நித்ய பாதுகாப்பு

நித்ய பாதுகாப்பு

நித்ய பாதுகாப்பு தேவையா?

நமது மீறுதலினாலே, நமது மாம்ச இச்சைகளினாலே, நமது பெருமையினாலே, நமது மாம்சீக வைராக்கியத்தினாலே இழந்த பாதுகாப்பை மீட்டுத் தருகிறார்.
நமது பெற்றோர்கள் தரமுடியாத பாதுகாப்பை அவர் தருகிறார். ஏனெனில் நமக்கு நிரந்தர பாதுகாப்பைத்தர, நம்மைப்போல அவர்களும் இயலாதவர்கள் அதுமாத்திரமல்ல நமக்கு முன்னே நம்மை விட்டு கடந்து போகிறவர்கள்.
நம்மால் முடியாததை, அவர் நம்மைப் போல் வந்து, நமது மிகுந்த சுய இச்சையைத் உண்டான தண்டனையை அவர் முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டு, நமக்காக தரித்து, உயிர்த்தெழுந்த, நித்ய தேவனாய் சகல அதிகாரத்தையும் பெற்றவராய் நமக்கு பாதுகாப்பு தர வீற்றிருக்கிறார்.
அவருக்கு முடிவு இல்லை! முதலும்முடிவுமானவர் இவ்வுலகம் முடிந்தும் அவர் வீற்றிருக்கிறார், பெற்ற பாதுகாப்பை இழந்து விடாதபடி, நம்முடைய இச்சைகளிலிருந்து(அவரது ஆவி மூலம்) பாதுகாக்கிறார், நம்மை நித்ய பாதுகாப்பிலிருந்து விலகும்படிசெய்ய வைராக்கியத்தோடு செயல்படுகிற சாத்தானைக் காலின் மிதிக்கத்தக்க அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். அவர் ஒருவரால் மாத்திரமே நாம்நித்ய பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
அவர் தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து!!

ADD YOUR COMMENT

Powered By Indic IME