பாதாளத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கிறது?
அக்கினி கடலில் (நரகத்தில்) இன்றைக்கு யாரும் அங்கே இல்லை என்பதையும் மனிதன் கிறிஸ்துவின் நியாயதீர்ப்பு நாளுக்கு பிறகு தான் அநீதிமானாய் இருந்தால் அங்கே போவான் என்று கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
மனிதன் மரித்த பின் எங்கே போகிறான்?
எல்லா மனிதர்களும் மரித்த பின் பாதாளத்திற்கு தான் போகிறார்கள்.
தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களை ஒருவர் விசுவாசிக்கவில்லையென்றால் அவர் ஆவிக்குரிய குருடராய் தான் இருப்பார்.
இங்கே பாதாளம் என்ற வார்த்தை எபிரெய மொழியில் அந்த வார்த்தைக்கான எண் H7585.
H7585
שׁאל שׁאול
she’ôl she’ôl
sheh-ole’, sheh-ole’
From H7592; hades or – the world of the dead (as if a subterranian retreat)
இதற்கான பொருள் காணப்படாத உலகம் அல்லது மரித்தவர்களின் உலகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சத்தியத்தை சில பிரிவினைக் கூட்ட மக்கள் நம்புவது இல்லை.
காணப்படாத உலகம் என்று சொன்னவுடனே இந்த பிரிவினைக் கூட்ட மக்கள் அது கண்ணுக்கு தெரியாததினாலே அந்த உலகம் இல்லை என்கிறார்கள்.
நமக்குள்ளே மனம் இருதயம் ஆத்துமா என்ற காணப்படாத நித்திய உள்ளான மனுஷன் இருக்கிறான். அதை நாம் காண முடியாததினாலே அது இல்லை என்று ஆகிவிடுமா?
காணப்படாத உலகம் ஒன்று இருக்கிறது. அதை தேவன் சிருஷ்டித்து இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும்.
பாதாளத்தை நாம் மாம்ச கண்களால் பார்க்க முடியாது. ஆனால் மரித்தோமானால் ஆவிக்குரிய கண்களாலே அதை பார்க்க முடியும்.
தேவனுடைய பரிசுத்தவான்கள் இந்த பூமியில் உயிரோடு இருந்த போது நாம் மரித்த பிறகு பாதாளத்திற்கு போவோம் என்று விசுவாசித்தார்கள்.
யாக்கோபு தான் மரித்த பிறகு அந்த இடத்திற்கு போவேன் என்று விசுவாசித்தார்.
ஆதியாகமம் 37:35 அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
ஆதியாகமம் 44:29 நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.
யோபு பாதாளம் உண்டு என்று விசுவாசித்தார்.
யோபு 26:6 அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
அன்னாள் பாதாளம் உண்டென்று பாடினாள்.
1 சாமுவேல் 2:6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர்.
தாவீது பாதாளம் உண்டென்று விசுவாசித்தார்.
1இராஜாக்கள் 2:9 ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
சங்கீதம் 6:5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
தாவீது செய்த பாவத்தின் நிமித்தம் குழந்தை செத்து போன பின்பு அவர் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்.
2 சாமுவேல் 12:23 அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
மரித்தவர்களின் உலகத்திற்கு போன குழந்தை திரும்ப வராது என்பதையும், நான் மரிக்கும் போது குழந்தை இருக்க கூடிய இடத்திற்கு போவேன் என்பதையும் தாவீது அறிந்து இருந்தார்.
தாவீது ஒரு மனுஷன் மரிக்கின்ற போது பாதாளத்திற்கு தான் போகிறான் என்பதை அறிந்து இருந்தார்.
நீதிமொழிகளை எழுதிய ஆசிரியர் பாதாளம் உண்டென்று எழுதி இருக்கிறார்.
நீதிமொழிகள் 15:11 பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
பாதாளத்தில் ஒருவன் போய் விட்டால் அவனுடைய எந்த செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் அங்கே இல்லாமல் போய்விடும்.
பிரசங்கி 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
பாதாளத்தில் இறங்கினவன் அதில் இருந்து ஏறி வர முடியாது.
யோபு 7:9 மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
இனி அவன் தன் வீட்டுக்கு திரும்ப முடியாது.
யோபு 7:10 இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
கிறிஸ்து மாத்திரமே மூன்றாம் நாளில் பாதாளத்தில் இருந்து ஏறி வந்தவர்.
பாதாளத்திற்கு சகல அதிகாரம் உடையவர் யார்?
1சாமுவேல் 2:6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
இன்றைக்கு பாதாளத்திற்குரிய திறவுகோல்களை உடையவர் யார்?
வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
பாதாளம் தேவனுடைய பார்வைக்கு வெளியரங்கமாக இருக்கிறது.
நீீதிமொழிகள் 15:11 பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
இதைப் போல பழைய ஏற்பாட்டில் அநேக வேத வசனங்கள் இருக்கின்றன.
புதிய ஏற்பாட்டில் பாதாளம் குறித்து கிரேக்க வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பாதாளம் என்ற வார்த்தைக்கான கிரேக்க எண் G86
G86
ᾅδης
hadēs
hah’-dace
From G1 (as a negative particle) and G1492; properly unseen, that is, “Hades” or the place (state) of departed souls
கிரேக்க வேதாகமத்தில் பாதாளம் என்றால் காணப்படாத உலகம் என்று தான் இருக்கிறது.
பாதாளத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறது.
1)மேலான பாதாளம்.
2)கீழான பாதாளம்.
கீழான பாதாளம் என்பது யார் ஜீவ வழியை விட்டு விலகுகிறார்களோ அவர்கள் அங்கே போவார்கள் .
நீதிமொழிகள் 15:24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
கீழான பாதாளம் தான் வேதனையுள்ள ஸ்தலம் என்பது இந்த வசனத்தில் இருந்து நமக்கு தெரிகிறது.
லாசரு ஐஸ்வர்யவான் சம்பவத்தில் இதே பாதாளத்திற்கு தான் அவர்கள் இருவரும் சென்றார்கள்.
பாதாளத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது.
- வேதனையுள்ள ஸ்தலம் (லூக்கா 16:23)
- பரதீசு அல்லது ஆபிரகாமின் மடி அல்லது தேற்றப்படக்கூடிய ஸ்தலம் (லூக்கா 23:43; லூக்கா 16:23; லூக்கா 16:25)
கிறிஸ்து மரித்த போது பாதாளத்திற்கு தான் போனார். ஆனால் அவர் போனது மேலான பாதாளம்.
அப்போஸ்தலர் 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்
அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
ஐஸ்வர்யவான் கீழான பாதாளத்தில் இருந்து தான் தன் கண்களை ஏறெடுத்து ஆபிரகாமை கண்டான்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
இந்த ஐஸ்வர்யவான் இருந்தது கீழான பாதாளமாக இருக்கிறது.
கிறிஸ்து மரித்த போது பாதாளத்தில் உள்ள பரதீசுக்கு சென்றார்.
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பரதீசு என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கான எண் G3857
G3857
παράδεισος
paradeisos
par-ad’-i-sos
Of Oriental origin (compare [H6508]); a park, that is, (specifically) an Eden (place of future happiness, “paradise”): – paradise.
கிரேக்கத்தில் பேரடைஸ் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் பரதீசு என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைக்கு இங்கே பூங்கா என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்
பாதாளத்தில் மேலான இடமாகிய பரதீசுக்குத் தான் தரித்திரனாகிய லாசரு சென்றார்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
பாதாளத்தில் இருக்கக்கூடிய இன்னொரு பகுதி வேதனையுள்ள ஸ்தலம்.
அந்த ஸ்தலத்தில் தான் ஐஸ்வர்வான் இருந்தான்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
லூக்கா 16:24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
இந்த வேதனையுள்ள ஸ்தலத்தில் இருப்பவர்கள் தேவனை துதிப்பது இல்லை.
ஏசாயா 38:18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை.
பூமியில் மாத்திரமே நாம் தேவனை துதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏசாயா 38:19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தலத்திற்கு போய் விட்டால் அங்கே தேவனை துதிப்பதற்கு வாய்ப்பே இல்லை.
தேவன் பாவஞ்செய்த தூதர்களைத் நியாயத்தீர்ப்பு நாளுக்கு என்று அந்தகாரத்திலே அடைத்து வைத்து இருக்கிறார். இந்த தூதர்களை நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று வைத்து இருக்கிறார்.
2பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
நியாயாாதிபதிகள் 1:6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
இந்த வேத வசனங்களில் நரகம் (ஆனால் நரகம் அல்ல) என்றும் அந்தகாரம் என்றும் மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள்.
G2217
ζόφος
zophos
dzof’-os
Akin to the base of G3509; gloom (as shrouding like a cloud): – blackness, darkness, mist.
மேலே சொல்லப்பட்ட இரண்டு வசனங்களுக்கும் தேவன் இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்.
இந்த பாவம் செய்த தூதர்கள் பாதாளத்தில் அல்ல மாறாக அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சாத்தான் எங்கே இருக்கிறான்?
யோபு 1:7 கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
இந்த சாத்தான் என்பவனுக்கு தேவன் பூமியெங்கும் உலாவுவதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறார்.
இவனுக்கு தேவன் உலகத்தின் சகல ராஜ்யங்களின் அதிகாரத்தையும் மகிமையையும் ஒப்புக் கொடுத்து இருந்தார்.
லூக்கா 4:5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
லூக்கா 4:6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
மத்தேயு 4:1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
எபிரெயர் 2:10 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
இயேசு கிறிஸ்து எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாத பிரதான ஆசாரியராய் இருக்கிறார்.
கிறிஸ்து மாத்திரம் அல்ல நமக்கு வரக்கூடிய சோதனைகளில் நாம் ஜெயிக்கும் போது தான் நாமும் பூரணராக முடியும்.
நமக்கும் இந்த சாத்தான் மூலமாக தான் அநேக சோதனைகள் வரும்.
1பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
சாத்தானுக்கு கீழாக பொல்லாத ஆவிகளும் இருக்கிறது
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
அவனுடைய எல்லா தந்திரங்களையும் ஜெயிக்க தேவன் நமக்கு தம்முடைய சர்வாயுத வர்க்கங்களைக் கொடுத்து இருக்கிறார்.
எபேசியர் 6:13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் உங்களுக்கு காண்பித்தது எல்லாம் தேவனுடைய வார்த்தைகள் மாத்திரமே. இது எங்களுடைய சொந்த உபதேசம் இல்லை.
1கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
1கொரிந்தியர் 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
1கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.