நான் கொடுக்கும் அப்பம் உலகின் ஜீவனுக்காய் நான் கொடுக்கும் என் மாம்சம்

நான் கொடுக்கும் அப்பம் உலகின் ஜீவனுக்காய் நான் கொடுக்கும் என் மாம்சம்.

The bread that I shall give is My flesh, which I shall give for the life of the world. (John 6:51)
Mt20:28;  Lk22:19; Ro7:4; 1Co11:27; 2Co5:19,21; Eph5:1,2,25-27; 1Tim2:6; Ti2:14; 1Jn2:2; 1Jn4:9,14.

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான், நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.  (யோவான் 6:51) 

மத்தேயு 20:28; லூக்கா 22:19; ரோமர் 7:4; 1கொரிந்தியர் 11:27; 2 கொரிந்தியர் 5:19,21; எபேசியர் 5:1,2,25-27; 1தீமோத்தேயு 2:6; தீத்து 2:14; 1 யோவான் 2:2; 1யோவான் 4:9,14.

நான் கொடுக்கும் என் மாம்சம்:

இந்த மாமசத்தை குறித்து இவ்வசனத்தில் 7 உண்மைகள் தரப்பட்டுள்ளன.

  • இது வானத்திலிருந்து உண்டானது.
  • இது அப்பமாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 
  • இது புசிப்புக்குரியது, உண்ணதக்கது. 
  • இது பிழைப்பூட்டுகிறது. 
  • இது உலகின் ஜீவனுக்கானது. 
  • இது கிறிஸ்து தன்னை கொடுப்பது.
  • இது இலவசமாக கொடுப்பது.

இது உண்மையான செய்தி.
இது அடையாளமாகவோ, ஆவிக்குரிய அர்த்தம் கொள்ளுவதற்காகவோ தரப்பட்டதல்ல.
பழைய ஏற்பாட்டில் பலிமுறைகள் உண்டாயிருந்தது உண்மையானால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து பலி உண்டாயிருந்தது என்பதும் உண்மையே.

அவரது சரீரத்தை உணவாக தருகிறார் என்பது விவாதிப்பதற்கான பாடதிட்டம் அல்ல, அவரவரின் தனிப்பட்ட வாழ்வில் இயேசுவை அனுபவிப்பதாகும்.

அவர் நம்மோடு போஜனம்பண்ண வருகிறாரென்றால், முதலில் அவரையே உணவாக உட்கொள்ளும் அனுபவத்துக்குள் கடந்து போக வேண்டும்.

இயேசு தன்னை தருவதை கொச்சைபடுத்த வேண்டாம். அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். திரித்து பார்க்க வேண்டாம்.

அவர் தன்னை தருவதை அப்படியே ஏற்றுகொள்ளுங்கள்.

முழு உலகிற்கும் அவர் ஒருவரின் மாம்சமே போதுமானது.
ஒரு மனிதனால் பாவம் உண்டானதென்றால்,
ஒரு சாத்தானால் தீமை உண்டாகிறதென்றால்
ஒரு இயேசுவால் முழு உலகிற்கும் ஜீவன், நன்மை உண்டாகும்.

நம்புங்கள்…
கேள்வி கேட்க வேண்டாம்.
புரிந்து கொள்ளுங்கள்.
சந்தேகம் கொள்ளாதீர்.

கர்த்தாவே உம் குமாரனின் மாமசத்தை அவரே கொடுக்கும்படியாக செய்தமைக்காக நன்றி. தங்களுக்குரியதை கொடுப்பவர் உண்டு. தன்னையே தருகிறவர் இல்லாத இவ்வுலகில் தன்னையே தந்த இயேசுவை பின்பற்றி நாங்களும் எங்களையே கொடுத்துவாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME