நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படி சொன்னேன்
because of the people who are standing by I said this,that they may believe that You sent Me. (John 11:42)
Jn11:31; Jn12:29,30; Jn11:45-50; Jn20:31; Jn10:36; Jn17:8,21,25; Mt12:22-24; Rom8:3; Gal4:4,5; 1Jn4:9,10.
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். (யோவான் 11:42)
யோவான் 11:31; யோவான் 12:29,30; யோவான் 11:45-50; யோவான் 20:31; யோவான் 10:36; யோவான் 17:8,21,25; மத்தேயு 12:22-24; ரோமர் 8:3; கலாத்தியர் 4:4,5; 1யோவான் 4:9,10.
விசுவாசிப்பதற்கானது:
இப்பகுதியை நாம் தியானிக்கும்போது இயேசு கிறிஸ்து பிதாவிடம் ஜெபித்த ஜெபமானது 5 உண்மைகளை நமக்கு கற்றுதருகின்றது. இந்த ஜெபமானது: 1. தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துகின்றது. 2. இயேசு தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றது. 3. தேவன் தன்னுடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்று காண்பிக்க. 4. இந்த கிரியை தேவனுடைய நடத்துதல் பிரகாரமாகவே நடக்கிறது என்று காண்பிக்க. 5. இயேசு கிறிஸ்துவை யாவரும் விசுவாசிக்க வேண்டும் என்று காண்பிக்கவே.
நாம் தேவனிடம் ஜெபிக்கும் நல்ல பழக்கங்கள் தேவனுக்கும் நமக்கும் உள்ள நல்ல ஆரோக்கியமான உறவுகளை வெளிப்படுத்தும். தேவனுடைய குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் பரவ ஆரம்பிக்கும். தேவனுடைய நாமமும், கிரியைகளும் நம்மை சூழ்ந்திருக்கிறவர்களிடத்தில் வெளிப்பட்டு அனேகர் கிறிஸ்துவை பின்பற்ற ஏதுவாகும். நமக்கும் தேவனுக்கும் தனிபட்ட உறவு இல்லாததினால்தான் சூழ்ந்திருக்கிறவர்களால் நெருக்கடிகளையும், வெறுப்புகளையும் சம்பாதிக்கின்றோம். நமது பெயரல்ல, நம்மில் தேவனுடைய பெயர் வெளிப்பட வேண்டும். மெய்யாகவே தேவன் இவர்களோடு இருக்கிறார் என்று புறத்தியார் அறிய வேண்டும். நம்மை சுற்றியிருக்கிறவர்களிடத்தில் பயத்தையும், பணிதலையும், விசுவாசத்தையும் கொண்டு வரவே நம்மை பயன்படுத்த விரும்புகிறார் தேவன். அப்போஸ்தலர் 5:11-14. தேவனால் பயங்கரம் உண்டானதினால் யாக்கோபின் வம்சத்தை ஒருவரும் பின்தொடரவில்லை. ஆதியாகமம் 35:5. நம்மை தனிபட்ட முறையில் தேவனுக்கு எந்த அளவுக்கு பலியாக படைக்கிறோமோ அந்த அளவுக்கு அவரின் பலத்த கிரியைகள் நம்மில் உண்டாகும்.
அவர்கள் நடந்துவந்து உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாாய 45:18.