என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
Jesus My doctrine is not Mine, but His who sent Me. (John 7:16)
Jn8:38,47; Jn12:49,50; Jn14:10; Jn17:8,14; Mt13:54; 1Sam10:12; Pr4:2; Isa29:11,12; Isa59:26.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. (யோவான் 7:16)
யோவான் 8:38,47; யோவான் 12:49,50; யோவான் 14:10; யோவான் 17:8,14; மத்தேயு 13:54; 1 சாமுவேல் 10:12; நீதிமொழிகள் 4:2; ஏசாயா 29:11,12; ஏசாயா 59:26.
என் உபதேசம் என்னுடையதல்ல:
நான் உங்களுக்கு பிரசங்கிக்கிற வாக்கியங்களெல்லாம் என்னை அனுப்பினவருடையது.
நான் எனது சொந்த மாம்சத்தில் உபதேசிக்கவில்லை.
பிதா எனக்கு அளவில்லாமல் தந்துள்ள ஆவியினாலே பேசுகிறேன்.
அந்த ஆவியானவர் பிதாவின் ஆழங்களை அறிந்திருப்பவரானதினால் பிதாவின் விருப்பம் அறிந்து பிதா சொல்லுகிறவைகளையும், காண்பிக்கிறவைகளையும் உபதேசமாக உபதேசிக்கிறேன் என்று கூறுகின்றார்.
இயேசு ஒரு தனிபட்ட கொள்கை உருவாக்க வரவில்லை.
பிதா எதை விரும்பினாரோ அதை பேசுவதும், செய்வதுமே அவர் விருப்பமாயிருந்தது.
கிறிஸ்தவம் என்பது ஒரு உபதேசம் அல்ல, அது ஒரு புதிய – தெய்வீக – கிறிஸ்துவை மையமாக கொண்ட வாழ்க்கைமுறை.
பலஜாதிகள், மதங்கள், இசங்கள் மத்தியில் ஒரே வாழ்க்கைமுறையை உருவாக்க வந்தார்.
பாவமில்லாத தூயவாழ்வு முறையே அது.
இயேசுவை பின்பற்றுவதுதான் மெய் உபதேசம்.
பிதாவை பின்பற்றுவது இயேசுவின் வாழ்க்கைமுறை.
இயேசுவை பின்பற்றுவது அப்போஸ்தலரின் வாழ்க்கைமுறை. அப்போஸ்தலர்களை பின்பற்றுவது சபையின் வாழ்க்கைமுறை.
அனுபவங்கள் மாறுபடலாம்.
உபதேசம் ஒன்றேயொன்றுதான்.
அது மாறுவதில்லை.
அதை மாற்றவும் கூடாது.
பற்பல உபதேசங்கள் என்றுசொல்லி பிரிந்திருக்கும் சபைகள் ஒருமுறை சிந்திக்கட்டும்.
தாங்கள் கூறும் உபதேசம் கிறிஸ்துவினுடையதா?
கர்த்தாவே நாங்கள் மெய்யாய் உம்மை பின்பற்றிவர விரும்புகிறோம். உபதேசங்கள் என்று சொல்லிக்கொண்டு மாறுபட்டு திரிய எங்களை அனுமதியாதிரும். கிறிஸ்துவாகிய உம் மகனையே நாங்கள் பிரசங்கிக்க உதவிடும்.