நீர் செய்கிற கிரியைகளை உம் சீஷர்கள் பார்க்கும்படி யூதேயாவுக்குப்போம்

நீர் செய்கிற கிரியைகளை உம் சீஷர்கள் பார்க்கும்படி யூதேயாவுக்குப்போம்

Jn7:3.
Depart from here and go into Judea, that Your disciples also may see the works that You are doing.
Gen37:5-11,20; 1 Sam17:28; Dan 5:13f; Jer12:6 Mt 12:46-50;
Mt 22:16,17; Mk 3:21,31-35; Lk 4:23; Lk 8:20,21; Act 2:14f.

யோவான் 7:3.
நீர் செய்கிற கிரியைகளை உம் சீஷர்கள் பார்க்கும்படி யூதேயாவுக்குப்போம்.
ஆதியாகமம் 37:5-11,20;  1 சாமுவேல் 17:28; தானியேல் 5:13; எரேமியா 12:6; மத்தேயு 12:46-50; 22:16,17; மாற்கு 3:21,31-35; லூக்கா 4:23;8:20,21; அப்போஸ்தலர் 2:14.

ஏற்றுக்கொள்ளாத குடும்பம்.

சகோதரர்கள்: இயேசுவே, நீர் செய்கிற காரியங்கள் ஆச்சரியமானவைகளாயிருக்கிறது. இங்கு இருந்து நீர் இதையெல்லாம் செய்வதினால் உமக்கு என்ன இலாபம் கிடைக்கும்?.நீர் யூதேயாவுக்கு போய் இவைகளை செய்தால் உமக்கு புகழ் கிடைக்கும் என்றனர்.

இயேசுகிறிஸ்து தமது குடும்பத்தைவிட்டு சற்று விலகி வாழ்ந்ததின் நோக்கமே அவருடைய குடும்பத்தாரின் அவமானகரமான பேச்சுக்கள், அவிசுவாசமான கிரியைகள் போன்றவைகளாகும்.
இதனால்தான் இயேசு பரலோகப்பிதாவின் சித்தப்படி செய்கிறவனே எனக்கு தாயும சகோதரர்களுமாயிருக்கிறார்கள் என்றார்.
அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அநேக அற்புதங்களை அவர் செய்யவில்லை என்று சுவிசேஷம் கூறுகின்றது.
தன் குடும்பம் மீட்கபடவேண்டும் என்பதற்காகவே தன் குடும்பத்தில் பற்பல நற்கிரியைகளை செய்தார். ஆனால் அவர் குடும்பத்தாரோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தீர்க்கதரிசியும், பரிசுத்தவானும், நேர்மையானவனுமாகிய கர்த்தருடைய ஊழியக்காரன் தன் குடும்பத்தாரால் அங்கீகரிக்கப்படுவது எழிதானதல்ல.

ஊழியம் என்பது தேவனால் தேவனுக்காக செய்யும்படி ஏற்படுத்தப்பட்டது. இதில் பணம், புகழ், பெருமை சம்பாதிப்பதற்கல்ல, தேவனுக்காய் நிற்பது. கஷ்டங்கள், நஷ்டங்களை சகிப்பது.

குடும்பம் இயேசுவுக்கு எதிராக செய்ததை பட்டியலிடுவோம்.

  • நீர் செய்து நாங்கள் என்ன பார்க்கிறது.. – நீர் சொல்லி நாங்கள் என்ன கேட்பது. 
  • அவிசுவாசத்தின் வெளிப்பாடு. 
  • தேவனுடைய கிரியைகளை மட்டுபடுத்துவது. 
  • மாற்றத்துக்கு இடம் தராதது. 
  • தேவனுடைய பணியை குறித்த தப்பபிப்ப்ராயம். 
  • தேவனுடைய கிரியைகளை பார்க்க , அனுபவிக்க விரும்பாதது.

கர்த்தாவே, உம் மகன்மூலம் நீர் செய்யும் கிரியைகளை பார்க்க விரும்பாத கிறிஸ்தவ பெருமக்கள் மத்தியில் எங்களில் உம் கிருபையை பொழிந்து உம்மையும், உம் கிரியைகளையும் வெளிபடுத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME