இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையில் வரும் போது என்ன சம்பவிக்கும்?
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் கூட இயேசு கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பது இல்லை.
இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் வருகை இருக்காது என்று அநேக பரியாசக்காரர்கள் பரியாசம் பண்ணுவார்கள் என்று தேவன் முன்னுரைத்து இருக்கிறார்.
2பேதுரு 3:3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
2பேதுரு 3:4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
தேவனுடைய வார்த்தைகள் எவ்வளவு வல்லமையுள்ளது என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
2பேதுரு 3:5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,
முதல் உலகமானது தேவனுடைய வார்த்தையின் படியே ஜலப்பிரளயத்தினாலே அழிக்கப்பட்டது.
2பேதுரு 3:6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
இரண்டாம் உலகமானது அதே தேவனுடைய வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு இருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் எச்சரிக்கிறார்.
2பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவின் வருகை ஏன் தாமதப்படுகிறது?
2பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறபடியால் கிறிஸ்துவின் வருகை தாமதமாகிறது.
இயேசு கிறிஸ்து வரும் போது என்ன சம்பவிக்கும்?
இயேசு கிறிஸ்து வரும் போது வானங்கள் மடமட என்று அகன்றுபோம்.
2பேதுரு 3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம்,,,,,,
இயேசு கிறிஸ்து எப்படி இறங்கி வருவார் என்பதை நாம் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
1தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; ,,,,,,,,
அவர் வரும் போது என்ன சம்பவிக்கும்?
1)கர்த்தர் ஆரவாரத்தோடு வருவார்.
2)பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார்.
3)தேவ எக்காளத்தோடு வருவார்.
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படுவார்.
2தெசலோனிக்கேயர் 1:8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் அந்த சத்தத்தை கேட்க முடியும் அந்த காட்சியையும் பார்க்க முடியும்.
பிரதான தூதனுடைய சத்தம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
வெளி 14:7 மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.
அந்த சத்தத்தையும் அந்த காட்சியையும் காணக்கூடியவர்கள் எப்படி நடுங்குவார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
கிறிஸ்து வரும் போது ஜீவாலித்து எரிகிற அக்கினி, ஆராவாரம் பிரதான தூதனுடைய சத்தம், தேவ எக்காளம் இப்படிப்பட்ட சத்தங்களோடும் காட்சிகளோடும் வரும் போது எல்லாரும் பயந்து நடுங்கி வானத்தை நோக்கி பார்ப்பார்கள்.
இயேசு கிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட தரிசனமாவார்.
1தெசலோனிக்கேயர் 3:13 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, ,,,,,,,,
இப்போது கேள்வி என்னவென்றால் யார் அந்த பரிசுத்தவான்கள்?
தேவனுடைய சமுகத்தில் இருக்கக்கூடிய தேவ தூதர்கள் பரிசுத்தவான்களாய் இருக்கிறார்கள்.
உபாகமம் 33:2 கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
தானியேல் 4:13, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
தானியேல் 8:13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: ,,,,,,,
சகரியா 14:5 ,,,,,, என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
யூதா 15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
பரிசுத்தவான்கள் என்பவர்கள் தேவ தூதர்கள் என்பதை இந்த வசனத்தில் இருந்து பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெளிவு படுத்துகிறார்.
இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டதான மகிமையோட வரப்போகிறார்?
லூக்கா 9:26 என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
இயேசு கிறிஸ்து மூன்று விதமான மகிமையோடு வரப்போகிறார்
1) பிதாவின் மகிமை
2) கிறிஸ்துவின் (இயேசு) மகிமை
3) தேவ தூதர்களின் மகிமை
இப்படிப்பட்ட மகிமையோடு அவர் வரும் போது அந்த காட்சி எவ்வளவு மகிமையுள்ளதாக நமக்கு இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.