பரிசேயரும் அவனை நோக்கி நீ எப்படி பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள்.
Then the Pharisees also asked him again how he had received his sight. (John 9:14,15)
Mt12:1-15; Mk2:23-28; Mk3:1-6; Lk6:1-11; Lk13:10-17; Jn5:9,16; Jn7:21-23.
இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. (யோவான் 9:14)
ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.(யோவான் 9:15)
மத்தேயு 12:1-15; மாற்கு 2:23-28; மாற்கு 3:1-6; லூக்கா 6:1-11; லூக்கா 13:10-17; யோவான் 5:9,16; யோவான் 7:21-23
சாட்சியங்களை – தேவனுடைய கிரியைகளை ஆராயும் மனோபாவம்.
தேவன் மனைதனை செம்மையானவனாகவே படைத்தார். மனிதனை படைக்கு முன்பதாக அவனுடைய இவ்வுலக வாழ்வுக்காக அனைத்தையும் படைத்திருந்தார். ஆதிமனிதன் தன்னை படைத்தவர் யார் என்று ஆராய முற்படவில்லை. ஆனால் பாவம் நுழைந்து சந்தேகம் போன்றவைகள் வந்தபோது எல்லாவற்றின் மீதும் கேள்வி கேட்க தூண்டப்பட்டான் மனிதன். அவ்விதம் கேள்வி கேட்க தூண்டப்பட்டவன் நம்பிக்கையிழந்தவனாய் அனைத்தையும் ஆராய ஆரம்பித்தான்.
நல்லதா கெட்டதா என்று பார்த்து தெரிந்துகொள்வதில் தவறில்லை. நல்லது என்று தெரிந்துகொண்டதை அக்கு வேறாக ஆணி வேராக ஆராய முனைவதுதான் ஆபத்தானதாக முடிகின்றது. அனைத்தையும் படைத்தவர் எல்லாம் நல்லது என்று சொல்லிவிட்டார். நல்லது என்று சொல்லப்பட்டதை ஏன் ஆராய வேண்டும்?
பாவம் வந்து கெட்டபின்பு பிரமாணங்கள் மூலம் நன்மையை கண்டடைய வழி திறந்தார். அற்புத கிரியைகளைக் கொடுத்து நல்லதை தெரிந்துகொள்ள வைத்தார். தம் குமாரனை அனுப்பி இன்னும் சிறப்பாக்கினார். இப்பொழுது ஆவியையும் தந்துள்ளார். இதற்குமேல் ஏன் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
தேவனுடைய கிரியைகள் ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல, அனுபவிப்பதற்காகவும், தேவனுக்கு மகிமை செலுத்துவதற்காகவும், தேவனை பின்பற்றி வாழ்வதற்காகவுமே செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செய்து Phd வாங்குவதினால் தேவன் மகிமைப்படுவதில்லை. ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதில்லை. தேவனுக்கு பயன்படபோவதில்லை. தேவனுடைய கிரியைகளை ஆவியின் கண்கள் கொண்டுதான் விளங்கிக்கொள்ள முடியுமே தவிர மாம்ச மனத்தினால் விளங்கிகொள்ளவியலாது. கிரியைகளில் கிரியைகளைக் கொண்டு வரவே தேவன் நம்மை இரட்சித்துள்ளார்.
கர்த்தாவே உம் கிரியைகளை நாங்கள் அனுபவித்து, உம்மை அறியாதவர்கள் மத்தியில் அதே கிரையைகளை நடப்பிக்க எங்களை செம்மைபடுத்தும்.