வேதவாக்கியங்கள்

என்னைக்குறித்து வேதவாக்கியங்கள் சாட்சிகொடுக்கின்றன.

in them you think you have eternal life; and these are they which testify of Me. (John 5:39b)
Jn5:46; Jn12:41; Lk16:29-31; Mt19:16-20; Mk12:24; Lk4:21; Act26:22,23; Ro1:4,5; 2Ti1:1; Ti1:3; 1Pt1:10,11; Deu18:15,18; Ps16:11; Ps21:4; Ps36:9; PsDan12:2,3.

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

யோவான் 5:46; யோவான் 12:41; லூக்கா 16:29-31; மத்தேயு 19:16-20; மாற்கு அப்போஸ்தலர் 12:24; லூக்கா 4:21; அப்போஸ்தலர் 26:22,23; ரோமர் 1:4,5; 2தீத்து 1:1; 2தீத்து 1:3; 1பேதுரு 1:10,11; உபாகமம் 18:15,18; சங்கீதம் 16:11; சங்கீதம் 21:4; சங்கீதம் 36:9; தானியேல் 12:2,3.

விவிலியத்தில் இயேசுவை தேடுவோம்:

இயேசுகிறிஸ்துவே ஜீவன் – நித்திய ஜீவன்.
நாம் ஜீவன் பெற விவிலியத்தில் இயேசுவை தேடவேண்டும், ஆராய்ந்து – பரிசோதித்து பார்க்க வேண்டும்.

விவிலியம் எழுத்துக்களால் ஆன ஒரு புத்தகம். ஆனால், அந்த எழுத்துக்களெல்லாம் தேவ ஆவியினால் உரைக்கபட்டுதான் எழுதப்பட்டது. ஒவ்வொரு எழுத்தும் உயிருள்ளவைகளே. அதனால் தான் ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.எழுத்து அழியுமென்றால் இயேசுவும் இல்லாமலாகி விடுவார். ஜீவனும் இல்லையென்றாகும். அது செத்த வார்த்தை என்றாகி விடும்.
எனவே எழுத்து அழியாதது. எழுத்து மாற்றப்படலாகாது. மொழி வடிவம், தொனி மாறலாம். ஆனால் எழுத்தின் உரு – உயிர் மாறுவதில்லை. இயேசுவும் மாறார். விவிலியத்தின் 66 நூல்களும் இயேசுவின் ஒவ்வொரு விஷயங்களையும் எடுத்துக் கூறுகின்றது. பிதா – குமாரன் – பரிசுத்த ஆவியை இணைத்து போதிப்பதே விவிலியம். பிதா – குமாரன் – பரிசுத்தா ஆவி என்பது திருத்துவம் அல்ல, தேவத்துவத்தின் பரிபூரணத்துவம் – தேவனின் குடும்ப அமைப்பு முறை. இதனை வேறு கோணங்களில் சிந்திக்கலாகாது.

விலியத்தின் இயேசு மட்டுமே நமது இரட்சகர்.

விவிவிலியத்தின் இயேசு இந்து மதத்தில் இல்லை. எனவே அங்கே ஜீவன் இல்லை.

இஸ்லாமியத்தில் திரித்து சொல்லப்பட்டுள்ளதால் அங்கும் ஜீவன் இல்லை. எனவே இங்கும் இயேசுவை தேடவேண்டாம்.

யூத சமயத்தின் குழந்தையே இயேசு. யூத சமயமே கிறிஸ்தவத்தின் தொட்டில். நமது பாரம்பரியங்கள், உபதேசங்கள், வியாக்கியானங்கள் யாவும் யூத சமயத்தோடு இணைந்தவைகள்.

ரோம சமயமோ, கிரேக்க சமயமோ, எகிப்திய, பாபிலோனிய, அசீரிய சமயங்களோடு இணைந்ததல்ல.

எனவே இயேசுவை விவிலியத்தில் தேடி வாசியுங்கள். உங்களுக்கு ஜீவன் கிடைக்கும்.
விவிலியத்தின் மாண்பை குலைப்பவர் எவராயினும் அதற்குரிய வாதையை பெற்றே தீருவர்.

கர்த்தாவே, விவிலியத்தின் கருவாக உம் மகனை எங்களுக்காய் உருவாக்கினீர். உமக்கு நன்றி. நாங்கள் ஜீவன் பெற்று உம்மண்டை – உம் அரசில் இணைந்து செயலாற்ற எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME