இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?
Jews marveled, saying,How does this Man know letters,having never studied? (John 7 :15)
1Sam10:11; Ps22:6-9; Isa29:10-14; Isa50:4-10; Am7:14,15; Mt7:28,29; Mt13:53-58; Mt22:22,33; Mk6:2,3; Lk4:22; Jn7:46; Act2:7-13; Act4:11-13; 1Co14:12-20.
அப்பொழுது யூதர்கள்:இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
(யோவான் 7:15)
1 சாமுவேல் 10:11; சங்கீதம் 22:6-9; ஏசாயா 29:10-14; ஏசாயா 50:4-10; ஆமோஸ் 7:14,15; மத்தேயு 7:28,29; மத்தேயு 13:53-58; மத்தேயு 22:22,33; மாற்கு 6:2,3; லூக்கா 4:22; யோவான் 7:46; அப்போஸ்தலர் 2:7-13; அப்போஸ்தலர் 4:11-13; 1கொரிந்தியர் 14:12-20.
இயேசுவின் ஞானம்:
இயேசுவின் பழைய ஏற்பாட்டு விவிலிய ஆற்றலைக் குறித்து சிந்திக்கும்போது இருமாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
- அவர் ஒரு ரபி பெறும் பயிற்சியைபோல எந்த ஒரு மூத்த ரபீக்களிடமோ, யூதசமய கல்விசாலைகளிலோ படித்திருக்கவில்லை என்பதாகும்.
- அவர் ஒருசில ரபீக்களிடம் கல்வி கற்றார். ஆனாலும் சில பிரச்சனைகளினிமித்தம் இஸ்ராயேலைவிட்டு வெளியேறி கல்வி கற்றார் என்பதாகும்.
இவைகளை நாம் ஆராய வேண்டாம்.
இயேசுகிறிஸ்துவின் ஞானத்துக்கு சில உண்மைகள் விவிலியத்தில் உண்டு. ஒருசில காரியங்களை நாம் கவனத்தில் கொள்வோம்.
- யூதசமய பாரம்பரியபடி குலசமய கல்வி எல்லா குடும்பங்களுக்கும் பொருந்தும். மனிதன் என்ற முறைப்படி குலசமய கல்வியின் முதல்படியாகிய குடும்பத்தில் சமய கல்வியை கற்றல் நிறைவேற்றபட்டிருக்க வேண்டும்.
- லூக்கா 2:52 ன் படி இயேசுவானவர் ஞானத்தில் விருத்தியடைந்தார் என்பதை வெறும் பரலோக அணுகுமுறை கொண்டு தீர்மானிக்கமுடியாது. சமய அனுச்சாரங்களிலும் அவர் தெளிவாக வளர்ந்தார்.
- இயேசுவின் 12 ஆம் வயதில் தேவாலயத்தில் அவர் நடந்துகொண்ட முறை யூதசமய வழக்கப்படி உண்மைதான் என்று அறியலாம்.
- மேலும் இயேசுவை ரபீ என்று அழைத்த மக்கள் கூட்டத்தில் அவரை ரபி அல்ல என்று மறுத்தவர்கள் எவரும் இருந்ததில்லை.
- எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருந்ததினால் அவருக்கு விவிலியத்தை யாரும் போதிக்கவேண்டியதில்லை.
தேவ ஆவியை பெற்ற நாம் தேவனுடைய வாக்கியங்களை விளங்கிகொள்ளாமல் தங்களிஷ்டம்போல் வியாக்கியானபடுத்துவதை பார்க்கும்போது இவர்கள் தேவ ஆவியைபெர்றவர்களா என்ற சந்தேகம் வருகின்றது.
கர்த்தாவே நீர் உம் மகனுக்கு உம் ஆவியை தந்து சகலவற்றையும் கற்றுக்கொடுத்ததுபோல எங்களுக்கும் யாவையும் கற்றுக்கொடுத்து உம் மகனை நாங்கள் உண்மையாய் பின்பற்ற உதவிடும்.