எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும்

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கொரு இடம் வேண்டும்…

இதோ நீ தேடும் நிம்மதி ஒருவர் கிரயமில்லாமல், இலவசமாய் தருகிறார்
நீ நிம்மதி இல்லாமல் அலையும் காரணத்தை நீ அறியாமல் இருக்கிறாய். உன் சுய இச்சபையின் மிகுதியால், உன் மீறுதலால், நீ நிம்மதியிழந்திருக்கிறாய். உன் சுய இச்சபையின் மிகுதியால், உன் மீறுதலால் வந்த தண்டனையை அவர் தன் மீது பாசத்தோடு, இரக்கத்தோடு, முழுமையாய் ஏற்றுக் கொண்டு, மரித்து, உயிர்த்தெழுந்து, பரிபூரண நிம்மதியைக் கொடுத்துவிட்டார்.
உயிர்த்தெழுதவர் நீ நிம்மதியிழக்கும் உனது செய்கையிலிருந்து, அவரது ஆவியைக் கொடுத்து, அனுதினமும் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.
அவர் தருகிறார் சமாதானம் உலகம் தரப்போகிற கொஞ்சம் நேரம் சமாதானம் அல்ல நிரந்தர, பரிபூரண சமாதானம்.
இங்கே இருக்கும் போதும் நிம்மதி, இறக்கும்போதும் நிம்மதி, இறந்த பின்னும் நிம்மதி. இவ்வுலகத்தைப் பற்றிய கவலையற்ற நிம்மதி.
அவர் ஒரு நாள் உன்னைப் பார்க்க வருகிறபோது என்றென்றும் யாராலும் பறித்துக் கொள்ள முடியாத நிம்மதி மற்றும் பேரானந்தம்…
அவர் தான் ஆண்டவர் இயேசு

ADD YOUR COMMENT

Powered By Indic IME