பிரசங்கம்

சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலே பேதுரு என்ன பிரசங்கம் செய்தார்?

ஒன்றான மெய் சபையைக் குறித்த சத்தியத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபையானது ஸ்தாபிக்கப்பட்டத்தைக் குறித்து வசன ஆதாரத்தோடு பார்த்து இருக்கிறோம்.

இப்போது பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு அங்கே இருந்த யூதர்கள் எப்படி தேவனுடைய ராஜ்யமாகிய சபையிலே சேர்க்கப்பட்டார்கள் என்பதைக்  குறித்து பார்ப்போம்.

கிறிஸ்து பரமேறி போகும் போது என்ன கட்டளையிட்டார்?

Luk 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

இயேசு கிறிஸ்து மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேமில் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

  • அதே போல் அப்போஸ்தலர்கள் எருசலேமில் காத்து இருந்த போது பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று பல பாஷைகளில் தேவனுடைய மகத்துவங்களை  பேசினார்கள்.

கிறிஸ்து பேதுருவுக்கு வாக்களித்தது போல பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை அவருக்கு கொடுத்தார்.

Mat 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

பேதுரு முதல் சுவிசேஷ பிரசங்கம் செய்தார்.

அவர் என்ன பிரசங்கம் செய்தார்?

அவர்கள்(அப்போஸ்தலர்கள்) பெற்றுக் கொண்ட அந்த ஆவிக்குரிய வரங்கள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் என்பதை அவர்களுக்கு மேற்கோள் காண்பித்தார்.

Act 2:14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

Act 2:15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.

Act 2:16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

Act 2:17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

Act 2:18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.

Act 2:19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

Act 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

இந்ததீர்க்கதரிசன நிறைவேறும் போது இப்போது இயேசுவைப் பற்றி பிரசங்கித்தார்.

Act 2:21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்து தேவனிடத்தில் இருந்து வந்தவர் என்பதை நிரூபிப்பதற்கு அவர் செய்த அடையாளங்களும் அற்புதங்களும் சாட்சியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தினார்.

Act 2:22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

தேவனுடைய தீர்மானத்தின்படி அவர் பாடுபட்டு சிலுவைக்கு போனதை மேற்கோள் காண்பித்தார்.

Act 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

தேவன்அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதையும் ஆதாரத்தோடு பேதுரு நிரூபித்தார்.

Act 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

தாவீது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவார் என்பதை தீர்க்கதரிசனமாக உரைத்து இருக்கிறார் என்பதையும் வசன ஆதாரத்தோடு அவர்களுக்கு விவரித்து காண்பித்தார்.

Act 2:25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;

Act 2:26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

Act 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

Act 2:28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

Act 2:29 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

Act 2:30 அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,

Act 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

இயேசு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அப்போஸ்தலராகிய நாங்களும் சாட்சிகள் என்பதையும் பேதுரு தெளிவுபடுத்தினார்.

Act 2:32 இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

பேதுரு இன்னும் அவர்களுக்கு என்ன பிரசங்கித்தார் என்பதை கர்த்தருக்கு சித்தமானால் கற்றுக்  கொள்ளுவோம்

ADD YOUR COMMENT

Powered By Indic IME