நிக்கோதேமு அறிகிறதற்கு முன்னமே ஆக்கினைக்குட்படுத்தலாமா

நிக்கோதேமு அறிகிறதற்கு முன்னமே ஆக்கினைக்குட்படுத்தலாமா?

Nicodemus.. Does our law judge a man before it hears him and knows what he is doing? (Jn7:50,51) 

Ex23:2; Deu1:17; Deu17:4,8-11; Deu19:15-19; 1Sam20:32; Ezr10:16; Ps94:16; Pr18:13; Pr31:8; Zec7:9; Act23:3; Act25:16,27; Act26:1.

இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:

ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
(யோவான் 7:50, 51)

யாத்திராகமம் 23:2; உபாகமம் 1:17; உபாகமம் 17:4,8-11; உபாகமம் 19:15-19; 1 சாமுவேல் 20:32; எஸ்றா 10:16; சங்கீதம் 94:16; நீதிமொழிகள் 18:13; நீதிமொழிகள் 31:8; சகரியா 7:9; அப்போஸ்தலர் 23:3; அப்போஸ்தலர் 25:16,27; அப்போஸ்தலர் 26:1.

நியாயம் விசாரித்தல்:
நியாயபிரமாணத்தின்படி ஒருவன் குற்றம் செய்தால் அதை நிரூபிக்க 2 அல்லது 3 சாட்சிகள் அவசியம் தேவை. அதோடுகூட குற்றம் சாட்டப்பட்டவரின் வாய்மொழி உத்தரவு மிகவும் முக்கியமானது.
எல்லா நியாயசங்கத்திலும் இவ்விதமான முறைகள்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதே கருத்தைதான் நிக்கோதேமுவும் பயன்படுத்துகின்றார்.
நியாயவிதி ஆலோசனை மன்றத்தில் இயேசுவுக்கு விரோதமாக குற்றம் சுமத்துவதை நிரூபிக்க அவரையே அழைத்து அவரின் மறு உத்தரவுகளை அறிய வேண்டும் என்கிறார்.

நமது தேவனும் ஒருமனிதன் தவறு செய்யும்போது அவனுக்கு எதிரான திரளான சாட்சியங்களை மறைவாய் வைத்துள்ளார்.
இந்த சாட்சியங்களை தவிர குற்றம் செய்தவரின் இருதயத்தில் பதிந்துள்ள ஆதாரத்தையும் ஆராய்ந்து அறிகின்றார். கிறிஸ்து நிறைவேற்றப்போகிற நியாயதீர்ப்பும் இவ்விதமாகவே நடைபெறும்.

முகம் பார்த்து, சாட்சியங்களை வைத்து தீர்ப்பிடுவதைவிடவும் உள்ளத்தை ஆராய்ந்து பார்க்கும் பரிசுத்த ஆவியானவரை கொண்டு தீர்ப்பிடுவது மேன்மையானது.

நாம் சாட்சியங்களாலும், பரிசுத்த ஆவியினாலும் குற்றம் சாட்டப்படாதபடிக்கு உண்மையோடும், நீதியோடும், ஒழுக்கத்தோடும் நடந்து கொள்வோம்.

கர்த்தாவே உம் மகன்மூலம் நீர் செய்யபோகிற நியாயதீர்ப்புகள் உண்மையானவைகளாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME