வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.
But this crowd that does not know the Lae is accused. (John 7:49)
Jn9:34,40; 1Co1:20,21; 1Co3:18-20; Jas3:13-18; Pr28:4,7,9; Isa5:21; Isa28:14-16; Isa29:14-19; Isa65:5; Isa66:2; Jer5:4; Lk11:35; Act4:13.
வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். (யோவான் 7:49)
யோவான் 9:34,40; 1கொரிந்தியர் 1:20,21; 1கொரிந்தியர் 3:18-20; யாக்கோபு 3:13-18; நீதிமொழிகள் 28:4,7,9; ஏசாயா 5:21; ஏசாயா 28:14-16; ஏசாயா 29:14-19; ஏசாயா 65:5; ஏசாயா 66:2; எரேமியா 5:4; லூக்கா 11:35; அப்போஸ்தலர் 4:13.
சபிக்கப்பட்டவர்களா?
இந்த ஜனங்கள் என்பதின் எழுத்தார்த்த பொருள் என்னவெனில் இவர்கள் அறிவின்மையான ஒழுங்கற்ற கும்பல் என்றுப்பொருளாகின்றது.
இவ்விதம் இவ்வார்த்தையை கூறக்காரணம் என்னவெனில் இவர்கள் நியாயபிரமாணத்தை யூதசமய கலாசாலையில் சென்று கற்றிருக்கவில்லை என்பதினால் அவர்கள் சபிக்கபட்டவர்கள் என்று கூறுகின்றனர்.
யூதசமய பாரம்பரியப்படி மோசேயின் நியாயபிரமானத்தை ஒவ்வொரு யூதனும் கற்றிருக்கவேண்டும் என்பதாகும்.
ஆனால் யூதர்களுக்குள் அம்மிகா ஆரெட்ஸ் என்ற படிப்பறிவில்லாத பாமர ஜனங்கள் நியாயபிரமானத்தை கற்காதபடிக்கு ஒதுக்கி வைக்கப்பட்டனர். எனவே வேதத்தை கற்காதவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றனர்.
விவிலியமானது விவிலியத்தை கற்கவில்லையென்றாலும், வாசிக்கவில்லையென்றாலும், தியானிக்கவில்லையென்றாலும், கற்றதின்படி கீழ்படிந்து நடக்கவில்லையென்றாலும் பாக்கியமில்லாதவர்கள் என்றே கூறுகின்றது.
கர்த்தருடைய வாக்கியங்களுக்கு செவிகொடுக்காதவர்களும், பிரசங்க வேளையில் தூங்கிகொண்டிருக்கின்றவர்களும், நேரமில்லையென்று கூறிக்கொள்கின்றவர்களும் பாக்கியம் இழந்தவர்கள் ஆவர்.
காலையில் தேவனை தேடுதல் என்றால் ஜெபம் மட்டுமல்ல, விவிலிய தியானமும் உள்ளடக்கம்.
விவிலியத்துக்கு செவிகொடாதவன் எப்பேர்பட்டவனாயிருந்தாலும் அவனுடைய ஜெபமும், பிரசங்கமும் வீண்.
ஜெபவாழ்விற்கும், ஆவிக்குரிய வாழ்விற்கும், ஊழிய பணிக்கும் விவிலியத்துக்கு செவிகொடுத்து வாழ்வதே அடிப்படை.
விதையில்லாமல் களமிருந்தும் , நீர் இருந்தும் என்னபயன்?
கர்த்தாவே, உம் வார்த்தைகளையும், உம் குமாரனின் வார்த்தைகளையும் உமது ஆவியானவரால் நினைப்பூட்டி எங்களை பாக்கியவான்களாக மாற்றி வருவதற்காய் நன்றி.