வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் செய்ததினால் அவர்களுக்கு பாவமுண்டு

வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் செய்ததினால் அவர்களுக்கு பாவமுண்டு.

If I had not done among them the works which no one else did, they would have no sin. (John 15:24)

John 3:2; John 5:36; John 7:31; John 9:32,37; John 11:37-40; John 12:10,37-40; Matthew 9:33; Matthew 11:5; Matthew 11:20-24; Act 10:38.

வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். (யோவான் 15:24)

யோவான் 3:2; யோவான் 5:36; யோவான் 7:31; யோவான் 9:32,37; யோவான் 11:37-40; யோவான் 12:10,37-40; மத்தேயு 9:33; மத்தேயு 11:5,20-24; அப்போஸ்தலர் 10:38.

யாரும் செய்யாத கிரியை:

நமது கையில் உள்ள விவிலியம் உலகத்தில் உள்ள பல கலாச்சாரங்களின், மதங்களின் கலவையல்ல. அது தேவனால் உருவாக்கப்பட்ட ஜனத்தோடு மட்டுமே பின்னி பிணைந்து தனித்துவமுள்ளதான பொக்கிஷம். கர்த்தராகிய இயேசுவும் எந்த இனத்திலும், மதத்திலும், மூலங்களிலும் வெளிப்படுத்தபட்டவருமல்ல, குறிப்பிடப்பட்டவருமல்ல. தேவனுடைய குமாரனாக தேவனிடமிருந்து தேவனுடைய ஜனங்களண்டையில் வந்த தனித்துவ தேவகுமாரன். இயேசுவின் அற்புத கிரியைகளும் பிறரின் அற்புதங்களோடு ஒப்பிடப்படதக்கவைகளல்ல. தேவன் அவருக்கு கட்டளையிட்டதும், காண்பித்ததுமான அற்புத கிரியைகள். இந்த அற்புத கிரியைகள் உண்மையானவைகள், தனித்துவமிக்கவைகள், தேவ மகிமையையும் தேவ செயல்களையும் வெளிப்படுத்துபவைகள், மனிதனின் மனதில் தோன்றாதவைகள், ஆச்சரியமானவைகள், ஆராயபடவியலாதவைகள். இன்னும் பல.

கர்த்தராகிய இயேசு செய்த அற்புத கிரியைகளை வேறு எவராவது செய்திருந்தால் யூதர்கள் இயேசுவை நம்பவேண்டியதில்லை. வேறு எவராலும் செய்ய இயலாத கிரியைகளை செய்திருந்தும் அவரை நம்பாது போனதினால் அவர்களுக்கு அது பாவமாகும். காணாதிருந்து நம்பாதிருப்பதை விடவும், அறியாதிருந்து நம்பாதிருப்பதை விடவும் கண்டும், அறிந்தும் நம்பாதிருப்பது பெரிய பாவமாகும்.

அறியாதிருந்து பாவம் செய்வதைவிடவும் அறிந்தே பாவம் செய்வது மிகப்பெரிய பாவமாகும்.

இஸ்ராயேலர்கள் பிதாவை காணவில்லை. என்றாலும் அவர்கள் அவரது கிரியைகளை கண்டு அவரை பின்பற்றினர். முழுமையாக அல்ல. இப்பொழுது பிதாவை காண்பிக்க இயேசுகிறிஸ்து வந்தாயிற்று. இயேசுவை கண்டவன் பிதாவை கண்டவனாகின்றான். இப்பொழுதும் அவரை நம்பவில்லையென்றால் அது அதிக பாவமாகும்.

நாம் அவரை அறிந்தும் விவிலியத்தை வாசித்து அறிந்தும் அவரை முழுமையாக பின்பற்றாதிருந்தால் அது பாவமாகும். வெளிப்பாடுகள் வந்தபின்பும் நம்பவில்லையென்றால் அதற்கான விலைக்கிரயம் தந்துதானாக வேண்டும்.

எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். அப்போஸ்தலர் 17:27-31.

ADD YOUR COMMENT

Powered By Indic IME