ஒன்றான மெய் சபை என்பது தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா

ஒன்றான மெய் சபை என்பது தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபை என்பதும் தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறதா என்று வேத வசனத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம்.

  • அநேகர் சாத்தானுக்கு இந்த பூமியில் ராஜ்யம் இருக்கிறது என்றால் நம்புகிறார்கள். ஆனால் தேவனுக்கு இந்தபூமியில் ராஜ்யம் இருக்கிறது என்றால் நம்மை பார்த்து பரியாசம் செய்கிறார்கள்.
  • இந்த பூமியில் மனிதர்களுக்கு ராஜ்யம் இருக்கிறது சாத்தானுக்கு ராஜ்யம் இருக்கிறது என்பார்கள்.
  • ஆனால் தேவனுக்குமட்டும் ராஜ்யம் இல்லை என்பார்கள்.

இன்றைக்கு தேவனுடைய ராஜ்யம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்பட்டு விட்டதா?

முதலில் ராஜ்யங்கள் எத்தனை இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்த உலகத்தின் பூமிக்குரிய ராஜ்யங்களின் மகிமையும் அதிகாரமும்  எல்லாம் பிசாசுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Luk 4:5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:

Luk 4:6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.

பூமியில் இருக்கக்கூடிய சகல ராஜ்யங்களையும் ஏற்படுத்தினவர் பிதாவாகிய தேவன் என்பதையும் அவர் தான் ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் என்பதையும்  மனுஷருடைய ராஜ்யத்தின் மேல் அவர்தான் ஆளுகை செய்கிறார் என்பதையும் நாம்  ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

Dan 4:17 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.

Dan 4:25 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும்.

பிசாசுக்குஎன்று ராஜ்யம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவனுக்கு ராஜ்யம் இருக்கிறது என்று கிறிஸ்து நமக்கு அறிவித்து இருக்கிறார்.  

Luk 11:18 சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.

இதைப்போல் இன்னும் அநேக வசனங்கள் உள்ளது.

  • பூமிக்குரிய ராஜ்யங்கள்  என்று ஒன்று இருக்கிறது. (இவைகள் எல்லாம் உலகத்திற்குரியவைகள்)
  • அடுத்தது சாத்தானுடைய ராஜ்யம் என்று ஒன்று இருக்கிறது. இந்த ராஜ்யத்தைக் குறித்து  வேத வசனங்கள் நமக்கு அதிகமாக போதிப்பதில்லை.

ஆனால் யோவான் ஸ்நானகனும் இயேசுகிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பரலோக ராஜ்யத்தைக்குறித்தும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்தும் அநேக வசனங்களில் பேசி இருக்கிறார்கள். இந்தராஜ்யம் மாம்ச பிரகாரமான  ராஜ்யம் அல்ல(பூமிக்குரிய ராஜ்யம் அல்ல) என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Rom 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

  • தேவனுடைய ராஜ்யம் அது மாம்சபிரகாரமான பூமிக்குரிய ராஜ்யம் அல்ல ஆனால் அந்த தேவனுடைய ராஜ்யம் பூமியிலே ஸ்தாபிக்கப்பட்டது.
  • தேவனுடைய ராஜ்யம் அது இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் ஆவிக்குரிய ராஜ்யமாய் இருக்கிறது.

இயேசுகிறிஸ்து மிக தெளிவாக இந்த வசனத்தில் சொல்லுவதை கவனியுங்கள்.

Joh 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

இயேசு கிறிஸ்துவுக்கு முன்பு வழியை ஆயத்தம் செய்யவந்த யோவான் ஸ்நானகன் பரலோக ராஜ்யத்தை குறித்து பிரசங்கித்தார்.

Mat 3:2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.

யோவான் ஸ்நானகனுக்கு பிறகு இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பிரசங்கித்தார். இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.

Mat 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

Mar 1:15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.

Luk 4:43 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.

தேவனுடைய ராஜ்யம் வரவேண்டும் என்று பிதாவினிடத்தில் ஜெபிக்க வேண்டும் என்று தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்துகற்றுக் கொடுத்தார்.

Mat 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் நாட்களில் அந்தராஜ்யம் ஜனங்களிடத்தில் வந்து இருக்கிறது என்று பிரசங்கித்தார்.

Mat 12:28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

ஆயக்காரர்களும் பாவிகளும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் சொல்லுவதை கவனியுங்கள்.

Mat 21:31 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை அனுப்பும் போதுதேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று பிரசங்கம் பண்ணும் படி அனுப்பினார்.

Luk 10:9 அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

Luk 10:11 ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.

தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் அதில் பலவந்தமாய் பிரவேசிக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து அறிக்கை செய்தார்.

Luk 16:16 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.

தேவனுடைய ராஜ்யம் எப்போது வருமென்று பரிசேயர்கேட்டதற்கு இயேசு கிறிஸ்து சொன்ன பதில் என்னவென்று கவனியுங்கள்.

Luk 17:20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

Luk 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்தவர்களில்சிலர் தேவனுடைய ராஜ்யம் வருவதை பார்த்த பிறகு தான் மரணத்தை ருசிபார்ப்பார்கள்  என்று இயேசு கிறிஸ்துதீர்க்கதரிசனமாக உரைத்தார்.

Mar 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அப்படியென்றால் தேவனுடைய ராஜ்யம் இந்த பூமியில் இப்போது  இருக்கிறதா?

ADD YOUR COMMENT

Powered By Indic IME