இயேசு

உலகம் இரட்சிக்கப்பட இயேசு வந்தார்.

யோவான் 3:17-21

Do not be afraid; only believe, and she will be made well. (Lk8:50) Lk8:41,42,49-56; Mk5:36; Mk9:23; Mk11:22-24; Jn11:25,40; Rom4:17,20.

இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். (லூக்கா 8:50)

லூக்கா 8:41,42,49-56; மாற்கு 5:36; மாற்கு 9:23; மாற்கு 11:22-24; யோவான் 11:25,40; ரோமர் 4:17,20.

தியான வசனம் யோவான் 3:17

1. சங்கீதம் 19:1-6. உலகம் தேவனுடைய கரங்களின் கைவண்ணம்.
நல்ல உலகம், அழகான உலகம், தேவ மகிமையை வெளிபடுத்தும் உலகம், தேவ ஞானத்தை வெளிபடுத்தும் உலகம்.

2. ரோமர் 3:10-18. பாவம் – கீழ்படியாமை உலகிற்கு ஆக்கினையை கொண்டுவந்தது. உலகில் சாபம் உண்டானது. வறட்சி, அழிவு உண்டானது. இதன் வேதனையை மனுக்குலம் இன்னும் அனுபவிக்கிறது.

3. ஏசாயா 53:1-12.இயேசு கிறிஸ்துவை கொண்டு உலகை புணரமைக்க – மறுபயன்பாட்டுக்கு கொண்டுவர – ஆசீர்வாதத்தை கொண்டுவர தேவன் விரும்பினார். இதனால், இயேசுகிறிஸ்து உலகை நியாயந்தீர்க்கவில்லை,
மனிதரை தண்டிக்கவில்லை.

4. யோவான் 3:19,20. இந்த இயேசுவை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குட்படுகிறான். தண்டனைக்குள்ளாகிறான். தேவ கோபத்திற்கு ஆளாகிறான்.

ஏன் ஆக்கினைக்குட்படுகிறான்?
– அவன் இருளை அதிகமாய் விரும்புவதினால். தேவனோடு நடக்க, பேச, பழக விருப்பமில்லாதவனே இருளை விரும்பி மறைந்து வாழ்கின்றான்.
– பொல்லாங்கு செய்கிறவனாயிருப்பதினால். தீமையை கர்ப்பந்தரித்து அதை பிறப்பிகின்றான். நேர்மை, உண்மை, ஒழுக்கம் இல்லாதவனாகிறான்.
பாவம், சாத்தானோடு இணைந்து தொந்திப்பாய் இருக்கிறான்.

5. யோவான் 3:21; ரோமர் 1:17. இந்த இயேசுவை விசுவாசிக்கிறவன்.
– ஒளியினிடம் வருகிறான். இவன் ஒளியை விரும்புகிறவன், வெளியரங்கமானவன், திறந்த மனமுள்ளவன், ஒளியானவன், ஒளியின் பிள்ளையானவன்.
– சத்தியத்தின்படி செய்கிறவன்.
தேவ சத்தம் கேட்கிறவன்.
அதற்கு கீழ்படிகிறவன்.
அவர் சித்தத்தின்படி தன் காரியங்களை நடப்பிக்கிறவன். சத்தியம் பேசுகிறவன்.
தன்னிஷ்டமாக செயல்படாதவன். தன் பணிகளில் சத்தியத்தை விளங்க செய்கிறவன்.

இந்த இயேசுவை விசுவாசியுங்கள். இரட்சிக்கபடுவீர்கள். உன் கிரியைகளுக்கு பலனுண்டாகும். உன்பேர் பெருமை படுத்தப்படும். உதிக்கிற உன் ஒளியினிடத்தில் இராஜாக்கள் ஒடி வருவார்கள். நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.

ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பி உம்மை பின்பற்றும்படி உம்குமாரனை எங்களுக்கு கொடுத்தீர். எங்களை கெட்டுபோகாமல் காத்துக்கொண்டீர். நாங்கள் எங்களை சார்ந்த உறவினர்களும் ஒருபோதும் கெட்டுபோகாமலிருக்க அவர்களுக்குள் விசுவாசத்தை ஊட்ட எங்களை பயன்படுத்தும். ஆமென்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME