய தீர்ப்பே சத்தியத்தின்படியானது என்று கூறுவதாக பொருளல்ல. என்பிதா சத்தியத்தின்படியும், நீதியின்படியும் நியாயந்தீர்ப்பதுபோல நான் நியாயந்தீர்க்கும் வேளை வரும் போது அது சத்தியத்தின்படியும், நீதியின்படியும் இருக்கும் என்கிறார்.
இயேசுகிறிஸ்துவில் கிருபையும் சத்தியமும் உண்டாயின என்று யோவான்1:17 கூறுகின்றது.
   இயேசுகிறிஸ்துவே சத்தியமாயிருக்கிறார் என்று கூறுகின்றார். யோவான் 14:6.
   இந்த சத்தியத்தை அறிந்தால் விடுதலையுண்டு என்றும் கூறுகின்றார். யோவான் 8:32.
இயேசுகிறிஸ்துவில் சத்தியத்தை விளங்கபண்ணியிருப்பதினால் அவர் பேசினால் சத்தியம். அவர் செய்தால் சத்தியம், அவர் கொடுக்கும் தீர்ப்பும் சத்தியமாயிருக்கும்.
இயேசுகிறிஸ்துவை குறித்து முகதாட்சண்யமில்லாதவராய் சத்தியத்தை விளம்புகிறவர் என்று சாட்சி கொடுத்தார்கள் மாற்கு 12:14; லூக்கா 20:21.

   ஏசாயா 11:4 ல் இயேசுகிறிஸ்துவின் தீர்ப்பு யதார்த்தத்தின்படியிருக்கும் என்று கூறுகின்றார்.
இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகை சத்தியத்தை வெளிபடுத்தியதாகும். வெளிபடுத்தப்பட்ட சத்தியத்தோடு கிருபையும் (சங்கீதம 85:10) இணைந்திருந்ததினால் அது மீட்பாக பரிணமித்தது.
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிருபை நீக்கப்பட்டு கிரியை காணப்படும் என்பதினால் அவரின் தீர்ப்பு சத்தியத்தின்படி இருந்து நீதியுள்ள தீர்ப்பாக வெளிப்படும்.

  இன்று அவரையும், அவரது சபையையும், அவரது ஊழியக்காரர்களையும், விசுவாசிகளையும் அவமானபடுத்தி, உபத்திரவபடுத்தி துன்புறுத்துகின்றவர்களுக்குரிய சத்தியத்தின்படியான தீர்ப்பை கொண்டு வரப்போகின்றார். ஒருவரும் தப்பவியலாது.

   அவருடைய தீர்ப்புக்கு காத்திராதே. அது நீதியை உன்னிடம் கேட்கும். அவருடைய கிருபைக்கு காத்திரு அது விசுவாசத்தை மட்டுமே உன்னிடம் கேட்கும்.

  கர்த்தாவே உம் தீர்ப்பைபோலவே உம் குமாரனின் தீர்ப்பும் சத்தியமாயுள்ளது. நாங்களும் அதன்படி தீர்ப்பிடும்படியாய் எங்களை சத்தியத்திலே நடத்துவீராக.

ADD YOUR COMMENT

Powered By Indic IME