ஆக்கினைக்குள்ளாக

உலகை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படி தேவன் தம் குமாரனை அனுப்பவில்லை

For God did not send His Son into the world to condemn the world. (John 3:17a) Jn5:22,45; Jn8:3-11,15,16; Jn12:47,48; Lk9:56; Jn19:10; Rom5:20; 2The2:10. (John 3:17a)

உலகை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படி தேவன் தம் குமாரனை அனுப்பவில்லை. (யோவான் 3:17a)

யோவான் 5:22,45; யோவான் 8:3-11,15,16; யோவான் 12:47,48; லூக்கா 9:56; லூக்கா 19:10; ரோமர் 5:20; 2தெசலோனிக்கேயர் 2:10.

ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை. பாவம் செய்தவர்களையும்,பாவம் செய்ய தூண்டினவர்களையும், பாவம் நடந்தேறிய உலகையும் தேவன் தீர்ப்பிடாமல் இருப்பதில்லை. ஆனால், தேவன் அனுப்பிய இயேசுகிறிஸ்து உலகை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை. ஏன்?

1. இயேசுவின் முதலாம் வருகை பாவிகள் மனந்திரும்புதலுக்கானது. 1தீமோத்தேயு 1:15. ரகசிய வருகையானது இரட்சிக்கபட்டவர்களை பரதீசில் சேர்க்க. 1 தெசலோனிக்கேயர் 4:16,17. இரண்டாம் வருகையானது 100 வருட அரசாட்சிக்கானது. வெளி 20:4. அதன்பின்பு நியாயதீர்ப்பு காலம் உண்டு. வெளி 20:12
2. தேவனின் விருப்பத்தை மட்டுமே செய்கிறவர் இயேசு. காலம், நேரங்களுக்கேற்றாற்போல மாறிக்கொள்பவரல்ல. உலகம் மாறலாம். மனிதர் மாறலாம். அவர் மாறார்.
3. இயேசு நியாயந்தீர்க்கிற காலம் ஒன்று உண்டு. யோவான் 5;22,27; யோவான் 9:39. அதுவரையிலும்,எவரையும் அவர் நியாயந்தீர்ப்பதில்லை.
4. அவர் நியாயந்தீர்க்காமலிருக்கலாம். ஆனால் அவர் கண்டிக்காமல், தண்டிக்காமல் இருப்பதில்லை. தவறு இழைக்கப்படும்போது தண்டிக்கிறார். சிட்சிக்கிறார்.
5. அவர் நியாயம் தீர்ப்பதில்லை. ஆனால் தேவ நியமங்கள்படி வாழாதவர்கள் தாங்களாகவே நியமங்களின் கிரியைகளாகிய தண்டனைகளுக்குட்படுகிறார்கள். யோவான் 3:18.
6. இது கிருபையின் காலமாய் இருப்பதினால் அன்பை வெளிபடுத்துகிறார். கெட்ட மகன் திரும்பி வருவது வரையிலும் நீடிய பொறுமையுடன் பொறுத்திருக்கிறார். இது மனந்திரும்புதலின் காலமாகும்.
7. தேவ குமாரன் உலகத்தாலும், மாம்சத்தாலும் எந்த அளவுக்கு தீர்ப்பிடபட இடம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதுவரையிலும் அவர் கோபம் கொள்ளார். இங்கே தேவ அன்பு நிலைத்திருக்கும்.
8. பாவம் எந்த அளவுக்கு பெருகுகிறதோ
கிருபையும் பெருகுவதால்.
9. அன்று தேவன் தம் குமாரானை பாவிகளை மீட்கும்படியாக அவரை ஆக்கினைக்குட்படுத்தினார். இனி மீட்கப்பட்டவர்கள் காக்கபடும்படி தேவன் தம் குமாரனின் மூலமாக மீட்கபடாதவர்களை ஆக்கினைக்குள்ளாக்க போகிறார்.
10. பாவம் செய்தவன் மனந்திரும்ப அவர் பொறுத்திருக்கிறார். புதிய முறைகளை அவர் பின்பற்றவில்லை. தம் குமாரன் வழியாக மீட்பதை தவிர வேறு வழியை பின்பற்றவில்லை. ஆனால் நாமோ பொறுத்திருப்பதில்லை. பல உபாயங்களையும் நூதன முறைகளையும் பின்பற்றி ஜனங்களை மீட்புக்குள்ளாக்குகிறோம். இதனாலேயே உண்மை கிறிஸ்தவன் குறைந்து காணப்படுகிறான்.

கர்த்தாவே, நீர் எரிச்சலுள்ளவர், பட்சிக்கிற அக்கினி என்று நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் நீர் கோபம் கொள்ளாமல் அன்பு செலுத்துகிறீர் என்றும் அறிந்துள்ளோம். உம்முடைய அன்புக்கு இணை எதுவும் இல்லை. எனவே நாங்கள் சிட்சிக்கபடாதபடி சிகிட்சை செய்யபடும்படி வேண்டுகிறோம். எங்களை தண்டிக்காதேயும். வெறுத்துவிடாதேயும். தள்ளிவிடாதேயும். எங்களிடமாய் வாரும். எங்களை அரவணைத்து கொள்ளும்.
God bless you.

ADD YOUR COMMENT

Powered By Indic IME