விசுவாசியாதோரில் தேவகோபம் நிலைநிற்கும்.
not believe the Son shall not see life, but the wrath of God abides on him. (John 3:36)
Jn3:15-18; Ro1:18; Ro4:15; Ro5:9; Gal3:10; Eph5:6; 1The1:10; 1The5:9; 2The1:7-10; Heb2:3,4; Heb6:6-8; Heb10:26-29; Re6:15-17; Ps2:12.
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
(யோவான் 3:36)
யோவான் 3:15-18; ரோமர் 1:18; ரோமர் 4:15; ரோமர் 5:9; கலாத்தியர் 3:10; எபேசியர் 5:6; 1தெசலோனிக்கேயர் 1:10; 1 தெசலோனிக்கேயர் 5:9; 2 தெசலோனிக்கேயர் 1:7-10; எபிரெயர் 2:3,4; எபிரெயர் 6:6-8; எபிரெயர் 10:26-29; வெளி6:15-17; சங்கீதம் 2:12.
தேவகோபம் – உண்மை:
1. இரட்சிக்கபட்டவர்களுக்கு நித்திய ஜீவனும், பரலோகமும் உண்டென்றால், இரட்சிக்கபடாதோருக்கு அழிவும், நரகமும் உண்டென்பதும் உண்மை.
2. தேவகோபம் என்பது தேவனுடைய அன்புக்கு எதிரிடையானதல்ல. அன்பு உள்ள இடத்தில் கோபம் உண்டு. அன்புக்குரியவர்களாயிருக்கும்போது அன்பும், எதிரிடையாக் செல்லும்போது கோபமும் வெளிப்படுவது உண்மை. அன்புள்ளவர் கோபமாயிருப்பது எப்படி? என்பவர்களே, நம் தேவன் நம் தகப்பனாக அறியபட்டுள்ளார். அவ்விதமாகவே அவரை பாருங்கள்.
3. தேவனின் கோபம் உண்டு. கிறிஸ்துவின் கோபம் உண்டு.
பரிசுத்த ஆவியின் கோபமும் உண்டு. இம்மூன்றும் விவிலியத்தில் காணப்படும் உண்மை.
4. கோபாக்கினையின் முடிவு நரகமே. தேவனுடைய கோபாக்கினையானது – தீர்க்கதரிசன எச்சரிப்பு – தண்டனை – மரணம் – பாதாளம் – நரகம் என்பதாகவே விவிலியத்தில் தரப்பட்டுள்ளது.
தேவகோபம் வெளிப்படும் நேரம்:
1. நாம் இரட்சிக்கபாடாதிருக்கும்போது.
2. நாம் நம் இரட்சிப்பில் நிலை நிற்காதிருக்கும்போது.
3. நாம் அவிசுவாசிகளோடு இணைந்து செல்லும்போது.
4. பாவமான துர்க்கிரியைகளை செய்யும்போது.
5. கர்த்தரின் வார்த்தைகளை புரட்டும்போது.
6. தேவமகிமையை எடுத்துகொள்ள துணியும்போது.
7. அவர் சொன்னதை சரியாக செய்யாதிருக்கும்போது.
8. அவர் நம்மை வைத்துள்ள இடத்தில் நிலைத்திராதிருக்கும்போது.
9. தேவனை தொழுதுகொள்ள வராதிருக்கும்போது.
10. சுவிசேஷத்தை அறிவியாமலிருக்கும்போது. இன்னும்பல
தேவகோபத்தினின்று தப்பித்துகொள்ள விரைவீர் அவரண்டை.
கர்த்தாவே, நாங்கள் உம் கோபாக்கினையின் புத்திரர்களாக இருந்தும் உம் மிகுந்த இரக்கத்தினால் உம் குமாரனை கொண்டு எங்களை மீட்டீர். எனவே, நாங்கள் எப்பொழுதும் உம் முன்பு பயபக்தியோடும், விவேகத்தோடும் நடந்துகொள்ள கிருபை தாரும்.