வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்.
You search the Scriptures, (John 5:39a)
Jn7:52; Mt22:29; Mk12:10,11; Act8:32-35; Act17:11; Ro3:2; Col3:16; 2Ti3:14-17; 2Pt1:19-21; Deu11:18-20; Deu17:18,19; Pr6:23; Pr8:33,34; Isa8:20; Isa34:16.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)
யோவான் 7:52; மத்தேயு 22:29; மாற்கு 12:10,11; அப்போஸ்தலர் 8:32-35; அப்போஸ்தலர் 17:11; ரோமர் 3:2; கொலோசெயர் 3:16; 2தீமோத்தேயு 3:14-17; 2பேதுரு 1:19-21; உபாகமம் 11:18-20; உபாகமம் 17:18,19; நீதிமொழிகள் 6:23; நீதிமொழிகள் 8:33,34; ஏசாயா 8:20; ஏசாயா 34:16.
விவிலிய ஆராய்ச்சி:
ஆராய்ந்து என்பதின் பொருள் தேடு, பரிசோதி, கண்டுபிடி என்று பொருளாகின்றது. இந்த வார்த்தையானது அடுத்து வருகிற பகுதியை குறிப்பிட்டுச்சொல்லுகின்றது. அதாவது விவிலியத்தில் இயேசுவை தேடவேண்டும் என்பதாகும்.
ஆனால் இலக்கிய மறுமலர்ச்சி யுகம் தோன்றியபின்பு விவிலியத்தை இலக்கியமாக பாவித்து பற்பலவிதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு விவிலியத்தின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ உலகிலே ஜெர்மானிய அதிமேதாவிகளின் ஆராய்ச்சிதான் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பலவிதமான தப்பறை உபதேசங்கள் உருவாவதற்கு இந்த ஆராய்ச்சிகளே காரணம்.
கிறிஸ்தவ பக்தியாளர்களில் பலர் யூத சமயத்தை குறை சொல்லுவதுண்டு. ஆனால் யூத சமயத்தில் இவ்விதமான ஆராய்ச்சியே செய்யப்படவில்லை. மாறாக, பெயர்த்தெழுதியும், சில விளக்கவியல் நூல்களை எழுதியும் விவிலியத்திற்கு மாண்பு சேர்த்தனர்.
விவிலியத்தை ஆராயுங்கள் என்று கூறினால் சில உண்மைகள் அதோடு இணைந்து நிற்பதை நாம் அறிய வேண்டும்.
நம்முன்னோர்கள்:
1. விவிலியத்தை பாராயணம் செய்து மகிழ்ந்தார்கள். முழு விவிலியத்தை மனப்பாடம் செய்தவர்களும் இருந்தனர்.
2. சத்தமிட்டு யாவரும் கேட்க வாசித்தவர்களும் உண்டு. கேட்டவர்கள் விசுவாசம் கொண்டனர்.
3. எழுதி வெளியிட்டவர்களும் உண்டு. வசனங்களை எழுதி விளங்க செய்தனர்.
4. விவிலியத்தை அச்சிட்டு வெளியிட்டவர்களும் இருந்தனர், இருக்கின்றனர்.
5. விவிலியத்தை தியானம் செய்து மகிழ்ந்தனர்.
6. விவிலியத்தை விரித்துரைத்து மகிழ்ந்தனர்.
7. விவிலியத்தை இனாமாக கொடுத்தும், விலைக்கு கொடுத்தும் மகிழ்ந்தனர்.
இலக்கிய ஆராய்ச்சி செய்தவர்கள் இடறிபோனார்கள்.
விவிலியத்தை நம்பினவர்களோ விசுவாசத்தில் நிலைத்துள்ளனர்.
நீங்கள் இவைகளில் எந்த முறையை பயன்படுத்துகிறீர்கள்?
கர்த்தாவே, உம்மை நம்பும்படியாகவே உம் வார்த்தைகளை அடியவர்கள் மூலம் தந்தீர். நாங்களோ அந்த வார்த்தைகளில் இலக்கணம் இருக்கிறதா, அது எந்த மூலத்திலிருந்து எடுத்தார் என்றெல்லாம் ஆராய்ந்து எங்கள் காலங்களையும், ஆயுளையும், உழைப்பையும் வீணாக்கி கிறிஸ்துவின் சபையை கள்ளர்களின் கூடாரமாக்கி விட்டோம். எங்களை மன்னியும். நாங்கள் உம் வார்த்தைகளை நம்பி அதை பின்தொடர்ந்து வாழ எங்களுக்கு உதவிடும்.