இயேசு ஏன் பிறந்தார்?
லூக்கா 1:27-38.
மனிதனாக அவர் பிறந்ததினால் தான் நாம் இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிறோம்.
வரலாற்றில் அவர் பிறந்ததினால் நாம் அவரின் பிறப்பை கொண்டாடுகிறோம்.
இந்த இயேசு ஏன் மனிதனாக இந்த பூமியில் பிறந்தார் என்பதை விவிலியம் எடுத்துக்கூறும் செய்தியுடன் இணைந்து தியானிப்போம்.
- 1தீமோத்தேயு 1:15. பாவிகளை இரட்சிக்க இயேசு வந்தார்.
பாவம் செய்தவர் சாவர். எபி9:26.
ஆனால் அவர்களை மீட்க வந்தார்.
பாவம் செய்தாயா பயப்படாதே..
அவர் இரட்சிப்பார்.
இனி பாவம் செய்யாதே… - மாற்கு 10:45. ஊழியம் செய்யவும், ஜீவனை கொடுக்கவும் வந்தார். வார்த்தையால் சேவை செய்வதல்ல கிறிஸ்தவம்,
முன்வந்து சேவை செய்வதே கிறிஸ்தவம்.
சேவை செய்வதில் பேர்புகழ் கிடைக்காது.
ஜீவன் போய்விடும் நேரமும் வரும். ஆனால் பரலோகில் கனம் உண்டு. யோவான் 12:26. - மத்தேயு 18:11. கெட்டுபோனதை இரட்சிக்க வந்தார். லூக்9:55.
மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறவர்.
தூக்கி ஏறியப்படுகிறதற்கல்ல,
நரகில் – குப்பையில் தள்ளப்படுவதற்கல்ல.
இரட்சித்து பெரியவங்களோடு உட்கார வைக்கவும், பெரிய நாமத்தை தரவும் வந்தார். - யோவான் 18:37,38. சத்தியத்திற்கு சாட்சி கொடுக்க வந்தார்.
இந்த சத்தியத்தை ஏற்றுக்கொண்டால் விடுதலை. யோவான் 8:32. - யோவான் 18:36. பூமியை ஆள்வதற்காக வரவில்லை. மனித உள்ளங்களில் ஆளும்படி வந்தார்.
உலகை ஜெயிப்பதைவிடவும் கடினமானது, மனித சிந்தையை ஜெயிப்பதுவே.
அவர் மனிதரின் உள்ளத்தில் ஆளுகை செய்ய வந்தார்.
உன் வீட்டுக்கு தலைவராயிருக்க வந்தார். உன் வாழ்வுக்கு தலைவராயிருக்க வந்தார். - யோவான் 3:17. உலகை ஆக்கினைக்குட்படுத்த அல்ல, உலகம் இரட்சிக்கபடுவதற்காகவே வந்தார். 1 யோவான் 4:14.
இது தண்டனையின் காலமல்ல, கிருபையின் காலம்.
கிருபை பொறுத்திருக்கும். - யோவான் 14:27. சமாதானத்தை கொடுப்பதற்காக இயேசு பிறந்தார். நம்மை சமாதான வழியிலே நடத்த -லூக்கா 1:79.
அவர் சமாதான பிரபு – ஏசா9:6. - யோவான் 14:8. பிதாவை அறிந்துக்கொள்ளச் செய்யும்படி வந்தார். யோவான் 12:45;
அவரே தேவனை வெளிபடுத்துகிறவர். 1:18. - யோவான் 3:16. தேவ அன்பை நமக்குள் ஊற்ற, நம்மில் வெளிபடுத்த, உலகில் காண்பிக்க பிறந்தார். 1 யோவா 4:9,10. ரோமர் 5:5.
- யோவான் 1:12,13. நாம் தேவனுடைய ஜனமாக, மக்களாக மாற்றப்படும்படி அவர் பிறந்தார். 1 பேதுரு 2:9.
- பாவம், சாபம், பிசாசு போன்றவற்றிற்கு முடிவு உண்டாக்கும்படிக்கு இயேசு மனிதனாக பிறந்தார். 1 யோவான் 3:8c. பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கே இயேசு பிறந்தார். தூய்மை, ஆசீர்வாதம், தெய்வத்துவம் உண்டாகும்படி பிறந்தார்.
- தேவ மகிமை பூமியின் எவ்விடத்திலும் வெளிப்படும்படிக்கு பிறந்தார். லூக்கா 2:9. மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது. நாம் மகிமைபடும்படி அவர் பிறந்தார்.
அன்பானவர்களே அவரின் பிறப்பை நாம் நினைவுகூராமல் இருப்பது நல்லதல்ல.