ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்

ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

நாம் தேவனுடைய வீட்டில் பிள்ளைகளாகவும் தேவன் பிதாவாகவும் இயேசு கிறிஸ்து மூத்த குமாரனாகவும்  இருக்கிறார் என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

நாம் ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

இஸ்ரவேல் ஜனங்கள் பழைய ஏற்பாட்டில் ஒலிவ மரங்களாக பேசப்பட்டு இருக்கிறார்கள்.

Jer 11:16 நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

Psa 52:8 நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

முதற்பலனாகிய மாவு யார்?

Rom 11:16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

இஸ்ரவேல் முதற்பலனாகிய மாவாய் இருக்கிறார்கள்.

Jer 2:3 இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது;

Rom 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

கிறிஸ்து மரித்தோரிலிருந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவர்.

1Co 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

1Co 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து,

ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்கள்.

1Co 16:15 சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.

Jas 1:18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

Rev 14:4 ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

  • ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதல் முதலாக தேவனுடைய சத்தியத்தை கேட்டு ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்டதினாலே அவர்கள் முதற்பலன்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

கிறிஸ்து ஒலிவமரமாகவும் அதன் வேராகவும் இருக்கக் கூடும்.

Rev 5:5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

சில கிளைகள் என்பது யூதர்களை குறிக்கிறது.

Rom 11:17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, 

அந்த யூதர்கள் ஏன் முறித்துப் போடப்பட்டார்கள்?

Rom 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, 

  • யூதர்கள் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

சில யூதர்கள் அவிசுவாசிகளாக இருந்தார்கள்.

Act 19:9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான்.

Rom 15:31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,

ஒட்டவைக்கப்பட்ட காட்டொலிவ மரம் யார்?

காட்டொலிவ மரம் என்பது புறஜாதிகளை குறிக்கிறது, புறஜாதிகளாகிய நாம் அந்த இடத்திலே ஒட்டவைக்கப்பட்டு இருக்கிறோம்.

Rom 11:17 காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

புறஜாதிகள் கிறிஸ்துவுக்குள்அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாய் இருக்கிறோம்.

Eph 3:3 அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.

விழுந்து போன கிளைகளுக்கு விரோதமாக நாம் பெருமை பாராட்டக்கூடாது.

Rom 11:18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.

நாம் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது.

Rom 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.

யூதர்கள் ஏன் முறித்துப் போடப்பட்டார்கள்?

அவர்களுடைய அவிசுவாசத்தினாலே முறித்துப் போடப்பட்டார்கள்.

Rom 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன.

நாம் விசுவாசத்தினாலே ஒலிவமரத்தில் ஒட்டவைக்கப்பட்டு இருக்கிறோம் ஆகையால் நாம் மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திருக்கவேண்டும்.

Rom 11:20  நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Rom 11:21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.

தேவன் யூதர்களிடத்தில் கண்டிப்பையும் நம்மிடத்தில் தயவையும் காண்பித்து இருக்கிறார்.

Rom 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.

  • நாம் தேவனுடைய தயவிலே நிலைத்திராவிட்டால் நாம் வெட்டுண்டு போவோம்.

யூதர்கள் கர்த்தரிடத்தில் திரும்பும் போது தேவன் அவர்களை மறுபடியும் ஒட்டவைக்க வல்லவராய் இருக்கிறார்.

Rom 11:23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே.

2Co 3:13 மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.

2Co 3:14 அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

2Co 3:15 மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.

2Co 3:16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.

தேவனிடத்தில் மனந்திரும்பினால் சுபாவக்கிளைகள்(யூதர்கள்) தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்ட வைக்கப்படுவது அதிக நிச்சயம்.

Rom 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

ஒலிவமரத்தில் ஒட்டவைக்கப்பட்ட காட்டொலிவமரமாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?

  • ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்களாயிருக்கிறோம்.
  • வேர்நம்மை சுமக்கிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
  • நாம் விசுவாசத்தினாலே நிற்கிறோம்.
  • நாம் முறித்துப் போடப்பட்ட கிளைகளுக்கு விரோதமாக மேன்மை பாராட்டக்கூடாது.
  • மேட்டிமையான சிந்தையாயிராமல் பயந்திருக்க வேண்டும்.
  • தேவன் நம்மிடத்தில்  தயவை காண்பித்து இருக்கிறார்; அந்தத் தயவிலே நிலைத்து இருப்போமானால் நமக்கு தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நாமும் வெட்டுண்டுபோவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME