வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடந்தது.
Scripture should be fulfilled,Not one of His bones shall be broken. (John 19:36)
John 10:35; John 12:38; John 15:25; Exodus 12:46; Numbers 9:12; Psalms 22:14; Psalms 34:20; Psalms 35:10; Acts 13:27,29.
அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. (யோவான் 19:36)
யோவான் 10:35; யோவான் 12:38; யோவான் 15:25; யாத்திராகமம் 12:46; எண்ணாகமம் 9:12; சங்கீதம் 22:14; சங்கீதம் 34:20; சங்கீதம் 35:10; அப்போஸ்தலர் 13:27,29.
நிறைவேறிய வேதவாக்கியம்:
Scripture என்றச் சொல் எழுத்தேடுகள் என்று அழைக்கப்படுகின்றது. தேவன் எழுதி கொடுத்த எழுத்தேடுகள் என்றும், பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட எழுத்தேடுகள் என்றும் கூறப்படுகின்றது. இது மனித மூளையிலிருந்தோ, ரிஷிகளின் ஆழ்நிலை தியானங்களிலிருந்தோ உருவானதல்ல, வரலாற்றை உருவாக்கி இயக்கும் தேவன் வரலாற்றினூடே தோற்றுவிக்கப்பட்ட தமது அடியவர்கள் மூலமாக வெளிபடுத்தியவைகள். ஆகையினால் இவைகளில் பொய்யோ, புரட்டுகளோ காணப்படுவதில்லை. தேவன் நினைத்ததை வரலாற்றில் செயல்படுத்தினார். தேவன் வரலாற்றில் செயல்படுத்தியவைகளே விவிலியமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பிதாவின் கிரியைகளும், உபதேசங்களும் உண்மையானவைகளாக இருப்பதினால் அவரின் மகன் குறித்த காரியங்களையும் உண்மையானதாகவே பதிவேற்றியுள்ளார். தனது கிரியைகள் தொடரவும், தனது விருப்பப்படி செய்யவும் இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டார். ஆகையினால் அவரை குறித்தவைகள் தீர்க்கதரிசனங்களாக விவிலியத்தில் பதியப்பட்டுள்ளது. இவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறிக்கொண்டிருக்கின்றது. அவருடைய காலெலும்புகள் முறிக்கப்படுவதில்லை என்ற தீர்க்கதரிசனமானது அவரை பின்பற்றிய பின்னடியார்களுக்கும் பொருந்துகின்றது. அவரை பின்பற்றுகிறவர்களின் காலெலும்புகள் முறிக்கப்படுவதில்லை என்பதுமாகும்.
கிறிஸ்து சபை வரலாற்றில் அனேக தேவ மனிதர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள். இரத்தசாட்சிகளாக அறியபட்டுள்ளார்கள். அவர்களின் எலும்புகள் நொறுக்கப்பட்டுள்ளன. அக்கினிக்கு இரையாக்கப்பட்டன. அப்படியிருக்கும்போது இந்த வேதவாக்கியங்கள் அவரை பின்பற்றுகிறவர்கள் வாழ்வில் நிறைவேறியதா என்ற கேள்வி எழும்புகின்றது. இக்கேள்விக்கு அவரே பதிலாக இருக்கின்றார்.
சுவிசேஷத்தையும், நற்செய்தியையும் பிரசங்கிக்கும்படியாக விரைந்தோடும் கால்கள் முறிக்கப்படாதிருக்கும்படியாக, பாதங்கள் அழுக்காககப்படாதிருக்கும்படியாக தேவ மனிதர்கள் செம்மையாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. வாழ்க்கையில் தவறுதல்கள் உண்டானாலும் தேவ வார்த்தைகள் தவறுவதில்லை என்பதை உணர்வோம். சமாதானத்தை அறிவிக்கும் நம் கால்கள் பாவகண்ணிகளிலும், வேறு கண்ணிகளிலும் சிக்கிக்கொள்ளாதபடிக்கு அவர் காப்பார். நாமும் எச்சரிக்கையாக நடந்துக் கொள்வோமாக.
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். சங்கீதம் 8:4-8.
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா 52:7.
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். சங்கீதம் 91:9-13.