வியாதி பிரச்சனைகள்
வியாதியின் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?
கிறிஸ்தவர்கள் எந்த சூழ்நிலையில் தற்கொலை செய்யக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம்
சிலர் வியாதின் வேதனை தாங்க முடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.
அப்படி தற்கொலை செய்கிறவர்கள் பூமிக்குரிய வியாதியின் வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்டாலும் இதைவிட நித்திய வேதனை அதிக கொடுமையாக இருக்குமே அங்கே என்ன செய்ய முடியும்?
நிறைய பேர் சொல்லுகிறார்கள் பரிசுத்தவான்களுக்கு வியாதியே வராது அப்படி வந்தால் பாவம் செய்தால் தான் வியாதி வரும் என்கிறார்கள்.
வியாதிக்கு காரணம் சாத்தான் தான் அவன் நமக்கு வியாதியைக் கொடுத்து நம்மை துன்பப்படுத்துவான் என்கிறார்கள்.
சாத்தான் வியாதியைக் கொடுப்பான். இயேசு சுகமாக்குவார் என்கிறார்கள்.
இது சரியான சத்தியமா?
தேவன் இரக்கமுள்ளவர் மனவுருக்கமுள்ளவர் தயவுள்ளவர் அன்புள்ளவர் எனவே அவர் வியாதிகளை எல்லாம் நமக்கு தரமாட்டார் என்று போதிக்கிறார்கள்.
தேவன் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவர் என்றோ அவர் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார் என்றோ பாவம் செய்தால் நீதியை சரிகட்டக்கூடிய தேவன் என்றோ சகலத்தையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் என்றோ பெரும்பாலும் யாரும் போதிப்பது இல்லை.
தேவன் தான் சகலத்தையும் நடப்பிக்கிறவர் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
கொல்லுகிறவரும் அவர் தான் உயிர்ப்பிக்கிறவரும் அவர் தான்.
1சாமுவேல் 2:6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
ஒரு மனுஷனை தரித்திரம் அடைய செய்கிறவரும் அவர் தான் ஐஸ்வர்யம் அடையப்பண்ணுகிறவரும் அவர் தான்.
1சாமுவேல் 2:7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
சிறியவனைப் புழுதியிலிருந்து எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறவர் அவர் தான்.
1சாமுவேல் 2:8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
ஒரு மனிதனுக்கு வியாதி வந்தால் அதை அனுமதிப்பவரும் தேவன்.
யாத்திராகமம் 15:26 ,,,,,,,,, நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
உபாகமம் 28:59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
உபாகமம் 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
உபாகமம் 28:61 இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
தேவனுடைய சித்தம் இல்லாமல் தலையில் இருக்கிற ஒரு முடி கூட கீழே விழாது.
வியாதியைக் கொடுக்கிறவரும் தேவன் தான் அதை குணமாக்குகிறவரும் தேவன் தான்.
உபாகமம் 32:39 நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
தேவனுடைய கைக்கு தப்புவிப்பார் யாரும் இல்லை.
யோபு விசயத்தில் தேவன் அனுமதி கொடுத்த போது தான் சாத்தான் யோபுவை பருக்களால் வாதித்தான்.
யோபு 2:6 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார்.
யோபு 2:7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
இப்படி அநேக வேத வாக்கியங்கள் இருக்கிறது.
நாம் மரணத்துக்கேதுவான வியாதிப்படும் போது வியாதியின் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா?
நம்முடைய சரீரத்தில் என்ன வியாதி வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவுக்குள்ளாக தொடர்ந்து வாழ வேண்டுமே தவிர தேவனை விட்டு விலகியோ அல்லது தற்கொலை செய்து கொள்ளவோ கூடாது.
அதற்கு வேத வாக்கியத்தில் நிறைய சாட்சிகள் இருக்கிறார்கள்.
சில சாட்சிகளை மாத்திரம் கவனிப்போம்.
தேவனுக்கு பிரியமாய் இருந்த ஈசாக்கு அந்திய நாட்களில் தன்னுடைய கண்பார்வையை முற்றிலும் இழந்தவராக இருந்தார்.
ஆதியாகமம் 27:1 ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது,
ஈசாக் அந்திய நாட்களில் கண்பார்வை இல்லாமல் போன படியால் தன் இரண்டு குமாரர்களையும் குரலை வைத்தும் தடவி பார்த்தும் தான் யாக்கோபு யார் ஏசா யார் என்பதை கண்டுப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஈசாக் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருந்த எலிசா மரணத்துக்கேதுவான வியாதில் இருந்தார்.
2இராஜாக்கள் 13:14 அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; ,,,,,,,,,,.
கர்த்தருடைய வேலையை ஓய்வில்லாமல் செய்து கொண்டு இருந்த எலிசா அந்திய நாட்களில் மரணத்துக்கேதுவான வியாதி பட்டு படுக்கையாக கிடந்தார்.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா மரணத்துக்கேதுவான வியாதியாய் இருந்தார்.
2நாளாகமம் 32:24 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்;,,,,,,,,
கர்த்தருடைய ஊழியக்காரனாகிய எப்பாப்பிரோதீத்து மரணத்துக்கேதுவான வியாதியில் இருந்தார்.
பிலிப்பியர் 2:25 மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
பிலிப்பியர் 2:26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
பிலிப்பியர் 2:27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான்.……………,,,,,
விசுவாசத்தின் குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு அடிக்கடி வயிற்றில் பெலவீனங்கள் நேரிட்டது.
1தீமோத்தேயு 5:23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.
பவுலோடு கூட இருந்த துரோப்பீமு வியாதிப்பட்டவராக இருந்தார்.
2தீமோத்தேயு 4:20,,,,,,, துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
பவுலுடைய சரீரத்தில் ஒரு பெலவீனம் இருந்தது. அது அவரைக் குட்டும் சாத்தானுடைய தூதனாய் இருந்தது.
2கொரிந்தியர் 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
பவுல் அந்த பெலவீனத்தில் மேன்மை பாராட்டினார்.
2 கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
இவர்கள் எல்லாரும் வியாதிப்பட்டு இருந்தாலும் தேவனை மாத்திரமே சேவித்தார்கள்.
தேவன் நமக்கு மரணபரியந்தம் தீராத வியாதியைக் கொடுத்தாலும் அவருடைய பூரணமான பலம் நம் மேல் விளங்கும் என்று விசுவாசிக்க வேண்டும்.
லாசரு கொடிய பருக்களால் பசியினாலும் வாதிக்கப்பட்டாலும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை தேவன் அவருடைய ஜீவனை எடுக்கிற வரையிலும் அவர் அதை சகித்து கொண்டார்.
லூக்கா 16:20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
லூக்கா 16:21அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
அவர் மரித்த போது அவரை கொண்டு போக தேவன் தம்முடைய தூதரை அனுப்பி ஆபிரகாம் மடியிலே கொண்டு போய் விடும் படி செய்தார்.
லூக்கா 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்;…….
நாம் வியாதியோடு கூட தீமையை அனுபவித்து நாம் கர்த்தருக்குள் மரிக்கின்ற போது ஆபிரகாம் மடியில் தேற்றப்படுவோம்.
லூக்கா 16:25 அதற்கு ஆபிரகாம்:,,,,,,, லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
தேவன் நம்மை வியாதியில் இருந்து விடுவித்தாலும் விடுவிக்காமற் போனாலும் அவரையே நாம் தொடர்ந்து சேவிக்க வேண்டும்.
தானியேல் 3:17 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானியேல் 4:18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
கொடுமையான வியாதிகள் இருந்தாலும் தேவன் நம்முடைய ஜீவனை எடுக்கும் வரை அதை சகித்துக் கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை செய்து நம்முடைய நித்திய ஜீவனை இழந்து போய் விடக்கூடாது.