தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே இருக்கிற ஒருவன் இரட்சிக்கப்படக் கூடுமா?
நம்பிக்கையினால் இரட்சிக்கப்படுகிறோம்.
நம்பிக்கைக்கு எதிர் சொல் அவநம்பிக்கை.
நாம் ஒரு போதும் அவநம்பிக்கையுடையவர்களாகவோ அல்லது நம்பிக்கை இழந்தவர்களாகவோ இருக்கக்கூடாது.
தேவன் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை உறுதியாக பற்றிப்பிடித்து கொண்டு இருக்க வேண்டும்.
நம்பிக்கைக்கு எதிர்சொல் அவ நம்பிக்கை.
ரோமர் 8:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே தேவன் நித்திய ஜீவனைப் பற்றி வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
தீத்து 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,
- நித்திய ஜீவனைப்பற்றி வாக்குத்தத்தம் இல்லாமல் இருந்தால் மனிதன் நம்பிக்கையற்றவனாக இருந்து இருப்பான்.
- நமக்கு நம்பிகையை ஏற்படுத்துவதே நித்திய ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தங்கள் தான்.
தேவனுடைய கிருபை நம்மை நீதிமான்களாக்கினதினால் நாம் நித்திய ஜீவனை சுதந்தரிக்கிறோம்.
தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3:6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
தீத்து 3:7 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
- இரட்சிக்கப்படாமல் எந்தமனிதனும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளமுடியாது.
- தேவன் இரட்சிக்கப்பட்ட நீதிமான்களுக்காக தான் நித்திய ஜீவனைப் பற்றிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்.
பவுலின் ஜீவியத்தில் அநேக தரம் அவருடைய பூமிக்குரிய ஜீவனில் பிழைத்திருப்போம் என்கிற நம்பிக்கையற்று போனார்.
2கொரிந்தியர் 1:8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
2கொரிந்தியர் 1:9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
2கொரிந்தியர் 1:10 அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
- பூமிக்குரிய ஜீவன் நமக்கு எந்த நம்பிக்கையை தந்துவிடப் போகிறது. அது நமக்கு எந்த நம்பிக்கையையும் தந்துவிடப் போவது இல்லை.
- ஏனென்றால் எல்லாருக்கும் மரணம் நிச்சயக்கப்பட்டு இருக்கிறது.
பவுல் மரிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கையினால் நிறைந்திருந்தார்.
பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3:12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3:13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
- ஓட்டத்தை முடிக்கும் எல்லையை அடைகிறவரையில் பவுல் நம்பிக்கையை இழக்கவில்லை.
- கிறிஸ்துவைப் போல பூரணமாகும்வரை பவுல் நம்பிக்கையை இழக்கவில்லை.
பவுல் அவருடைய ஜீவியத்தின் முடிவில் தான் ஓட்டத்தில் ஜெயித்ததாக அவர் அறிக்கை செய்தார்.
2தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
2தீமோத்தேயு 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
இப்பொழுது நித்திய ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தம் அவருடையதாக இருக்கிறது.
வாக்குத்தத்தை சுதந்தரித்தவர்களை பவுல் பின்பற்றினார்.
எபிரெயர் 6:11 நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
எபிரெயர் 6:12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
- பவுல் எல்லா சோதனைகளையும் விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் நிச்சயம் சகித்திருக்க வேண்டும்.
சுவிசேஷத்தின் சத்தியத்தைப் பற்றி அப்போஸ்தலர்கள் அவநம்பிக்கையுள்ளவர்களானார்கள்.
மத்தேயு 19:24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 19:25 அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
மத்தேயு 19:26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
- இந்த சோதனையை சகிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் விசுவாசம் பிதாவின் மீது இருந்தது.
- ஐசுவர்யத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்காமல் பிதாவினிடத்தில் விசுவாசம் வைக்கும் போது இந்த சோதனையை நாம் ஜெயிக்க முடியும்.
இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனுக்கான பாதையில் அநேக சோதனைகளை அவர் சகிக்க வேண்டியதாக இருந்தது.
எபிரெயர் 5:7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
இயேசு கிறிஸ்து அநேக தரம் மனிதர்களின் அவிசுவாசத்தை சகித்தார்.
யோவான் 6:59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
யோவான் 6:60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
யோவான் 6:61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
யோவான் 6:62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
யோவான் 6:64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
யோவான் 6:65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
யோவான் 6:66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
யோவான் 6:67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
- யார் பின்பற்றுகிறார்கள் யார் பின்பற்றாமல் போகிறார்கள் என்பது காரியம் அல்ல இயேசு கிறிஸ்து பிதாவை சேவித்தார்.
- அதே வழியில் நித்திய ஜீவனை பற்றிய நம்பிக்கையில் நாம் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ள கூடாது.
இயேசு என்ன செய்தார் என்பதை நாம் கவனிக்கும் போது நமது நம்பிக்கை பலப்படும்.
எபிரெயர் 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரெயர் 12:3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
- இயேசு எவ்விதமாக அநேக கள்ள போதகர்களுடைய வழிகளை எப்படி மேற்கொண்டார் ஜெயித்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- நாம் கர்த்தருடைய பந்தியை எடுக்கும் போது இதுதான் நாம் செய்ய வேண்டி உள்ளது.
- தேவன் இயேசுவினிடத்தில் அன்பு கூர்ந்தார். ஆனால் அவரிடத்தில் மாத்திரம் அல்ல யார் சோதனைகளை சகித்து மேற்கொள்ளுகிறார்களோ அவர்களிடத்திலும் அவர் அன்பு கூறுகிறார். அவர்களுக்கு நித்தியத்திலும் பலனைக் கொடுப்பார்.
தேவன் எவ்வளவு அதிகமாய் தன்னுடைய சிருஷ்டிகளை அன்பு கூறுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
2பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
- எந்த ஒரு ஆத்துமாவும் நித்திய ஜீவனை சுதந்தரிக்க கூடாது என்று அவர் விரும்புகிறதில்லை.
தன்னுடைய சிருஷ்டிகள் செய்கிற எல்லாவற்றையும் தேவன் மெய்யாகவே கவனம் செலுத்துகிறார்.
எபிரெயர் 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
தேவன் தாம் சிருஷ்டித்த எல்லா ஜனங்களையும் அன்பு கூறுகிறார்.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
- தேவன் அவர்களுடைய கீழ்ப்படியாமையின் நிமித்தம் அவர் கோபப்படுகிறார். ஆனால் தொடர்ந்து அவர்களை அன்பு கூறுகிறார்.
- நாம் நம்மை அன்பு கூறுவது போது பிறனையும் அன்பு கூறு வேண்டும் என்று அவர் நமக்கு கட்டளையிட்டுள்ளார்.
தேவன் நமது சத்துருக்களை அன்புகூறுகிறார் மற்றும் நாமும் அவர்களை அன்பு கூறு வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
மத்தேயு 5:43 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
மத்தேயு 5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
தேவன் ஒரு புஸ்தகத்தில் எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறார்.
பிரசங்கி 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
பிரசங்கி 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
சம்பவிக்கிற எல்லாவற்றையும் மெய்யாகவே பதிவு செய்ய போதுமான கவனம் உள்ளவராக இருக்கிறார்.
வெளி 20:11 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
தேவன் தன்னுடைய சத்துருக்களையும் கூட அன்பு கூறுகிறார்.
1கொரிந்தியர் 4:5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
- தேவன் தன்னுடைய சத்துருக்கள் செய்கிற மற்றும் யோசிக்கிற நினைவுகள் எல்லாவற்றையும் கூட பதிவு செய்கிறார்.
- தம்மை அன்பு கூற தெரிந்தெடுப்பதில் தேவன் ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகளை தருகிறார்.
எல்லா புருஷர் மற்றும் ஸ்திரீகளுக்கும் தேவன் தம்மை மெய்பொருளில் வெளிப்படுத்துகிறார்.
ரோமர் 1:19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
- தேவனைத் தெரிந்து கொள்ளாமல் போக மனிதனுக்கு எந்த சாக்கு போக்கு இல்லை. ஏனென்றால் தேவனைப் பற்றிய அறியப்படுவது அவர்களுக்கு தேவனே வெளிப்படுத்தி இருக்கிறார்.
- தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதும் அவர் சர்வவல்லமையுள்ளவர் என்பதையும் அவருடைய தன்மைகளையும் அவருடைய சிருஷ்டிப்பு மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேவன் தன்னுடைய சத்துருக்களை பாவத்திற்கு ஒப்புக் கொடுத்துள்ளார்.
ரோமர் 1:24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
ரோமர் 1:26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
ரோமர் 1:27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
ரோமர் 1:28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
- தேவன் ஏன் அவர்களை பாவத்திற்கு ஒப்புக் கொடுத்து இருக்கிறார் என்றால் அவர்கள் தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை.
- பாவம் என்பது அடையாளமாக இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள்
- தேவன் பிரியமாய் இல்லை என்கிறது பாவத்தின் அடையாளமாய் இருக்கிறது.
தன்னுடய சத்துருக்கள் அழிந்து போவது அவருடைய சித்தமாக இருக்கிறதில்லை.
சங்கீதம் 14:2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 14:3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
யார் ஒருவர் கர்த்தரிடமாய் திரும்புகிறார்களோ அவர்களின் இருதயத்தின் மேல் உள்ள முக்காட்டை அவர் எடுத்து போடுகிறார்.
2கொரிந்தியர் 3:16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.
நியாயத்தீர்ப்பு நாள் வரும் போது வாய்கள் யாவும் அடைக்கப்படும்.
ரோமர் 3:19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் வித்தியாசமான கிரியை செய்கிறார்.
ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
நாம் தேவனுடைய பிரமாணங்களை எந்த சூழ்நிலையிலும் கைக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
ரோமர் 8:31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
ரோமர் 8:32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
ரோமர் 8:33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ரோமர் 8:34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
ரோமர் 8:35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
ரோமர் 8:37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
தேவன் தன்னுடைய எல்லா பிள்ளைகளிடத்திலும் நேர்மையாக கிரியை நடப்பிக்கிறார்.
பிலிப்பியர் 2:13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
தேவன் உண்மையுள்ள ஒரு பிள்ளையை கூட மறந்து விடமாட்டார்.
எபிரெயர் 12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
எபிரெயர் 12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
எபிரெயர் 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
எபிரெயர் 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
பிலிப்பியர்களிடம் தேவன் தன்னுடைய கிரியைகளை செய்து முடிப்பார் என்பதை பவுல் அறிந்திருந்தார்.
பிலிப்பியர் 1:5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
தேவன் தன்னுடைய எல்லா பிள்ளைகளும் அவருடைய கிருபையில் வளர வேண்டும் என்று விரும்புகிறார்.
2பேதுரு 3:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
சிலர் தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டினார்கள்.
நியாயாதிபதிகள் 1:4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
யார் தேவனுடைய கிருபையை பெறுகிறார்களோ அவர்கள் நித்திய ஜீவனை அடைவார்கள்.
ரோமர் 5:17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
கேள்வி இது தான் தேவனுடைய கிருபையை பெறுவது எப்படி?
சிலர் நினைக்கிறார்கள் நாம் செய்கிற எல்லாம் நம்முடைய கைக்கு உட்பட்டது அல்ல அதற்காக கேட்க வேண்டும்.
ஏற்றுக் கொள்ளப்படாத கள்ள கிருபையும் கூட இருக்கிறது.
1பேதுரு 5:12 உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
பவுல் தேவனுடைய கிருபையை பெற்றிருந்தார் அவர் அதை எப்படி பெற்றுக் கொண்டார்?
1கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
நாம் தேவனுடைய கிருபையினால் தீர்ப்பு செய்யப்படுவோம் ஆனால் அதை நாம் எப்படி பெற முடியும்?
தீத்து 3:6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
தீத்து 3:7 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
ஐஸ்வர்யமுள்ள வாலிபன் நித்திய ஜீவனைப் பற்றி கேள்விப்பட்டு அதை அடைய விரும்பினான்
மத்தேயு 19:16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
அவன் துக்கமாய் திரும்பி போனான் அவன் அந்த தகுதியுள்ளவனாய் இருக்க விரும்பவில்லை.
பரிசேயர்கள் தங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் வேத வாக்கியத்திற்கு செவி கொடுக்காமல் இருந்தார்கள்.
யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
- இயேசு கிறிஸ்து நமக்கு என்ன சொன்னாரோ அவற்றை நாம் செய்ய வேண்டும். கிறிஸ்துவும் அதை தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
தேவனுடைய கிருபையில் நாம் வளர அவர் நமக்கு அநேக வழிகளை காண்பித்துள்ளார்.
1பேதுரு 5:5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
- மந்தையானது அவருடைய கிருபையை கேட்கும்படி வேத வாக்கியத்தில் இல்லை.
- வேத வாக்கியங்களில் தேவனுடைய கிருபையை பெற்றுக் கொள்ளும் சில குறிப்பிட்ட வழிகள் மாத்திரமே இருக்கிறது.
தேவனுடைய கிருபை முதல் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அதை எப்படி பெற முடியும் என்று அவர் சொல்லுகிறார்.
ஆதியாகமம் 6:8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
- நாம் உற்பத்தி செய்கிற ஏதோ ஒன்றாக தேவனுடைய கிருபை இருக்கிறதில்லை.
தேவனுடைய கிருபை உலகத்தில் உள்ள எல்லா மனிதர் மேலும் பிரசன்னமாகி உள்ளது.
தீத்து 2:11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
தீத்து 2:12 நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
- யார் கேட்கிறார்களோ அவர் எப்படி ஜீவிக்க வேண்டும் என்பதை தேவனுடைய கிருபை போதிக்கிறது என்பதை கவனியுங்கள்.
- எபிரெய மற்றும் கிரேக்கில் ஒரே வார்த்தையிலிருந்து கிருபை மற்றும் தயவு வருகிறது.
- தேவனுக்கு என்றால் கிருபை என்றும் மனிதனுக்கு என்றால் தயவு என்றும் மொழிப்பெயர்ப்பாளர்கள் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.
தேவனுடைய ஞானத்தில் வளரும் போது அவருடைய கிருபையில் வளருகிறோம்.
நீதிமொழிகள் 8:35 என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
இயேசு ஞானத்தில் மற்றும் தேவனுடைய கிருபையில் வளர்ந்தார்.
லூக்கா 2:52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
நாம் இரக்கத்தை கற்றுக் கொண்டால் நாம் தேவனுடைய கிருபையில் வளருவோம்.
நீதிமொழிகள் 3:3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
நீதிமொழிகள் 3:4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
நாம் தேவனை உண்மை தேடினால் நாம் தேவனுடைய கிருபையில் வளருவோம்.
நீதிமொழிகள் 11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
நாம் நல்லவர்களாக வளர்ந்தால் நாம் தேவனுடைய கிருபையிலும் வளருவோம்.
நீதிமொழிகள் 12:2 நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
நாம் புரிந்து கொள்ளுதலில் வளரும் போது நாம் தேவனுடைய கிருபையில் வளருகிறோம்.
நீதிமொழிகள் 13:15 நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
- இங்கே தயை என்பது கிருபையாக இருக்கிறது.
நன்மை செய்யும்படி நாம் பாடுகளை பொறுமையோடு சகித்தால் நாம் தேவனுடைய கிருபையில் வளருவோம்.
1பேதுரு 2:18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
1பேதுரு 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
1பேதுரு 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1பேதுரு 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
- தேவன் மேல் பற்றுதலாய் இருக்கிற மனச்சாட்சியின் நிமித்தம் பாடுபட்டு உபத்திரவங்களை பொறுமையாய் சகித்தால் கிருபையை பெற்றுக் கொள்ள முடியும்.
- நன்மை செய்து பாடும்படும் போது பொறுமையோடே சகித்தால் நாம் கிருபையை பெற்றுக் கொள்ள முடியும்.
- நாம் கிறிஸ்துவின் அடிசுவடிகளின்படி நடக்கும் போது நாம் கிருபைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
- தேவன் தம்முடைய பிள்ளைகளை அன்பு கூறுகிறார் மற்றும் அவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்பட்ட வேண்டும் என்றும் விரும்புகிறார்.
அவர் நித்திய ஜீவனை அளிப்பேன் என்று தமக்கு கீழ்ப்படிகிற யாவருக்கும் வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.