பாவம் என்ற வார்த்தைக்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன

பாவம் என்ற வார்த்தைக்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

பாவம் என்றால் என்ன என்பதைப் பற்றிய அறிவு நமக்கு இருக்க வேண்டும்.

பாவம் என்றால் என்ன என்று கேட்டால் கிறிஸ்தவர்கள் வேத வாக்கியங்களை மேற்கோள் காண்பித்து இது எல்லாம் பாவம் இதை நாம் செய்யக்கூடாது என்பார்கள் அது உண்மை தான்.

தேவன் எதெல்லாம் பாவம் என்று சொல்லுகிறரோ அதை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது.

ஆனால் கேள்வி என்னவென்றால் பாவம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பது தான்.

பாவம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை  அநேகர் ஒவ்வொரு விளக்கங்களை கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய பரலோகத்தின் தேவன் பாவம் என்றால் அதற்கு அர்த்தம் என்ன கொடுக்கிறார் என்பதை நாம் பார்ப்போம்.

கீழே உள்ள வசனத்திலிருந்து பாவம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை நாம் பார்ப்போம்.

1Jo 2:1 (KJV)  My little children, these things write I unto you, that ye sin not. And if any man sin, we have an advocate with the Father, Jesus Christ the righteous:

1Jo 2:1 (KJV+)  My3450 little children,5040 these things5023 write1125 I unto you,5213 that2443 ye sin264 not.3361 And2532 if1437 any man5100 sin,264 we have2192 an advocate3875 with4314 the3588 Father,3962 Jesus2424 Christ5547 the righteous:1342

1யோவான் 2:1  என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

பாவம் என்பதற்கான கிரேக்க வார்த்தையின் எண் 264

G264

ἁμαρτάνω

hamartanō

ham-ar-tan’-o

Perhaps from G1 (as a negative particle) and the base of G3313; properly to miss the mark

பாவம் என்பதற்கு தேவன் கொடுக்கக்கூடிய அர்த்தம் இலக்கை தவறவிடுவது.

  • தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் நாம் கீழ்ப்படிய வேண்டிய இலக்காக இருக்கிறது.
  • அதை நாம் தவற விடும் போது அதுவே பாவமாக இருக்கிறது.

இலக்கை தவற விடுவது என்பது என்ன என்பதை ஒரு சில வசனங்களை கொண்டு நாம் கற்றுக் கொள்ளுவோம்.

அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,,,

இந்த வசனத்தின் படி நாம் பாவ மன்னிப்பை பெற வேண்டும் என்றால் தேவன் வைத்திருக்கிற இலக்கு என்ன?

மனந்திரும்பி கிறிஸ்துவின் நாமத்தினாலே பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுவது.

  • நீங்கள் தேவனுடைய வசனத்தை கேட்கிறீர்கள் மனந்திரும்புகிறீர்கள். ஆனால் ஞானஸ்நானம் பெறவில்லை அப்படியென்றால் நீங்கள் ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிய வேண்டிய இலக்கை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்.
  • இலக்கை தவற விடும் போது தேவனுடைய பார்வையில் அது தான் பாவம் ஆகிறது.

நீங்கள் இரட்சிக்கப்படுவது ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பது கிறிஸ்துவின் கட்டளை.

மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

இந்த வசனத்தின்படி நீங்கள் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். ஆனால் விசுவாசிக்கவில்லை அப்படியென்றல் என்ன சம்பவிக்கிறது?

விசுவாசம் என்ற இலக்கை தேவன் உங்களுக்கு முன்பாக வைத்து இருக்கிறார். ஆனால் அந்த இலக்கை நீங்கள் தவற விடும் போது தான் அது பாவமாகிறது.

சபை கூடிவரும் போது நாம் கூடி வரவேண்டும் என்பது தேவனுடைய கட்டளை.

எபிரெயர் 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

நீங்கள் சபை கூடிவரும் போது கூடி வருகிறீர்கள். ஆனால் அன்புக்கும் நற்கிரியைகளை நாம் ஏவப்படவில்லை என்றால் நாம் தேவன் கொடுத்த இலக்கை தவறவிடுகிறோம்.

எபிரெயர் 10:24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

சபை கூடிவரும் போது நாம் கூடி வர வேண்டும் என்பது தேவன் நமக்கு கொடுத்த  இலக்கு அதை நாம் தவறவிடும் போது என்னவாகிறது?

தேவனுடைய இலக்குக்கு (கட்டளைக்கு) நாம் கீழ்ப்படியாத போது  தான் அது பாவமாகிறது.

தேவன் நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று அநேக கட்டளைகளை கொடுத்து இருக்கிறார். அந்த இலக்குகளை  நாம் தவற விடும் போது அது தான் பாவமாகிறது.

சபைகளில் ஸ்திரீகள் பேசக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.

1கொரிந்தியர் 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

1கொரிந்தியர் 14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

1தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

  • ஸ்திரீகளுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு சபைகளில் ஸ்திரீகள் பேசாமலிருக்க (உபதேசம்) வேண்டும் என்றும் அமைதலோடு கற்றுக்கொள்ள வேண்டும் என்பது.

ஆனால் சபைகளில் ஸ்திரீகள் பேசும் (உபதேசிக்கும்) போது என்னவாகிறது?

தேவன் அவர்களுக்கு கொடுத்த இலக்கை அவர்கள் தவற விடுகிறார்கள்.

தவறவிடும் போது தான் அது பாவமாய் இருக்கிறது.

1யோவான் 3:4 ,,, நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

  • பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
  • புதிய ஏற்பாட்டு கிரேக்க வேதாகமத்தில் நியாய (பிரமாணம்) என்ற வார்த்தை இல்லை, பிரமாணம் என்ற வார்த்தை தான் இருக்கிறது.
  • நாம் பழைய ஏற்பாட்டு பிரமாணத்திற்கும், புதிய ஏற்பாட்டு பிரமாணத்திற்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மொழிப் பெயர்ப்பாளர்கள் நியாய என்ற வார்த்தையை அநேக இடங்களில்  சேர்த்து இருக்கிறார்கள்.
  • ஆகையால் பாவம் என்பது தேவன் நமக்கு கொடுத்த ஒவ்வெரு பிரமாணங்களுக்கும் (கட்டளைகளுக்கு) கீழ்ப்படியாமல் அதற்கான இலக்கை தவறவிடும் போது தான் அது பாவமாய் இருக்கிறது.
  • ஆகையால் புதிய உடன்படிக்கையில் தேவன் கொடுத்த எந்த இலக்கையும் (பிரமாணத்தையும்) தவற விடாதீர்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME