நாத்தான்வேல்: ரபீ, நீர், இஸ்ராயேலின் ராஜா

நாத்தான்வேல்: ரபீ, நீர், இஸ்ராயேலின் ராஜா.

அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். (யோவான் 1:49)

யோவான் 12:13-15; யோவான் 18:33-37; யோவான் 19:19-22; மத்தேயு 21:4; லூக்கா 19:38; சங்கீதம் 2:6; சங்கீதம் 110:1; ஏசாயா 9:7; மகா 5:2; செப்பனிட 3:15; சகரியா 9:9

இஸ்ராயேலில் ராஜ்ய பரிபாலனம் ஏற்படுத்தபட்டதற்கான காரணம் 1 சாமுவேல் 8:1-9 ல் தரப்பட்டுள்ளது.

தேவனே இஸ்ராயேலின் ராஜாவாக இருக்க விரும்பி ஏற்படுத்தபட்ட ஜனம் இஸ்ராயேல்.

பிற ஜனங்களின் விருப்பங்களை தம் ஜனம் ஏற்றுக்கொள்வதை தேவன் விரும்பவில்லை. எனவே அவர்களின் மனதினவுக்கு ஏற்றாற்போல் அவர்களை விட்டு விட்டார்.

இன்றைய கிறிஸ்தவ சபைகளுக்கும் கிறிஸ்துவே ராஜாவாக இருக்க விரும்புகிறார். 1தீமோத்தேயு 6:14-16

இஸ்ராயேலின் தேவன் இஸ்ராயேலின் ராஜா மட்டுமல்ல, சர்வ உலகத்திற்கும் ராஜாவாக இருக்கிறார்.

உலகம் அவரை ஏற்காவிட்டாலும் அந்த வரலாற்று நிகழ்வு இந்த உலகத்தில் நடந்துதான் தீரும். அவர் முழு உலகையும் அரசாளுவார்..

அவர் இராஜாவாக போகிறார்.

இயேசுவை இஸ்ராயேலர் தங்களுடைய இராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், அவர் இஸ்ராயேலை ஆளும் இராஜாவாக வெளிப்பட போகிறார்.

அவருடைய இராஜ்யம் ஸ்தாபிக்கபட்டு முடியும்போது அவர் இராஜாவாக வருவார்.

அவருடைய இராஜாங்க வெளிபாட்டை
– சாஸ்திரிகள் கண்டனர். மத்தேயு 2:2
– நத்தானியேல் கண்டான். யோவான் 1:49
– பிலாத்து கண்டான். யோவான் 19:19-22
– கள்ளன் கண்டான். லூக்கா 23:42
– மக்கள் கண்டனர். லூக்கா 19:38;
யோவான் 12:13
– தீர்க்கர்கள் முன்னதாக கண்டனர். மீகா 5:2; சகரியா 9:9

இந்த ராஜா பூமிக்கு அனுப்பப்பட்டு, இருளின் இராஜ்யம் நீக்கப்பட்டு ஒளியின் இராஜ்யம் ஏற்படுத்த படுகிறது.
தீமையின் ராஜாங்கம் அகற்றப்பட்டு நன்மையின் ராஜாங்கம் ஏற்படுத்த படுகிறது.
மரண ஆளுகை நீக்கப்பட்டு ஜீவனாளுகை ஏற்படுத்த படுகிறது.

ஆனால் இக்காலத்தில் அவரை ராஜாவாக சபைகள் காண்பிக்கவில்லை.

தங்களையே ராஜாக்களாக – அதிபதிகளாக – ஜமீன்தார்களாக காண்பிக்க அரும்பாடு படுகின்றனர்.

இயேசுவின் இரண்டாம் வருகை நடைபெற போகின்றது. அந்த ராஜாவின் வருகையை எதிர்பார்ப்போரும் குறைவாய் உள்ளனர்.

அவரின் ஆளுகை வரும்படி அனுதினமும் ஜெபிக்க இயேசு கூறினார். மத்தேயு 6:6-10

ஆனால் அந்த ஜெபத்தை யாரும் செய்வதுமில்லை, அதை குறித்து சிந்திப்பதுமில்லை.

அவராட்சி, இவராட்சி வரவேண்டும் என்று ஜெபிக்கிறதை விட்டுவிட்டு கிறிஸ்துவின் ஆட்சி வரும்படியாய் அனுதினமும் பரமண்டல ஜெபத்தோடு இணைந்து ஜெபிப்போமா?

ராஜா வருகிறார், இஸ்ராயேலின் இராஜா
இந்தியாவின் இராஜா.

ADD YOUR COMMENT

Powered By Indic IME