நாம் தேவனுடைய வீட்டில் பிள்ளைகளாய் இருக்கிறோமா?
ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடாக இருக்கிறது என்றும் இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் அந்த வீட்டில் என்னவாக இருக்கிறார்கள் என்றும் பார்த்து இருக்கிறோம்.
இப்போது நாம் அந்த தேவனுடைய வீட்டில் என்னவாக இருக்கிறோம் என்பதை பார்ப்போம்.
நாம் தேவனுடைய வீட்டில் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.
1Jo3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.
1Jo 3:2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்.
Rom 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
தேவனுடைய வீட்டில் இயேசு கிறிஸ்து நம்முடைய மூத்த சகோதரராக இருக்கிறார்
Heb 2:11 எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
Heb 2:12 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
Heb 2:13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறபடியால் தேவனை பிதாவே பிதாவே என்று கூப்பிடக்கூடியபுத்திர சுவிகார ஆவியைப் பெற்று இருக்கிறோம்.
Gal 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தாலும் தேவனுக்கு அடிமைகளாய் தான் இருக்கிறோம்.
1Pe 2:16 சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தாலும் கிறிஸ்துவுக்கு அடிமைகளாய் தான் இருக்கிறோம்.
1Co 7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
நாம் தேவனுக்கு அடிமையாக இருப்பதினால் என்ன நமக்கு கிடைக்கும்?
Rom 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
- நாம் தேவனுக்கு அடிமைகளாக இருக்கும் போது நமக்கு கிடைக்கும் பலன் பரிசுத்தமாகுதல்.
- நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கும் போது அதின் முடிவு நித்தியஜீவன்.
- இன்றைக்கு அநேகர் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக இருப்பதற்கு விரும்புவது இல்லை.
தேவனுடைய பிள்ளைகள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு நீதிக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
Rom 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
நாம் ஏன் தேவனுக்கு அடிமையாக இருக்கிறோம்?
ஏனென்றால் அடிமையானவன் எஜமான் சொல்லக் கூடிய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவான்.
Eph 6:5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;
Eph 6:6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
Col 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
- வேலைக்காரர் என்று தமிழில் மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். ஆனால் கிரேக்க வேதாகமத்தில் அடிமைகள் என்று தான் வந்து இருக்கிறது.
பரலோகத்தில் இருக்கிற நம்முடைய பிதாவின் சித்தத்தின்படி செய்யும் போது பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
Mat 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
இயேசுகிறிஸ்து வரும் போது முதல் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் தான் துவங்கும்.
1Pe 4:17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
ஒன்றான மெய் சபையாகிய தேவனுடைய வீடு எப்படி இருக்கிறது?
- தேவனுடைய வீட்டில் தேவன் பிதாவாக இருக்கிறார்.
- தேவனுடைய வீட்டில் இயேசு கிறிஸ்து மூத்த சகோதரனாக இருக்கிறார்.
- தேவனுடைய வீட்டில் நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம்.