விடுதலை

விடுதலை

யோவான் 5:1-15.

இது மனிதனின் விருப்பம். எங்கே நாம் பாதிக்கபட்டுள்ளோமோ அங்கேதான் விடுதலை நமக்கு அவசியமாயுள்ளது.
இங்கே 38 வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் விடுதலையைத் தேடுகிறான்.
அங்கேதான் அதை பெற்றான்.

1. நம் அமைப்புகள் நமக்கு விடுதலை தராது.
அ. நாம் கிறிஸ்தவராய் இருப்பதினால் விடுதலை பெற்றிடவியலாது.
– பெரிய ஆலயத்தில் நீ தொழுவதினால் அல்ல.
– நீ நன்றாக ஜெபிப்பதினால் அல்ல.
– நீ காத்திருப்பதினால் அல்ல.
– நீ விவிலியம் வாசிப்பதினால் அல்ல.
– நீ நிறைய காணிக்கை கொடுப்பதினால் அல்ல.
ஆ. சில நன்மைகள் அவ்வப்போது பெறுகிறதினால் பரிபூரண விடுதலை கிடைத்துவிடும் என்று பொருளாகாது.
– தூதன் வருகிறதை காணுதல்.
– பிறர் நன்மையடைவதை காண்பதால்.
– நீயே உன் முயற்சியினால் சில நன்மைகளை பெறுகிறாய்.
– ஜெபத்திற்கு பதில் கிடைக்கிறது என்று நம்புகிறாய்.
இந்த காரியங்களெல்லாம் நமக்கு விடுதலையை தராது, ஆனால் இவைகள் நாம் விடுதலை பெறுவதற்கு வழிகாட்டுகிறவைகள்.

2. ஏன் இந்த பிரச்சனை?
அ. பலர் நன்மை பெற தன் முனைப்பு காட்டுகின்றனர்.
நானா ? நீயா? என்ற போட்டிகளும், பொறாமைகளும் உண்டாகின்றது.
ஆ. ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு முடியாதபடியான சந்தடிமிக்க சூழல்.
பிறர் நிலையை பார்க்க நேரமில்லை. Busy World.
இ. தாராளமான உதவி இல்லை.
மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகள் இல்லை.
முந்திக்கிறவன் மட்டுமே.
என்றோ ஒரு நாள் நடப்பது.

இந்த சூழலில் விடுதலை பெற என்ன வழி?
நாம் என்ன செய்யமுடியும்?
அன்பானவர்களே நாம் எதுவும் செய்ய முடியாது.
அவர்தான் செய்ய முடியும்.
அவர் என்ன செய்கிறார்?

3. விடுதலை பெறும் வழி:
அ. இயேசு உன்னிடத்தில் வர வேண்டும். 5,6.
பாடல்.. வாருமையா போதகரே என்று ஒருவர் பாடினார்.
அவர் ….
– வலிய வருவதுண்டு.
– கூப்பிட்டு வருவதுமுண்டு.
– கேள்விபட்டு வருவதுமுண்டு.
லூக்கா 24:29 ல் சீஷர்கள் இயேசுவிடம் எங்களோடு தங்கியிரும் என்றனர்.
யோவான் 20:19 ல் பூட்டிய வீட்டினுள் வந்தார்.

ஆ. அவர் உன்னிடத்தில் பேச வேண்டும். 6. பாடகன்.. பேசும் தெய்வம் நீர் என்று பாடுகிறார்.
– அவர் வலிய பேசுவார்.
– அன்போடு பேசுவார்.
– மனதுருக்கமாகவும் பேசுவார்.
லூக்கா 4:22 ல் கிருபையுள்ள வார்த்தைகளை பேசுகிறவர்.

இ. அவர் உனக்கு கட்டளை கொடுக்க வேண்டும். 8.
சாமுயேல் 1சாமுவேல் 3:9 ல் ஆண்டவரே நீர் பேசும், அடியேன் கேட்கிறேன் என்றார்.
– அவர் ஆலோசனை தருவார்.
– அவர் செய்ய சொல்லுவார்.
– அவர் வாக்குதத்தம் கூறுவார்.

அன்பானவர்களே இயேசு இன்று உன்னை சந்திக்க இடம் தருவாயா?

ஜெபம் . கர்த்தாவே, எங்கள் வழிகளில் நாங்கள் திருப்தியுடன் காணப்பட்டோம். ஆனால் அவைகள் உம்மை திருப்திபடுத்தவில்லை என்று அறிந்து கொண்டோம். நீர் எங்களிடமாய் வாரும். எங்களோடு பேசும். எங்களில் அற்புதங்களை நடப்பியும். நாங்கள் பூரண விடுதலை பெற்று உமக்கு உண்மையுள்ள சாட்சிகளாய் நிற்க உதவியருளும். ஆமென்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME