கிறிஸ்தவன் வேலை செய்யாமல் சாப்பிடலாமா

கிறிஸ்தவன் வேலை செய்யாமல் சாப்பிடலாமா?

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்து காலம் கடத்துகிறார்கள்.

தேவன் தம்முடைய பிள்ளைகள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இல்லை.

அவர்கள் வேலை செய்து பாடுபட வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். அவர்கள் வேலை செய்து அதன்மூலமாக வரக்கூடிய வருமானத்தில் தான் தங்களுடைய எல்லா தேவைகளையும் சந்திக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்.

தேவன் முதல் மனிதனாகிய ஆதாமை உருவாக்கின பின்பு ஏதேன் தோட்டத்தில் அவனை வேலை செய்யும்படியாக ஆதாமை ஏற்படுத்தினார்.

தேவன் மண்ணினாலே மனுஷனை உண்டாக்கி பின்பு அவனை அழைத்துக் கொண்டு  ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும் அதை பாதுகாக்கவும் வைத்தார்.

ஆதியாகமம் 2:15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

  • ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாமை சோம்பேறியாக வைக்காமல்  மிகப் பெரிய வேலையை செய்யும் படியாக வைத்து இருந்தார்.
  • ஏதேன் தோட்டத்தை ஆதாம் பண்படுத்தவும் காக்கவும் வைத்து இருந்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் ஆறு நாளும் வேலை செய்ய வேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்தார்.

யாத்திராகமம் 20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

யாத்திராகமம் 35:2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ,,,

  • இஸ்ரவேல் ஜனங்கள் ஆறுநாளும் வேலை செய்ய வேண்டும் என்றும் ஏழாம் நாளில் ஓய்ந்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்.
  • ஆனால் லேவியர்கள் ஏழு நாளும் வேலை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்.

மனிதன் தன் முகத்தின் வேர்வையால் தான் ஆகாரம் புசிக்க வேண்டும் என்றார்.

ஆதியாகமம் 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

சங்கீதம் 104:23 அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.

  • ஆதாமிடத்தில் தேவன்  மரித்து பூமிக்கு திரும்பு மட்டும் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிக்க வேண்டும் என்றார்.

வேலை செய்ய மனது இல்லாதிருக்கிறவன் சோம்பேறியாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 21:25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

  • சோம்பேறி ஆசைபடுகிறான். ஆனால் வேலை செய்வதற்கு ஒருபோதும் வேலை செய்ய சம்மதிக்க மாட்டான்.
  • வேலை செய்யாமல் அவன் ஆசைபடுவதினால் அவனுடைய ஆசையே அவனைக் கொல்லும்.

வேலையாள் தான் தன் ஆகாரத்திற்கு பாத்திரவனாக இருக்கிறார் என்று இயேசு போதித்தார்.

மத்தேயு 10:10 ,,, வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

  • வேலை செய்யக்கூடியவர்கள் மாத்திரமே தாங்கள் சாப்பிடக்கூடிய ஆகாரத்திற்கு பாத்திரவான்களாக இருக்கிறார்கள்.
  • சோம்பேறியாக இருந்து வேலை செய்யாமல் ஒருபோதும் நாம் சாப்பிடக் கூடாது.

கிறிஸ்தவர்கள் பாவமான எந்த வேலையும் செய்து பிழைக்கக்கூடாது.

சட்டத்திற்கு புறம்பான எந்த வேலையும் செய்து பிழைக்கக்கூடாது.

எபேசியர் 4:28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.

  • வேலை செய்யக்கூடிய கிறிஸ்தவர்கள்  நல்ல  வேலை செய்து பிழைக்க வேண்டும்.
  • பாவமான வேலை செய்து நாம் பிழைப்பை நடத்துக் கூடாது.
  • போதை வஸ்துகளை விற்பனை செய்தோ, திருடியோ கொள்ளையடித்தோ பிறரை ஏமாற்றியோ நாம் வேலை செய்யக்கூடாது.

பவுல் தனக்கும் தன்னோடிருந்தவர்களுக்காக வேலை செய்தார்.

அப்போஸ்தலர் 20:34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.

பவுலும் அவரோடு கூட இருந்தவர்களும் வேலை செய்து சாப்பிட்டார்கள்.

1கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; ,,,

வேலை செய்து சாப்பிட வேண்டும் என்ற முறைமையை பவுல் சபையின் விசுவாசிகளுக்கு மாதிரியாக காண்பித்து இருந்தார்.

2தெசலோனிக்கேயர் 3:6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

  • சபையில் இருக்கக்கூடிய சகோதரன் வேலை செய்யாமல் சாப்பிடுவார் என்றால் அவர் ஒழுங்கற்று நடக்கிற சகோதரனாய் இருக்கிறார்.
  • அப்படிப்பட்ட சகோதரனுக்கு நாம் புத்தி சொல்லி வேண்டும். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவரை விட்டு நாம் விலக வேண்டும்.

கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலர்களிடத்தில் என்ன முறைமையை ஏற்றுக் கொண்டு இருந்தார்கள்?

2தெசலோனிக்கேயர் 3:7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,

2தெசலோனிக்கேயர் 3:8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

1) ஒழுங்கற்று நடக்கக் கூடாது.

2) யாரிடத்திலும் இலவசமாய் சாப்பிடக் கூடாது.

3) யாருக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட வேண்டும்.

பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஏன் வேலை செய்து சாப்பிட்டார்கள்?

2தெசலோனிக்கேயர் 3:9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.

  • பவுல் அவரோடு இருந்தவர்களும் யார் மீது தன் பாரத்தை வைக்காமல் வேலை செய்து சாப்பிட்டார்கள்.
  • நாமும் அவர்களைப் போல வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று மாதிரியை காண்பித்து இருக்கிறார்கள்.

இந்த தெசலோனிக்கேய சகோதரர்கள் எந்தவிசயத்தில் ஒழுங்கற்று நடக்கிறார்கள்?

2தெசலோனிக்கேயர் 3:11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

  • யாதொரு வேலையும் செய்யாமல் வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்று இருந்து இருக்கிறார்கள்.

ஒரு சகோதரன் வேலை செய்யவில்லை என்றால் அவர் சாப்பிடலாமா?

2தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

  • ஒரு கிறிஸ்தவனுக்கு வேலை செய்யவே மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.

இந்த சகோதரனுக்கு கிறிஸ்துவின் கட்டளை என்ன?

2தெசலோனிக்கேயர் 3:12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

  • கிறிஸ்தவன் அமைதலோடே இருக்கிற நல்ல வேலை செய்து தங்கள் சொந்த சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும்.
  • அரசாங்கத்திற்கு விரோதமாக இருக்கிற எந்த வேலையும் அவர்கள் செய்யக்கூடாது நல்ல வேலை செய்து தான் பிழைக்க வேண்டும்.

இந்த சகோதரன் இந்த சத்திய வசனங்களுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் என்ன செய்வது?

2தெசலோனிக்கேயர் 3:14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

  • அந்த சகோதரனை குறித்துக் கொண்டு அவன் வெட்கப்படும்படி அவனோடு கலவாதிருக்க வேண்டும்.

கலவாதிருப்பது என்பது அவனோடு போஜனபானம் பண்ணக்கூடாது.

1கொரிந்தியர் 5:11 ,,,, அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

யூதர்கள் புறஜாதிகளுடன் கலந்திருக்க மாட்டார்கள்.

அப்போஸ்தலர் 11:2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:

அப்போஸ்தலர் 11:3 விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.

கலாத்தியர் 2:12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.

  • ஒரு சகோதரன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை என்றால் அவனோடு புசிக்கவும், குடிக்கவும் கூடாது.

அந்த வேலை செய்யாத சகோதரன் நமக்கு சத்துருவாக இருக்கிறானா?

2தெசலோனிக்கேயர் 3:15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

  • அவனை சகோதரனாக எண்ணி அவனுக்குப் புத்தி சொல்ல வேண்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME