சேவகர்: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை

சேவகர்: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.

The officers answered,No man ever spoke like this Man.  (John7:45,46)

Mt7:28; Mt22:33; Mk1:22; Mk11:18; Mk12:37; Lk2:47; Lk19:48; Jn4:41,42; Jn7:15; Act6:10; Act13:12; Col4:5,6.

சேவகர். அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.  (யோவான் 7:45,46) 

மத்தேயு 7:28; மத்தேயு 22:33; மாற்கு 1:22; மாற்கு 11:18; மாற்கு 12:37; லூக்கா 2:47; லூக்கா 19:48; யோவான் 4:41,42; யோவான் 7:15; அப்போஸ்தலர் 6:10; அப்போஸ்தலர் 13:12; கொலோசெயர் 4:5,6.

பேச்சுதிறன்: 
   கிறிஸ்தவ சமயத்தில் பிரசங்க கலை என்ற ஒரு பாடத்தை எல்லா தேவ ஊழியர்களும் கற்றிருப்பார்கள். அதைபோலவே, இயேசுகிறிஸ்துவும் பிரசங்கக்கலையை கற்றிருந்திருக்ககூடும் என்று கூறவியலாது.

  இயேசுகிறிஸ்து எவ்விதமான தர்க்க சாஸ்திரங்களையும் கற்கவில்லை.
  அவர் தேவனிடமிருந்து வந்தவர். பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர். மனிதர்களின் மனங்களை அறிகிறவர் என்பதினால் அவரால் மனிதர்க்கு ஏற்றபடியாக தேவசித்தத்தை வெளிப்படுத்தினார்.

  சிறந்த இலக்கிய பேச்சுக்கள், உள்ளம் உருகும் மனதுருக்க செய்திகள் யாவும் கேட்போரை கவர்ந்திழுக்கும். ஆனால் விசுவாசத்தை ஊட்டாது. ஆவியினாலும், வசனத்தினாலும் சாரமேற்றப்பட்ட செய்திகளே பிறருக்குள் தாக்கத்தை – விசுவாசத்தை ஏற்படுத்தும். கருத்தாழமிக்க செய்திகள் அல்ல, தேவத்துவதன்மை கொண்ட செய்திகளே முக்கியம்.

  பேசுகிறவன் முக்கியமானவன். பேசுகிறவனின் வாழ்க்கை தரத்தை பொறுத்தே அவரின் உரை கிரியை செய்யும். இயேசுவின் உன்னதமான வாழ்க்கை கேட்போரை விசுவாசத்துக்குள் கொண்டுபோனது.

  தற்காலத்தில் கிறிஸ்துவின் கால வேதபாரகர், பரிசேயர் போன்ற பிரசங்கியார்களும், போதகர்களும் பெருகிவிட்டதால் கோபங்களும், சண்டைகளும், பிரிவினைகளும் உற்பத்தியாகி கிறிஸ்துவின் சரீரமாகிய சபை அசுசிபட்டு நிற்கின்றது. இந்நிலை மாறவேண்டும். வியாக்கியானங்கள் வரம்பெற்றவைகளாயிருக்க வேண்டும்.

  கர்த்தாவே உம் குமாரனை பின்பற்றி அவர் பணியை செய்ய அனுப்பப்பட்ட நாங்கள் உம் ஆவியால் அருளப்படும் வார்த்தைகளை தவிர வேறு எதையும் பேசாமலிருக்க உம் ஞான ஆவியால் நிரப்பிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME