எப்படி செல்வது?
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1கொரிந்தியர் 15:55)
மரண பயணத்திலிருந்து உனக்கு விடுதலை.. மரணத்தின் உக்கிரத்திலிருந்து உனக்கு விடுதலை.. மரணம் ஜெயமாய் விழுங்கப்பட்டது.. மரணம் என்றென்றும் பேரானந்தமுள்ள சொர்க்கத்திற்கு நுழைவு வாயில். GATE WAY.
நரகம் என்ற பாதாளத்தின் கதவு உனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.
எப்படி செல்வது??
உனக்காக இயேசு மானிடனாய் வந்தார். நமது மாம்ச இச்சைகளுக்கான மரணத்தின் உக்கிரத்தை சரீரப் பிரகாரமாகவும், சரீரம் கிழிக்கப்பட்டு, கடைசி சொட்டு இரத்தம் வெளியேறும்படிக்கும், ஆவியின் பிரகாரமாக தூஷணங்களாலும், அவமானங்களையும் முழுமையாக சுமந்து தீர்த்து விட்டார்.
மரித்தவர் எழுந்து விட்டார் எழுந்தவர் மீண்டும் மரணத்தின் உக்கிரத்திலே விழாதபடிக்கும், பரலோகத்தையும் பெற்றுக் கொள்ளும் படி(அவரைப் பற்றிக் கொண்டால்) வழி நடத்துகிறார்.
இப்பொழுது மரணத்தைப் பற்றிய பயமே தேவையில்லை. மரணத்தின் உக்கிரம் விலக்கப்பட்டு. மரணம் பரலோகத்திற்கு நுழைவு வாயில். மரணத்தை ஆவலோடு எதிர்பார்ப்பாய். நரகத்தின், பாதாளத்தின் பிடியிலிருந்து விடுபட்டாய்.
என்னே! அற்புதமான மீட்பு!