உண்மையுள்ளவனாயிருக்கிறான்

தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்.

He who seeks the glory of the One who sent Him is true. (John 7 :18)
Jn3:26-30; Jn11:4; Jn12:28; Jn13:31,32; Jn17:4,5; Mt6:9; Mt22:16; Ex32:10-13; Num11:29; Pr25:27.

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
(யோவான் 7:18) 

யோவான் 3:26-30; யோவான் 11:4; யோவான் 12:28; யோவான் 13:31,32; யோவான் 17:4,5; மத்தேயு 6:9; மத்தேயு 22:16; யாத்திராகமம் 32:10-13; எண்ணாகமம் 11:29; நீதிமொழிகள் 25:27.

உண்மையுள்ளவன்:

யோவான் ஸ்நானகன் யோவான் 3:30 ல் அவர் பெருகவும் தான் சிறுகவும் விரும்புவதாக கூறுகின்றார்.

பவுல் 1தீமோத்தேயு 1:15 ல் அவர்களில் பிரதான பாவி தான் என்று தன்னை தாழ்த்துகிறார்.

தன்னை அனுப்பினவரின் புகழுக்காக உழைக்கிறவனும், தன்னை மேன்மைபடுத்தினவரின் மேன்மைக்காக உழைக்கிறவனும், தனக்கு உதவி செய்தவருக்காக உழைப்பவனும் உண்மையுள்ளவனே.

தன்னை அனுப்பினவருக்காக வைராக்கியம் பாராட்டுவதும், தான் மரித்தாலும் இழந்தாலும் பரவாயில்லை தன்னை அனுப்பினவர் உய்வடைய வேண்டும் என்று நினைப்பவனும் உண்மையுள்ளவனே.

தனக்கு தரப்பட்ட பணிகளில் தன்புகழ் சேர்க்காது, பணியினை சிறப்பானதாக செய்கிறவன் உண்மையுள்ளவனே.

தன்னை நிலைநிறுத்திகொள்ள துணியாமலும், தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினையாதவனும் உண்மையுள்ளவனே.

இப்படிபட்டவர்களுக்குரிய மேன்மையும், புகழ்ச்சியும் கர்த்தராலே வரும்.

மோசே தனக்கு புகழ் சேர்க்காமல் தன் குடும்பத்துக்கு சம்பாத்தியம் சேர்க்காமல் கர்த்தருக்காய் பக்திவைராக்கியம் பாராட்டினதினால் கானானை இழந்தாலும் விவிலியம் அவனை உயர்வாகவே கருதுகின்றது.

இப்படிபட்டவர்கள் உண்மையுள்ளவர்களாயிருப்பதினால் பரிபூரண நன்மைகளின் சொந்தகாரராக மாறுகின்றனர்.

தன்புகழ் சேர்க்காத ஊழியக்காரன் யார்.. அவனே உண்மையுள்ளவன்.

பதவிகள், படிப்புகள், செல்வம் புகழுக்கானதல்ல, சேவை செய்வதற்கானது.

கர்த்தாவே, உம் குமாரனைபோலவே, நாங்களும் உம் குமாரனின் மகிமையையும், உம் மகிமையையும் தேடுகிறவர்களாயிருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME