ஆபிரகாம் என் நாளைக்காண ஆசையாயிருந்தான். கண்டு களிகூர்ந்தான்.
Your father Abraham rejoiced to see My day, and he saw it and was glad. (John 8:56)
Gen17:17; Gen22:18; Mal2:10; Mt13:16,17; Mt23:39; Lk2:28-32; Lk10:24; Jn6:40; Jn8:40; Ro4:1; Gal3:7-9,16; Heb11:13,39; Heb13:8; 1Pet1:10-12.
உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான் என்றார். (யோவான் 8:56)
ஆதியாகமம் 17:17; ஆதியாகமம் 22:18; மல்கியா 2:10; மத்தேயு 13:16,17; மத்தேயு 23:39; லூக்கா 2:28-32; லூக்கா 10:24; யோவான் 6:40; யோவான் 8:40; ரோமர் 4:1; கலாத்தியர் 3:7-9,16; எபிரெயர் 11:13,39; எபிரெயர் 13:8; 1பேதுரு 1:10-12.
இயேசுவைக் கண்டு களிகூர்ந்தான்.
இயேசுகிறிஸ்து பூமியில் மனிதனாக தோன்றுவதற்கும் 2000 வருடங்கள் முன்பதாக வாழ்ந்த ஆபிரகாம் இயேசுவைக் கண்டு களிகூர்ந்தான் என்பது யூதர்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் உலகத்தாரால் எப்படி புரிந்துகொள்ளமுடியும்?
இயேசுவோடு வாழ்ந்து இயேசுவை கண்டுகொண்டவர்கள் உண்டு. அவ்விதம் இயேசுவை முகமுகமாய் தரிசித்தவர்களே இயேசுவுக்கு விரோதமாக ஒருமித்து எழும்பி அவரை பகைத்தனர்.
இயேசுவுக்கு முன்பதாகவே வாழ்ந்த ஆபிரகாம் இயேசுவைக் கண்டுள்ளார். தேவனுக்கு பிரியமானவனாக இருந்த ஆபிரகாமுக்கு தேவன் தம் மகன் இயேசுவைக் குறித்து வெளிப்பாடுகளைக் கொடுத்திருக்க வேண்டும். அத்தகைய தரிசனங்களை பெற்று களிகூருவதற்கு காரணங்கள் உண்டு.
ஆபிரகாம் தேவனை தொழுதுகொள்ளுவதில் அதிதீவிரமாக இருந்துள்ளார். எப்பொழுதெல்லாம் இடம்பெயருகின்றாரோ, எப்பொழுதெல்லாம் தேவசத்தம் கேட்கின்றாரோ, எப்பொழுதெல்லாம் கஷ்டமான சூழல் உண்டாகின்றதோ அப்பொழுதெல்லாம் பலிசெலுத்தி தேவனை தொழுதுகொள்ளுவது வழக்கம். ஆபிரகாமின் இத்தகைய தொழுகையே இயேசுவை காணவும், களிகூரவும் பண்ணியது.
அன்பானவர்களே! நீங்கள் எத்தகைய தொழுகையாளர்களாயுள்ளீர்கள்? நமது தொழுகை வரப்போகிற இயேசுவை இராஜாவாக கண்டு தெய்வபயமுடையவர்களாய், ஒழுக்கத்தில் உத்தமர்களாய், விசுவாசத்தில் மாயமில்லாதவர்களாய் வாழ்வோம்.
கர்த்தவே உம் மகனைக் காண ஆபிரகாம் உம்மை தொழுகை செய்ததுபோல நாங்களும் உம் மகனின் மகத்துவங்களைக் காண உம்மை ஆவியோடும், உண்மையோடும் தொழுகை செய்ய பெலன் தாரும்.