பத்துக்கட்டளையைப் பார்க்கிலும் மேலான பிரமாணம் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது

பத்துக்கட்டளையைப் பார்க்கிலும் மேலான பிரமாணம் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது

ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்கள் பத்துக்கட்டளை மேலானது என்றும் அது பரிசுத்தமானது என்றும் அதை ஆசரிக்காதவர்களை மகா பாவிகள் என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

புதிய பிரமாணம் எவ்வளவு மேன்மையானது. இந்த ஒரு வசனமே போதுமானது.

எபிரெயர் 2:3: முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

எபிரெயர் 2:4: அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

ஆனால் அவர்கள் இந்த வசனங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்த பத்துக்கட்டளையைக் காட்டிலும் மேலான புதிய பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பத்துக்கற்பனையும் புதிய கட்டளையும்.

1) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

புதிய பிரமாணம்:
1கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

2) நீ உனக்கு யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உண்டாக்க வேண்டாம் நீ உனக்கு வேண்டாம்.

யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;

புதிய பிரமாணம்
1கொரிந்தியர் 8:4 ,,, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
1கொரிந்தியர் 10:7 ,,, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
1கொரிந்தியர் 10:14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

புதிய ஏற்பாட்டிலும் பொருளாசை விக்கிரக ஆராதனையாக இருக்கிறது.

எபேசியர் 5:5 … விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.

கொலோசெயர் 3:5 … விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

3) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

யாத்திராகமம் 20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

புதிய பிரமாணம்:
வீணிலே வழங்குவது என்பது பொய்யாணை ஈடுவது
மத்தேயு 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

எபேசியர் 4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

4) ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

புதிய பிரமாணம்:
கிறிஸ்து உயிர்தெழுந்த வாரத்தின் முதல் நாள் பரலோகத்தின் தேவனை அப்பம் பிட்டு ஆராதிக்கக்கூடிய நாள்.

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

எபிரெயர் 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாய் வாழ வேண்டும்.
2கொரிந்தியர் 7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

2கொரிந்தியர் 4:16 ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

4) உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

புதிய பிரமாணம்:
புதிய ஏற்பாட்டில் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.

எபேசியர் 6:1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

எபேசியர் 6:2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,

எபேசியர் 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

கொலோசெயர் 3:20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

5) கொலை செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:13 கொலை செய்யாதிருப்பாயாக.

புதிய பிரமாணம்:
1பேதுரு 4:15 ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.

தன் சகோதரனை பகைத்தாலே அவன் மனுஷ கொலைபாதகனாக இருக்கிறான்
1யோவான் 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

6) விபசாரம் செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.

புதிய பிரமாணம்
கொலோசெயர் 3:5 ஆகையால், விபசாரம், ,,,,ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பது விபசாரமாக இருக்கிறது,
மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

உலகத்தை அன்பு கூறுகிறவர்கள் விபசாரகாரர்களாக இருக்கிறார்கள்.
யாக்கோபு 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

8) களவு செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:15 களவு செய்யாதிருப்பாயாக.

புதிய பிரமாணம்
1கொரிந்தியர் 6:10 திருடரும், ,,,,,தேவனுடை ய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
எபேசியர் 4:28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
1பேதுரு 4:15 ,,, திருடனாயாவது, ,,, பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
தீத்து 2:10 ,,,, திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.

9) பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

புதிய பிரமாணம்
எபேசியர் 4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
ரோமர் 13:9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

10) பிறனுடைய எதுவொன்றையும் இச்சியாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; ,,,,பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

புதிய பிரமாணம்
ரோமர் 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
1தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1தீமோத்தேயு 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

இந்த வசனங்களே புதிய பிரமாணம் எவ்வளவு மேன்மையானது என்று சொல்லுகிறது.

புதிய பிரமாணம் உள்ளான மனுஷனை சுத்தப்படுத்தி புறம்பான மனுஷனுக்கு வெளிச்சம் கொடுக்கிறது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME