இயேசுவே நீர் யார்

இயேசுவே நீர் யார்???….

அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.(யோவான் 8:25)

யோவான் 10:24; யோவான் 18:33-38; அப்போஸ்தலர் 13:25; அப்போஸ்தலர் 19:4; மத்தேயு 16:13f; மத்தேயு 21:10,23; லூக்கா 7:49; லூக்கா 9:9; லூக்கா 18:3; மாற்கு 15:2…

iberal theologions – தாராள இறையியல் வாதிகள்…
இயேசுவின்….
– பெயரில் குழப்பம்…..
– அவர் பிறப்பில் குழப்பம்…..
– அவர் வளர்ப்பில் குழப்பம்…..
– அவர் திருமுழுக்கில் குழப்பம்…..
– அவர் உபதேசத்தில் குழப்பம்…..
– அவர் அற்புத கிரியைகளில் குழப்பம்…..
– அவர் மரணத்தில் குழப்பம்…..
– அவர் அடக்கம் செய்யபட்டதில் குழப்பம்…
– அவர் உயிர்த்தெழுதலில் குழப்பம்…..
– அவர் சரீரம், இரத்தம் குறித்த குழப்பம்…
– அவ்ர் பரமேறுதலில் குழப்பம்…..
– அவர் நிறுவிய சபை குறித்த குழப்பம்….
– அவர் வருகையை குறித்த குழப்பம்…..
– அவரை அறிவிப்பதில் குழப்பம்……

இன்னும் பலர் இயேசு யார் என்று அறியாமல் புரியாமல் குழம்பிப்போய் கேள்விகேட்டுக்கொண்டும் தவறாக விளக்கம் தந்துக்கொண்டும் வருகிறார்கள்…….
தாங்கள் கூறுவதுதான் தேவ வாக்கு என்று மார்தட்டுகிறார்கள்…..
இப்போ வேறே….
நாம் எடுத்துக்கொள்ளபடுவோமோ என்ற குழப்பம்…….
இப்படி இயேசுவை குறித்து குழம்பியும் குழப்பியும் வருகிறவர்கள் இடறலாயிருக்கிறார்கள்…..

தற்சமயம் 2 வித இறையியல் சித்தாந்தங்கள் அதிகம் உலாவுகின்றன…

1. நவீன இறையியல்……
2. ஒத்துபோகும் இறையியல் ஆகும்….
எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு……
நாம் இயேசுவை குறித்து இடறலடையாமல் அவரை ஏற்றுக்கொண்டு அவர் போல வாழ பிரயாசப்படுவோம்….
உலக ஆதிக்க போட்டிகளிலிருந்து விலகி உங்கள் ஆத்துமாவை காத்துக் கொள்ளுங்கள்….

இயேசுகிறிஸ்து……
சிலருக்கு அற்புதம் அதிசயம் செய்கிறவர்,
சிலருக்கு உத்தம புத்திரன்,
சிலருக்கு தேவகுமாரன்,
சிலருக்கு புராணபுருஷன்
சிலருக்கு சமுதாய சிற்பி
சிலருக்கு நல்வழி காட்டியவர்
சிலருக்கு மனிதரில் மாணிக்கம்….
ஆனால்…..
எனக்கோ…..
என் பாவங்களை கழுவி என்னை பரிசுத்தமாக்கி நான் பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைக்க அவர் தன்னையே பலியாக்கி மரித்து அடக்கம் செய்யபட்டு மூன்றாம் நாள் உயிருடன் எழும்பி பரலோகம் சென்று சீக்கிரம் வருவேன் என்றவர்…
வருவேன் என்றவர் வரப்போகிறார்…..
அவரே இயேசு….

ADD YOUR COMMENT

Powered By Indic IME