ஜீவ அப்பம் நானே
I am the bread of life. ( John 6:47)
Ps22:26; Ps105;40; Isa55:2; Mt5:6; Mk14:17-26; Jn6:33-35,41,51; 1Cor10:16,17; 1Cor11:23-32; Rev2:17.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47)
சங்கீதம் 22:26; சங்கீதம் 105;40; ஏசாயா 55:2; மத்தேயு 5:6; மாற்கு 14:17-26; யோவான் 6:33-35,41,51; 1கொரிந்தியர் 10:16,17; 1 கொரிந்தியர் 11:23-32; வெளி 2:17.
இயேசுவே வாழ்வு.
அப்பம் வயிற்றுப்பசியை போக்குகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடலை வளர்ச்சியடைய வைக்கிறது. குறிப்பிட்ட நாளுக்குபின்பு இது பயன்படாது. முதுமைக்கு நேராக சென்று மண்ணுக்குள் மடிவிக்கின்றது. பூமிபோஜனம் பூமிக்குள்தான் கொண்டுபோகும்.
ஆனால், இயேசுவாகிய உணவு உடல், ஆன்மா, ஆவி வளர்ச்சிக்கு பயன்படுகிறது. உள்ளத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய வைக்கிறது. இந்த உணவு விண்ணிலிருந்து வந்ததினால் விண்ணுக்கே கொண்டுபோகும்.
மரணத்தை நோக்கி ஓடுபவர்க்கும் வாழ்வு தருபவர் இயேசு. கிறிஸ்துவே வாழ்வு. கிறிஸ்து எங்கே அறியப்படவில்லையோ அங்கே வாழ்வு இல்லை. கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதினால் வாழ்வு வாக்களிக்கப்படுகிறது.
நான்கு முறைகளில் இயேசு என்ற வாழ்வு நம்மில் உருவாகின்றது.
- இயேசுவை ஏற்றுகொள்வதினால்.
- இயேசுவை விசுவாசிப்பதினால்.
- இயேசுவை அப்பமாக உண்பதினால்.
- இயேசுவை வாழ்வாக பிரசங்கிப்பதினால்.
அன்பானவர்களே!.
உங்களில் இயேசு வாழ்வாக வாழ்கிறார். உங்கள் வாழ்வின் வளர்ச்சி அவரோடுள்ள ஐக்கியத்தில் இருக்கிறது. பாவம் உன்னை மரணத்துக்கு கொண்டுபோகும்.
வியாதிகள் உன்னை அற்றுபோகப்பண்ணும்.
போராட்டங்கள், இடறல்கள், கடன்கள் யாவும் உன்னை வெட்டி வீழ்த்த துணியும்.
விக்கிரக வணக்கம் உன்னை நரகிற்கு கொண்டுபோகும்.
கடவுளற்ற நிலை உன்னை அண்ட வெளியில் உன்னை பிண்டமாக எறிந்து விடும்.
கெட்டபழக்கவழக்கங்கள் உன் வாழ்வை அரித்துவிடும்.
இயேசுவை நம்பு..
அவர் மட்டுமே வாழ்வாயிருக்கிறார். இயேசு தருகிற வாழ்வு உண்மை வாழ்வு, நித்திய வாழ்வு, மகிழ்ச்சி வாழ்வு, திருப்தியான வாழ்வு, பரலோக வாழ்வு.
உலகில் எந்த ஒன்றும், எவரும் இந்த வாழ்வை தர இயலாது.
இயேசு மட்டுமே இதனை இலவசமாக தருகிறார்.
அவரை ஏற்றுகொள்ள வா.
அவரை விசுவாசிக்க வா.
அவரை உணவாக உண்ண வா.
திருப்தியடைவாய்.
கர்த்தாவே, உம் மகனை எங்கள் வாழ்வாக தந்தீர். எங்கள் உயிராய் தந்தீர். எங்கள் உணவாய் தந்தீர். உமக்கு நன்றி. இந்த மெய் உணவை பொய்ம்மையில் வாழும் ஜனங்களுக்கு இலவசமாக கொடுக்க எனக்கு உதவிடும்.