இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம்

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம்.

This is the bread which comes down from heaven, that one may eat of it and not die. (John6:50) 
Nu6:15; Ps133:3; Mt22:4; Lk22:16; Jn6:32,33,42,51,58; Jn8:51; Jn11:25,26; Ro5:10-12; Ro6:23; Ro8:10; Ro10:6; Eph5:29.

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. (யோவான் 6:50) 

எண்ணாகமம் 6:15; சங்கீதம் 133:3; மத்தேயு 22:4; லூக்கா 22:16; யோவான் 6:32,33,42,51,58; யோவான் 8:51; யோவான் 11:25,26; ரோமர் 5:10-12; ரோமர் 6:23; ரோமர் 8:10; ரோமர் 10:6; எபேசியர் 5:29.

அப்பமும் ஜீவனும்:

இஸ்ராயேலர் மன்னாவை தின்றிருந்தும் விசுவாசத்தின் பாதையில் செல்லாததினால் மரித்தார்கள். அதைபோலவே இயேசுவை உணவாக உண்டு விசுவாசத்தின் பாதையில் செல்கிறவன் என்றும் பிழைப்பான்.

கிறிஸ்துவின் சரீரமாகிய அப்பத்தை புசிக்கிற யாவரும் விசுவாசத்தின் மக்களல்ல, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களே அவரது சரீரத்தை உணவாக உண்ண இயலும். அவர்களுக்கு ஜீவன் தரப்படுகிறது.

கிறிஸ்தவராயிருந்து திருவிருந்தை உண்பதினால் பிழைக்கவியலாது. கிறிஸ்துவை உடையவராயிருந்து விசுவாசிக்கிறவர்களே ஜீவ அப்பம் புசிப்பர், மரியாமலும் இருப்பர். அல்லாதோர் கை அப்பம் சாப்பிட்டு மரிப்பர்.

அங்கு மன்னா கொடுக்கப்பட்டு விசுவாசம் உருவாக்கப்பட்டது.
இங்கோ விசுவாசம் உருவாக்கப்பட்டு கிறிஸ்து அப்பமாக்கப்படுகிறார். அதாவது ஜீவபோஜனத்துக்காக விசுவாசம் யாவரிலும் துவங்கப்படுகிறது.

மன்னா – விசுவாசம் – ஜீவன்
விசுவாசம் – இயேசுஅப்பம் – ஜீவன் 

கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதினால் விசுவாசம் மனிதருக்குள் துவக்கப்படுகிறது.
விசுவாசிக்கிறவர்கள் கிறிஸ்துவை உணவாக உண்ணும் ஐக்கியத்துக்குள் – சபைக்குள் – சரீரத்துக்குள் வருகிறார்கள்.

அன்பானவரே..
நீர் விசுவாசித்து கிறிஸ்துவாகிய அப்பம் தின்று ஜீவனுக்குள் வழிநடத்தப்படுகிறீரென்றால் எச்சரிக்கை. 
பின்வாங்கினால் இஸ்ராயேலருக்கு கிடைத்த தண்டனையை விடவும் பலமடங்கு தண்டனைக்குள்ளாவீர் இஸ்ரயேலருக்கான அழிவு சடிதியில் வந்தது..
நமக்கு வரும் துன்பமோ வாழ்நாளெல்லாம் தொடரும் சாபமாகவே காணப்படும்.
விசுவாசத்தை மறுதலிக்கிறவன் , கவிழ்க்கிறவன், சேதப்படுத்துகிறவன் ஆபத்துக்குள்ளாகிறான்.

ஜீவன் தரும் அப்பத்தை உண்ணும் நாம் ஜீவன் பெற்றவர்கள்.
ஜீவன் பெற்ற நாம் தேவனுடைய சந்ததி, பரிசுத்த ஜாதி, மணவாட்டி.

கர்த்தாவே, உம்குமாரனை பரிபூரண உணவாக தந்து எங்களில் ஜீவனிருக்க செய்தீர். இந்த ஜீவனை ஆதியில் நாங்கள் இழந்து செத்தவர்கள் ஆனதுபோல மாறாது ஜீவனுடையவர்களாய் – ஒளியின் பிள்ளைகளாய் – பகலுக்குரியவர்களாய் நடக்க உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME