இன்றைக்கு அநேகர் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்து கொள்ளுகிறார்களே அது சரியா?
இன்றைக்கு அநேகர் தங்களுடைய பெயருக்கு முன்பதாகவோ அல்லது பின்பதாகவோ அப்போஸ்தலர்கள் என்று எழுதிக் கொள்ளுவதையும் அழைத்துக் கொள்ளுவதையும் பெருமையாக எண்ணுகிறார்கள்.
ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களை போல பாடுபடுவதற்கு யாரும் விரும்புவதில்லை எல்லாரும் சுகபோக அப்போஸ்தலர்களாக தான் இருக்க விரும்புகிறார்கள்.
இந்த அப்போஸ்தலர்களுடைய பட்டங்களை கொடுப்பதற்கு நிறைய பேர் எழும்பி இருக்கிறார்கள்.
யார் மெய்யான அப்போஸ்தலர்கள்?
இந்த அப்போஸ்தலன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் அனுப்பப்பட்டவன் என்று பொருள்.
அப்போஸ்தலனுக்குரிய தகுதிகளை தேவன் கொடுத்து இருக்கிறார்.
அப்போஸ்தலர் 1:21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
அப்போஸ்தலர் 1:22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
- இயேசு கிறிஸ்து யோவான் ஸநானகனிடம் ஞானஸ்நானம் பெற்ற நாள் முதல் அவர் உயிரோடு எழுந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் இந்த பூமியில் அவரோடு சஞ்சரித்து இருந்து இருக்க வேண்டும். இது தான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கக்கூடிய தகுதிகள.
- இன்றைக்கு எத்தனை பேர்களிடம் இந்த தகுதிகள் இருக்கிறது.
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களை தெரிந்து எடுக்கும் போது இராமுழுவதும் பிதாவினிடத்தில் ஜெபித்து தான் தெரிந்து எடுத்தார்.
லூக்கா 6:12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக்கா 6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
லூக்கா 6:14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு,
லூக்கா 6:15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
Lukலூக்கா 6:16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
இந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களை இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்தவர் பிதாவாகிய தேவன் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
யோவான் 17:12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
- பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் தேவன் உலகத்திலிருந்து தெரிந்தெடுந்து கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார்.
- அந்த பனிரெண்டு பேரையும் இயேசு கிறிஸ்து காத்துக் கொண்டு வந்தார்.
- யூதாஸ்காரியோத் மாத்திரம் கெட்டுப் போனார்.
அப்போஸ்தலனாகிய யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக இன்னொருவரை அப்போஸ்தலர்கள் சீட்டு போட்டு தெரிந்து எடுத்தார்கள்.
அப்போஸ்தலர் 1:24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,
அப்போஸ்தலர் 1:25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
அப்போஸ்தலர் 1:26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவினால் நேரடியாக தெரிந்து கொள்ளப்பட்டவராய் இருந்தார்.
கலாத்தியர் 1:1 மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசு கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
1கொரிந்தியர் 1:1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
- அப்போஸ்தலனாகிய பவுல் மனுஷரால் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலன் அல்ல.
- அவர் தேவனாலும் இயேசு கிறிஸ்துவினாலும் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலனாக இருக்கிறார்.
கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யும் படியாக அனுப்பப்பட்டவன் என்ற அர்த்தத்தில் பர்னபா என்கிற அப்போஸ்தலன் இருக்கிறார் இவரை அப்போஸ்தலன் என்று தான் வேத வசனம் அழைக்கிறது.
அப்போஸ்தலர் 14:14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:
நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலன் இருக்கிறார். அவர் தான் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து. தேவன் அவரை அப்போஸ்தலன் என்று தான் குறிப்பிடுகிறார்.
எபிரெயர் 3:1 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
இயேசு கிறிஸ்துவின் சகோதரனாகிய யாக்கோபு அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்.
கலாத்தியர் 1:19 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
- புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவோடு சேர்த்து சுமார் பதினேழு அப்போஸ்தலர்கள் தான் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாரும் பரலோகத்தின் பிதாவினால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அதற்கு பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட வேத வாக்கியங்களே சாட்சியாக இருக்கிறது.
தேவன் சபையிலே முதலாவதாக அப்போஸ்தலர்களை தெரிந்தெடுத்தாலும் அவர்கள் சிலரைத் தான் தெரிந்தெடுத்து ஏற்படுத்தினார்.
கொரிந்தியர் 12:28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், ,,,, ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், ,,,, ஏற்படுத்தினார்.
யூதர்களுக்கு அப்போஸ்தலனாய் இருக்கும்படியாக பேதுருவையும், புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாய் இருக்கும்படியாக பவுலையும் தேவன் பலப்படுத்தி இருந்தார்.
கலாத்தியர் 2:7 அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,
அப்போஸ்தலனாகிய பவுல் பூமிக்குரிய நாட்களில் இயேசு கிறிஸ்துவோடு ஊழிய நாட்களில் இல்லாமல் போனாலும் மகா பிரதான அப்போஸ்தலர்களிலும் ஒன்றிலும் குறைவுள்ளவர் அல்ல.
2கொரிந்தியர் 11:5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
அப்போஸ்தலர்களுக்குரிய அடையாளங்கள் என்ன?
2கொரிந்தியர் 12:11 ,,,, நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
2கொரிந்தியர் 12:12 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
அப்போஸ்தலர் 2:43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
- அப்போஸ்தலர்களிடத்தில் எல்லாவிதமான பொறுமையும், அதிசயசங்களும், அற்புதங்களும், வல்லமைகளும் இருக்கும்.
அப்போஸ்தலர்கள் செய்யக்கூடிய அற்புதங்கள் எல்லாம் மனுஷனுஷருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதங்களாக தான் இருக்கும்.
அப்போஸ்தலர் 4:16 இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவை தரிசித்து இருப்பார்கள்.
1கொரிந்தியர் 15:7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
1கொரிந்தியர் 9:1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா?,,,,,
அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பலமாய் சாட்சிக் கொடுத்தார்கள்.
அப்போஸ்தலர் 4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
ஆனால், இன்றைக்கு அப்போஸ்தலர்களுக்குரிய எந்தவொரு தகுதிகளுமே இல்லாமல் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்துக் கொள்ளும் நபர்களை குறித்து என்ன?
2கொரிந்தியர் 11:13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
2கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
2கொரிந்தியர் 11:15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
எபேசு சபையார் செய்ததை போல அப்போஸ்தலர்கள் அல்லாதவர்களை சோதித்து பொய்யரென்று கண்டறிந்தார்கள்
வெளி 2:2 ,,,,, அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
இன்றைக்கு நாம் எப்படி நம்மை அழைத்துக் கொள்ள வேண்டும்.
மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
மத்தேயு 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
மத்தேயு 23:11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
மத்தேயு 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
- இன்றைக்கு நாம் எல்லாரும் சகோதர சகோதரிகளாக தான் இருக்க வேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார் .
எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள், அப்போது தான் நாம் குற்றமற்றவர்களாய் இருக்க முடியும்.
1தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
1தெசலோனிக்கேயர் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
1தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.