வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்

தியான பகுதி – யோவான்5:35-39.
தியான வசனம் – யோவான் 5:39.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

ஆராய்தல் என்பது பலவிதங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
– ஒன்றை ஆராயும்படியான ஆராய்ச்சி.
– ஒன்றை நம்பும்படியான ஆராய்ச்சி.
– மெய்ப்பித்து காட்டும்படியான ஆராய்ச்சி.
– சோதித்து பார்க்கும்படியான ஆராய்ச்சி.
– பக்திவளர்ச்சிக்கான ஆராய்ச்சி. இங்கே நாம் நமது பக்தி வளர்ச்சிக்காய் விவிலியத்தை ஆராய்ந்து பார்க்க பரிசுத்த ஆவியானவர் தூண்டுகிறார்.

விவிலியத்தை ஆராய்வதினால் கிடைக்கும் 7 நன்மைகள்:

1. விவிலியம் தேவ ஆவியினால் அருளப்பட்டுள்ளது. 2தீமோத்தேயு 3:16. ஆவியானவரால் கொடுக்கப்பட்டுள்ளதினால் அதில் ஆவியானவர் இணைந்துள்ளார்.
அவர் வசனங்களுடன் பேசுகிறார். அவரின் சத்தம் நாம் கேட்க வேண்டும். வசனத்தை கேட்டால் ஆவியானவர் நம்மில் வருவார். அப்போஸ்தலர் 10:44.

2. விவிலியத்தில் நித்திய ஜீவன் உண்டு. யோவான் 5:39.
எந்த படிப்பிலும் – நூலிலும் ஜீவன் இல்லை.
ஆனால் பணம் வரும் – அது செத்த வார்த்தை.
வசனம் ஜீவ வார்த்தை – அதில் ஜீவன் உண்டு.
ஜீவன் வந்ததென்றால் எல்லாம் கிடைக்கும்.
நன்மை உண்டாகும்.

3. விவிலியத்தில் வல்லமை உண்டு. மாற்கு 12:24.
வல்லமை என்பது டூனமிஸ் ஆகும். வார்த்தை வல்லமையுள்ள வார்த்தை.
– அற்புதங்கள் செய்யும் வல்லமை அதில் உண்டு.
– உருவாக்கும் வல்லமை உண்டு.
– ஆன்மீக ஆற்றல் உண்டு.
வார்த்தை கிரியை செய்கிறது. தூரத்திலும் கிரியை செய்யும், அருகிலும் கிரியை செய்யும்.

4. விவிலியம் கண்களை திறக்க செய்யும். லூக்கா 24:45.
– மாம்ச கண்கள் திறக்கப்பட்டு தெளிவு உண்டாகும்.
– மனக்கண்கள் திறக்கப்பட்டு தேவனை காணும், ரகசியங்களை அறிய முடியும். அப்போஸ்தலர் 16:14.

5. விவிலியம் இருதயத்தை கொழுந்துவிட்டு எரிய செய்யும். லூக்கா 24:32.
வசனம் வாசிக்க, தியானிக்க அனல் உண்டாகும். தெய்வ அபிஷேகம் – ஆவியின் நிறைவு உண்டாகும்.
அக்கினி மூண்டது. சங்கீதம் 39:3.
தலையில் தீபம் சுடர் விடும். யோபு 29:3.

6. விவிலியம் உங்களை நற்குணசாலிகளாக மாற்றும். அப்போஸ்தலர் 17:11. நற்குணம் இல்லாதவன் நற்குணசாலியாவான். நற்குணமுள்ளவன் மேலும் நற்குணசாலியாவான். ரூத் 3:10. விசாலத்தில் – ஒளிவு மறைவின்றி நடக்க முடியும். சங்கீதம் 119:45.
ஒழுக்கமுள்ளவன் யாரை கண்டும் பயப்படமாட்டான் – எல்லாரிடத்தும் சிநேகமுள்ளவனாயிருப்பான். ஒடுங்கியல்ல, மறைந்தல்ல வெளிப்படையாக வாழ்வர்.

7. விவிலியம் நிறைவேறுதலுக்காக காத்திருக்கிறது. மத்தேயு 5:18. மத்தேயு 24:35. வெளி 22:18,19.
அவர் சொன்னால் ஆகும்.
அது நிறைவேற்றும் ஏசாயா 55:11.

ஜெபம். கர்த்தாவே, உம் வசனங்களை கொண்டு எங்களை உயிரடைய செய்வதற்காகவும், ஆசீர்வதிப்பதற்காகவும் நன்றி. இந்த வார்த்தைகளை நாங்கள் சுமந்து திரியவும், மறவாமல் இருக்கவும் உதவி செய்யும். உம் வார்த்தைகளின் பெலத்தால் உம் ஆவியானவருக்கு கீழ்படிந்து வாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME